தங்கம் விலையானது கடந்த சில நாட்களாகவே பெரியளவில் மாற்றமின்றி ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
ஏனெனில் இனி அதிகரிக்குமா? அல்லது மீண்டும் குறையுமா? அடுத்தது என்ன நடக்கும்? இனி விலை எப்படி இருக்கும் என பல கேள்விகள் எழுந்து வருகின்றன.
தங்கம் விலையானது வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 9,000 ரூபாய் சரிவில் தான் காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமா? முக்கிய காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.
மூன்று நாட்களாக ஏற்றம்
இந்த வாரத்தின் தொடக்கத்தில் தங்கம் விலையானது சரியத் தொடங்கியிருந்தாலும், கடந்த மூன்று தினங்களாகவே மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் ஃபண்டமெண்டல் காரணிகள் எப்படியுள்ளது. டெக்னிக்கலாக தங்கம் விலையானது எப்படியுள்ளது? அடுத்து என்ன செய்யலாம்? அதிலும் இன்று வார இறுதி வர்த்தக நாள் என்பதால், அடுத்து என்ன செய்யலாம் என்ற கேள்வியும் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது நல்ல வாய்ப்பு
தங்கம் விலையானது இன்று ஏற்றம் கண்டிருந்தாலும், இம்மாத தொடக்கத்தில் இருந்து 10 கிராமுக்கு 2,000 ரூபாய் சரிவில் தான் காணப்படுகிறது. அதோடு வரலாற்று உச்சத்தில் இருந்தும் 9,000 ரூபாய் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.
இன்று வெளியாகவிருக்கும் முக்கிய டேட்டாக்கள்
அமெரிக்காவின் வேலை வாய்ப்பு குறித்தான டேட்டா இன்று வெளியாகவிருக்கும் நிலையில், முதலீட்டாளர்கள் அதனை கவனித்துக் கொண்டுள்ளனர். இது தங்கம் விலையில் பெரியளவிலான மாற்றத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல பண்னை அல்லாத வேலை வாய்ப்பு குறித்தான டேட்டாவும் வெளியாகவுள்ளது. இது கடந்த மே மாதத்தினை காட்டிலும், ஜூன் மாதத்தில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடிப்படை இறக்குமதி வரி
தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரியை இந்திய அரசு குறைத்துள்ளது. இது மஞ்சள் உலோகத்தின் இறக்குமதி அதிகரிக்க வழிவகுக்கலாம். இதனால் தங்கம் விலைக்கு சற்று குறையலாம் என்றாலும், அதிகளவிலான தேவையும் விலையை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியாவினை பொறுத்தவரையில் லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதுவும் சந்தைக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
ரூபாய் சரிவு
தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், தங்கத்தின் விலையானது ஏற்றம் காணலாம் என்றே எதிர்பாக்கப்படுகிறது. ஏனெனில் இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது பணவீக்கத்திற்கு எதிராகவும், சிறந்த ஹெட்ஜிங் ஆகவும் பார்க்கப்படுகிறது.
டாலர் Vs தங்கம்
அமெரிக்கா டாலரின் மதிப்பானது 5 மாதத்தில் இல்லாத அளவு உச்சத்தினை எட்டியுள்ளது. அதே போல அமெரிக்காவின் 10 ஆண்டு பத்திர லாபம் 1.50% அதிகரித்து காணப்படுகிறது. ஆக இது தங்கம் விலை சரிய காரணமாக அமைந்துள்ளது. இது இனி வரும் நாட்களிலும் அதிக விலையேற்றத்தினை தடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சி
அமெரிக்காவின் பொருளாதாரம் குறித்த டேட்டாக்கள் சந்தைக்கு சாதகமாக வந்து கொண்டுள்ள நிலையில், இது பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளதையே காட்டுகின்றது. இதுவும் டாலரின் ஏற்றத்திற்கு முக்கிய பங்காக இருக்கலாம். இந்த நிலையில் இன்று வெளியாகவிருக்கும் டேட்டாக்கள் இன்னும் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், தற்போது சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 1.85 டாலர்கள் அதிகரித்து, 1778.65 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. முந்தைய அமர்வின் முடிவினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. இன்று வெளியாகவிருக்கும் அமெரிக்கா டேட்டாவினை பொறுத்து விலை இருக்கலாம் என்பதால், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம்.
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை
தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையும் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. தற்போது விலை அவுன்ஸூக்கு 0.12% குறைந்து, 26.133 டாலர்களாக காணப்படுகிறது. எனினும் இன்று மாலை அமர்வில் பெரியளவிலான மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலை, தற்போது 10 கிராமுக்கு 182 ரூபாய் அதிகரித்து, 47,221 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் உச்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் மாலை அமர்வில் பெரியளவிலான மாற்றம் காணலாம். ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையில் இன்று வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 294 ரூபாய் அதிகரித்து, 68,449 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. இதுவும் மீடியம் டெர்மில் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது, 22 ரூபாய் அதிகரித்து, 4,465 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 176 ரூபாய் அதிகரித்து, 35,720 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தூய தங்கம் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் ( 24 கேரட் ) தங்கத்தின் விலையானது 24 ரூபாய் அதிகரித்து, 4,871 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 192 ரூபாய் அதிகரித்து 38,968 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆபரண வெள்ளி விலை
ஆபரண வெள்ளி விலையினை பொறுத்த வரையில், இன்று கிராமுக்கு 20 பைசா குறைந்து, 73.90 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, 73,900 ரூபாயாகவும் காணப்படுகிறது. நேற்று சற்று அதிகரித்த நிலையில், இன்று மீண்டும் சற்று குறைந்துள்ளது. இது தங்கம் விலை அதிகரித்துள்ள போதிலும், வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.
தங்கத்தின் முக்கிய சப்போர்ட்
தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ள நிலையில், இந்திய சந்தையிலும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. தங்கம் விலையானது குறைந்தால், முக்கிய சப்போர்ட்டாக 46,820 - 46,600 ரூபாயாகவும், இதே அதிகரித்தால் முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவலாக 47,220 - 47,480 ரூபாயாகவும் இருக்கலாம்.
இதே வெள்ளியின் முக்கிய சப்போர்ட் லெவலாக 68,500 - 68,000 ரூபாயாகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவலாக 69,700 - 70,200 ரூபாயாகவும் இருக்கலாம்.
இன்று தங்கத்தினை வாங்கலாமா?
தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே இருந்தாலும், நீண்டகால நோக்கில் இன்று வரவிருக்கும் டேட்டாவினை பொறுத்து வாங்கலாம். இதே போல வெள்ளியின் விலையும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகத்தில் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது. ஏனெனில் இன்று வெளியாகவிருக்கும் டேட்டாவினை பொறுத்து சந்தை பெரியளவிலான மாற்றத்தினை காணலாம்..
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?



Click it and Unblock the Notifications