உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.8000க்கு மேல் சரிவு.. இது வாங்க சரியான நேரம் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பட்ஜெட் 2021 அறிவிப்பினை தொடர்ந்து, சர்வதேச காரணிகளும் தங்கத்திற்கு எதிராக இருந்த நிலையில், கடந்த இரண்டு வார காலமாகவே தங்கம் விலையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.

எனினும் கடந்த ஆகஸ்ட் மாத வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது, 8000 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. இது தங்கத்தினை வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் குறைந்த விலையானது தங்கம் விலையானது, முதலீட்டாளர்களை வாங்க தூண்டும். இது குறைந்த விலையில் வாங்க ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

அதோடு பட்ஜெட் 2021ல் இறக்குமதி வரியும் குறைந்துள்ளது. இதனால் இனி வரும் காலத்தில் பிசிகல் தங்கத்தின் தேவை அதிகரிக்கலாம் என்பதால், இது குறைந்த விலையை ஆதரிக்கும். ஆக இது தங்கத்தினை வாங்க சரியான நேரமாகவே பார்க்கப்படுகிறது.

தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு

தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு

கடந்த சில வாரங்களாக அவ்வப்போது ஏற்றத்தினை கண்டு வந்தாலும், ஒட்டுமொத்தத்தில் தங்கம் விலையானது சரிவில் தான் காணப்படுகிறது. அதிலும் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, தங்கம் விலையானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பார்க்கும் போது 8,000 ரூபாய்க்கு மேலே சரிவிலேயே காணப்படுகிறது. ஆக இது தங்கம் வாங்குபவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. அதோடு தினசரி கேண்டில் பேட்டரனில் தற்போது பையிங் திரும்ப ஆயத்தமாகிக் கொண்டுள்ளது. ஆக இது தங்கத்தினை வாங்க நல்ல வாய்ப்பு தான். ஏனெனில் குறைந்த விலையானது முதலீட்டாளர்களை வாங்க தூண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

என்னென்ன பார்க்கபோகிறோம்?

என்னென்ன பார்க்கபோகிறோம்?

இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? எவ்வளவு குறைந்திருக்கு அல்லது விலை கூடி இருக்கிறதா? தங்கத்திற்கு சாதக பாதகமான காரணிகள் என்னென்ன? இனி நீண்டகால நோக்கில் தங்கம் விலை எப்படி இருக்கும்? வரும் வாரத்தில் எப்படி இருக்கும்? நிபுணர்கள் என்ன கூறுகின்றனர், உள்ளிட்ட பலவற்றையும் பார்க்கவிருக்கிறோம்.

காமெக்ஸ் தங்கம் விலை பலத்த சரிவு

காமெக்ஸ் தங்கம் விலை பலத்த சரிவு

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த வாரத்தில் தொடர்ந்து சரிவினை கண்ட நிலையில், வார இறுதியில் ஏற்றத்தினை கண்டு முடிவடைந்தது. இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான நேற்றும் சற்று ஏற்றத்தினை கண்டது, இந்த நிலையில் தொடர்ச்சியாக மூன்றாவது வர்த்தக அமர்வாக இன்றும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 7.70 டாலர்கள் அதிகரித்து, 1842 டாலர்களாக காணப்படுகிறது. இந்த முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாக தொடங்கியிருந்தாலும், நேற்றைய உச்சத்தினை கடந்துள்ளது. இதனால் சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையினை போலவே, வெள்ளியின் விலையும் ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. இன்று சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையும் கடந்த மூன்று வர்த்தக அமர்வுகளாக ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், இன்றும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 0.21% ஏற்றம் கண்டு, 27.637 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது முந்தைய நாள் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாக தொடங்கியுள்ளது. எனினும் உச்சத்தினை விட அதிகரித்துள்ளது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் தங்கம் விலையானது இன்றும் ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. ஏப்ரல் மாத காண்டிரக்ட் விலையானது 10 கிராமுக்கு 218 ரூபாய் அதிகரித்து, 48,057 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று காலை தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. இது சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையானது, சர்வதேச சந்தையின் எதிரொலியாக மூன்றாவது நாளாக இன்றும் ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 276 ரூபாய் அதிகரித்து, 70,360 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் சற்று மேலாக தொடங்கியுள்ளது.

