இன்றோடு இரண்டு நாட்களாகவே தங்கம் விலையானது நல்ல ஏற்றத்தினை கண்டு வருகிறது. போகிற போக்கினை பார்த்தால் நிபுணர்கள் சொன்னது மீண்டும் புதிய உச்சத்தினை தொட்டு விடும் போல் இருக்கிறது.
எனினும் முதலீட்டாளர்கள் மத்தியில் தற்போது பெரிய குழப்பமே ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தங்கத்திற்கு சாதகமான காரணிகள் எல்லாம் மாறிவிட்ட நிலையில், தங்கம் விலை குறைய ஏதுவான பல காரணிகள் தற்போது உள்ளன. சொல்லப்போனால் இந்த நேரத்தில் ஃபண்டமெண்டல் ரீதியாக பலரும் குறையும் என்றே எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
ஆனால் இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் ஏமாற்றமாக்கி, தங்கம் விலையானது மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. ஆக தற்போது வாங்கலாமா? இல்லை இங்கிருந்து குறையுமா? அடுத்து என்ன தான் செய்யலாம் என்பது தான் பலரின் கேள்வியாக உள்ளது.
என்னவெல்லாம் பார்க்கபோகிறோம்?
சரி இன்றைய சர்வதேச சந்தையில் தங்கம் விலை எவ்வளவு? இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் விலை எவ்வளவு? இனி விலை குறையுமா? இப்போது வாங்கலாமா? தங்கத்திற்கு சாதகமான காரணிகள் என்னென்ன? பாதகமாக காரணிகள் என்னென்ன? தற்போது நீண்டகால நோக்கில் வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம்? இப்படி நல்ல ஏற்றம் கண்டு வரும் நிலையில் வாங்கலாமா? நிபுணர்கள் என்ன சொல்கின்றனர், அடுத்த சப்போர்ட் அன்ட் ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் கடந்த வர்த்தக அமர்வில் தங்கம் விலையானது, காலை நேர வர்த்தகத்தில் சரிவதனை போல் சரிந்து, பின்னர் மாலை நேர வர்த்தகத்தில் கிடு கிடுவென ஏற்றத்தினை கண்டுள்ளது. இதற்கிடையில் இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை சற்று ஏற்றத்தில் உள்ளது. தங்கம் விலையானது தற்போது அவுன்ஸூக்கு 7.95 டாலர்கள் அதிகரித்து 1873.95 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் விலை நேற்றைய முடிவு விலையினை விட சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது.
சர்வதேச வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் கடந்த சில வர்த்தக தினங்களாக தடுமாற்றத்தில் இருந்து வந்த வெள்ளியின் விலை, இன்று சற்று ஏற்றத்தினை காணத் தொடங்கியுள்ளது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலை 0.17% அதிகரித்து, 24.837 டாலர்களாக காணப்படுகிறது. வெள்ளியின் விலையும் இரண்டாவது நாளாக பலத்த ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்
கடந்த சில வர்த்தக தினங்களாக சற்று ஏற்ற இறக்கத்தினைக் கண்டு வரும் தங்கம் விலையானது, இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 169 ரூபாய் அதிகரித்து, 50,122 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் கடந்த ஆகஸ்ட் 7 அன்று தொட்ட உச்சத்தில் இருந்து பார்க்கும் போது, 6078 ரூபாய் சரிவிலேயே காணப்படுகிறது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்
சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளி விலையானது கடந்த சில தினங்களாக ஏற்றத்தினை கண்டு வந்த நிலையில், இன்று கிலோவுக்கு 29 ரூபாய் குறைந்து, 65,481 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாத உச்சமான 77,700 ரூபாயாக அதிகரித்திருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது கிட்டதட்ட 12,219 ரூபாய் குறைவாகத் தான் உள்ளது. ஆக இது முதலீட்டாளர்களுக்கு வாங்கி வைக்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
தங்கம் வாங்க சரியான இடமா?
தற்போது பலரின் மனதிலும் எழுந்துள்ள ஒரே கேள்வி, தங்கத்தினை தற்போது வாங்கலாமா? என்பது தான். ஏனெனில் பல காரணிகள் தங்கத்திற்கு எதிராக உள்ள நிலையில் தற்போது வாங்கலாமா? ஆனால் நிபுணர்கள் மத்தியில் இது வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது வரலாற்று உச்சத்தில் இருந்து 6000 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக இது திருமண விழா பருவம் என்பதால் தேவை அதிகரிக்கும். இதன் காரணமாக விலை அதிகரிக்கலாம். ஆக தங்கத்தினை இது வாங்க சரியான இடம் தான் என்கின்றனர் நிபுணர்கள்.
