செம ஏற்றத்தில் தங்கம் விலை.. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டமோ?

தங்கம் விலையானது இரண்டு வர்த்தக அமர்களாகவே தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகின்றது. இன்றளவிலும் உலகம் முழுக்க தங்கம் என்றாலே அது ஒரு கவர்ச்சிகரமான முதலீடாகத் தான் பார்க்கப்படுகிறது.

உலகத்தினையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வரும் உலக நாடுகள், தங்களது பாதுகாப்பினை காரணம் காட்டில் மீண்டும் தங்கத்தில் முதலீடுகளை குவிக்க ஆரம்பித்துள்ளனர். இது தங்கத்திற்கு ஆதரவாகவும் இருந்து வருகின்றது.

நாளுக்கு நாள் புதியதாய் உச்சம் தொட்டு வரும் கொரோனாவின் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சி காணுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இந்த மோசமான வைரஸ் காரணமாக, உலகளவில் ஒட்டுமொத்த தொழில் துறையும் முடங்கியுள்ளது. இதனால் தேவையும் குறைந்து வருகிறது. குறிப்பாக தொழில்துறை தேக்கத்தினால் முதலீட்டாளர்களின் பார்வை, பாதுக்காப்பு புகலிடமான தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. அதெல்லாம் சரி இன்றைய சர்வதேச மற்றும் இந்திய சந்தையில் விலை நிலவரம் என்ன வாருங்கள் பார்க்கலாம்.

comex சந்தையில் தங்கம் விலை

comex சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலை 11.65 டாலர்கள் அதிகரித்து, 1796.10 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய முடிவில் 1,785.15 டாலர்களாக முடிவடைந்த தங்கம் விலையானது, இன்று காலை தொடக்கத்திலேயே 1785.25 டாலராக தொடங்கியது. இது இன்னும் ஏற்ற காணும் விதமாக காணப்படுகிறது.

MCX தங்கம் விலை

MCX தங்கம் விலை

இரண்டாவது நாளாக இன்று தங்கம் விலையானது தொடர்ச்சியாக மீண்டும் ஏற்றம் கண்டு வருகின்றது. இது இன்னும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 205 ரூபாய் அதிகரித்து, 47,205 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. நேற்றைய முடிவு விலையானது 47,000 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலையில் 47,072 ரூபாயாக சற்று அதிகரித்து தான் தொடங்கியது.தினசரி கேண்டில் பேட்டர்னில் இன்னும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் இன்று கிலோவுக்கு 806 ரூபாய் அதிகரித்து, 70,425 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட சற்று மேலாகத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் நீண்டகால நோக்கில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்று அதிகரித்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது 35 ரூபாய் அதிகரித்து, 4,450 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து, 35,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக இந்த வாரத்தில் ஒரு நாள் மட்டும் சற்று குறைந்திருந்த நிலையில் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது.

24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் ( 24 கேரட் ) தங்கத்தின் விலையானது 33 ரூபாய் அதிகரித்து, 4,849 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 264 ரூபாய் அதிகரித்து 38,792 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டும் வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

வெள்ளி விலையினை பொறுத்தவரையில் நடப்பு வாரத்தில் ஒரு நாள் தவிர, மற்ற நாட்கள் தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகின்றது. இன்று கிராமுக்கு 20 பைசா அதிகரித்து, 74.20 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 74,200 ரூபாயாகவும் காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+