வரலாற்று உச்சத்தில் இருந்து ரூ.8,000 மேல் சரிவு

வரலாற்று உச்சத்தில் இருந்து ரூ.8,000 மேல் சரிவு

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தங்க, விலையானது 56,200 ரூபாயினை தொட்ட நிலையில், இன்றைய விலையுடன் ஒப்பிடும்போது சுமார் 8000 ரூபாய்க்கு மேல் ஏற்றம் கண்டுள்ளது. ஆக இது தங்கம் வாங்க ஒரு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. அதோடு வெள்ளியின் விலையும் உச்சத்தில் இருந்து பார்க்கும் 7,300 ரூபாய்க்கும் மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக இது தங்கம் வாங்க ஒரு நல்ல நேரமாகவே பார்க்கப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகிறது. இது தற்போது கிராமுக்கு 7 ரூபாய் அதகரித்து, 4,465 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்து, 35,720 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. எனினும் இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டிய நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 7,800 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் தற்போது கிராமுக்கு 8 ரூபாய் அதிகரித்து, 4,871 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 64 ரூபாய் அதிகரித்து, 38,968 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 47,710 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் பிசிகல் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், இந்த குறைந்த விலையானது தங்கத்தினை வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 73.60 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 736 ரூபாயாகவும், கிலோவுக்கு 73,600 ரூபாயாகவும் உள்ளது. வெள்ளியின் விலையும் தங்கத்தினை போலவே குறைந்து தான் காணப்படுகிறது. கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 7000 ரூபாய்க்கு மேல் குறைந்திருந்த நிலையில், இது வெள்ளியினை வாங்க சரியான இடமாகவும் பார்க்கப்படுகிறது.

அதிகரித்து வரும் கொரோனா தாக்கம்

அதிகரித்து வரும் கொரோனா தாக்கம்

சர்வதேச அளவில் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்றளவிலும் அதிகரித்து வரும் நிலையில், அது தங்கத்தின் விலைக்கு ஆதரவாக அமைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் ஏற்கனவே கொரோனாவினால் பொருளாதாரம் சரிவினைக் கண்டு வரும் நிலையில், இன்னும் நெருக்கடியான நிலைக்கு சென்றால் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது. இது தங்கத்திற்கு ஆதரவாகவும் செயல்படுகிறது.

அமெரிக்க ஊக்கதொகை பற்றிய எதிர்பார்ப்புகள்

அமெரிக்க ஊக்கதொகை பற்றிய எதிர்பார்ப்புகள்

அமெரிக்காவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தினை ஊக்குவிக்க, ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்புகள் பற்றிய பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது. ஆனால் இது குறித்து ஒரு நிச்சயமற்ற நிலையே இருப்பதால், பொருளாதாரம் என்னவாகுமோ? அடுத்து என்ன அறிவிப்புகள் வரும் என்று முதலீட்டாளர்கள் காத்துக் கொண்டுள்ளனர். இதனால் டாலரின் மதிப்பும் சரிவினை கண்டுள்ளது. இது தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.

முக்கிய சப்போர்ட் லெவல்கள்

முக்கிய சப்போர்ட் லெவல்கள்

தங்கத்தின் முக்கிய சப்போர்ட் விகிதமான 47,580 - 47,300 ரூபாயாக இருக்கும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவலாக 49,055 - 49,330 ரூபாயாக உள்ளது.

இதே வெள்ளியின் விலை முக்கிய சப்போர்ட் லெவல் 69,500 - 68,800 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் 70,700 - 71,500 ரூபாய் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், மீடியம் டெர்மிலும் தங்கம் விலையானது, சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. அதோடு வரலாற்று உச்சத்தில் இருந்தும் தங்கம் விலையானது குறைந்த விலையில் உள்ள நிலையில், இதுவும் முதலீட்டாளர்களுக்கு ஆதரவாகவே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices trade higher today, but Rs.8,000 above down from record high

Gold price update.. Gold prices trade higher today, but Rs.8,000 above down from record high
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X