இந்தியாவுக்கு தடுப்பூசி விரைவில் வரலாம்
கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டிருந்தாலும், இதுவரையில் இந்தியாவில் அறிவிக்கப்படவில்லை. எனினும் விரைவில் இந்தியாவுக்கும் வரலாம். இது பொருளாதாரத்திற்கு சாதகமாக அமையலாம். அப்போது தங்கம் விலை குறையலாம். ஆனால் அதுவரையில் சர்வதேச தங்கம் விலையானது குறைந்தாலும், இந்தியாவில் அதன் எதிரொலி முழுமையாக இருக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது வரும் காலத்தில் குறைய வாய்ப்பிருப்பதாக முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பப்படுகிறது.
ஊக்கத் தொகை பற்றிய செய்திகள்
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதார சரிவினை மீட்டெடுக்க, ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முன்னேற்றமான நிலையை முதலீட்டாளர்கள் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதனால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது. எனினும் இரண்டாவது நாளாக தொடர்ந்து நல்ல ஏற்றத்தினை கண்டு வருகின்றது. இதற்கிடையில் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா 380 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதி நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளார். இது தொற்று நோயினால் பாதிக்கபட்ட பொருளாதாரத்தினை மீட்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டாலரின் அழுத்தம்
தங்கத்திற்கான பல காரணிகள் எதிராக இருந்தாலும், தங்கம் விலையில் முக்கிய பங்கினை வகிக்கும் அமெரிக்க டாலரின் மதிப்பானது சற்று அழுத்தத்தில் உள்ளது. ஆக இதனால் தங்கம் விலையானது தொடர்ந்து இன்றும் ஏற்றத்தில் காணப்படுகிறது. இது தவிர பிரெக்ஸிட் ஒப்பந்தம் பற்றிய பலத்த எதிர்பார்ப்பும் தங்கம் விலையில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.
ஐரோப்பிய மத்திய வங்கி அறிவிப்பு பற்றிய எதிர்பார்ப்பு?
ஒரு வழியாக அமெரிக்காவின் ஊக்கத்தொகை எதிர்பார்க்கப்பட்டதை போல அறிவிப்புகள் வந்துள்ள நிலையில், ஜப்பானின் மத்திய வங்கியும் அறிவித்துள்ளது. இதற்கிடையில் இந்த வாரத்தில் ஐரோப்பிய மத்திய வங்கியில் ஊக்கத் தொகை குறித்தான அறிவிப்புகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகரிக்கும் கொரோனா பரவல்
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒரு புறம் தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டு இருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சில பகுதிகளில் இரண்டாம் கட்ட கொரோனா பரவலானது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பூசியே செயல்பாட்டுக்கு வந்தாலும், அது அனைவருக்கும் கிடைக்க, இன்னும் சில காலம் ஆகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது அதிக விலை சரிவினை தடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?
பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக தங்கம் இருப்பதால், நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். ஏனெனில் தடுப்பூசியே செயல்பாட்டுக்கு வந்தாலும், பொருளாதாரம் மீண்டு வர சில காலம் ஆகும். ஆக இது தங்கம் விலைக்கு சாதகமாக இருக்கும். ஆக நீண்டகால நோக்கில் வாங்கலாம். எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.
More From GoodReturns

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

Today Gold Silver Rate Live: தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

Gold Silver Rate Live: தினமும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை..! தங்க நகை காதலர்களுக்கு குட்நியூஸ்..!



Click it and Unblock the Notifications