சரிவில் தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு.. இது வாங்க சரியான நேரமா.. கணிப்பு என்ன..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த சில அமர்வுகளாக தங்க ஆபரணத்தின் விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. காலை அமர்வில் சற்று ஏற்றம் கண்டாலும், மாலை நேரத்தில் மீண்டும் சரிவில் முடிவடைந்து வருகின்றது.

எனினும் தற்போது நாட்டில் லாக்டவுன் கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் பிசிகல் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் பெட்ரோல் விலை உயர்வு.. சென்னையில் 100-ஐ நெருங்கி வரலாற்று உச்சத்தைத் தொட்டது..! மீண்டும் பெட்ரோல் விலை உயர்வு.. சென்னையில் 100-ஐ நெருங்கி வரலாற்று உச்சத்தைத் தொட்டது..!

அதேசமயம் புதிய வகை கொரோனா தொற்று பரவல் என்பது, நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மீடியம் டெர்மில் தங்கம் விலை எப்படி?

மீடியம் டெர்மில் தங்கம் விலை எப்படி?

தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அழுத்தத்தில் காணப்படும் நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படுகிறது. எப்படியிருப்பினும் அமெரிக்காவின் வட்டி விகிதம் அதிகரிக்கப்படும்போது மேலும் உலோகங்களின் விலையானது பெரும் மாற்றத்தினை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கம் Vs தங்கம்

தங்கமானது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக, பாதுகாப்பு புகலிடமான தங்கம் பார்க்கப்படுகிறது. எனினும் டாலரின் மதிப்பு அதிகரிப்பு என்பது செலவினை அதிகரிக்கும். இதனால் தங்கம் விலையில் பெரும் மந்த நிலையை கொண்டு வரலாம். எப்படியிருப்பினும் புதிய வகை கொரோனா பரவல் பற்றிய அச்சமானது சந்தையில் எதிரொலிக்கலாம். இது தங்கத்திற்கு சாதகமாக இருக்கலாம்.

நிபுணர்களின் கணிப்பு?
 

நிபுணர்களின் கணிப்பு?

இன்றைய அமர்வுகளில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது ஓரளவு ஏற்றத்தினை காணலாம் என்று எதிபார்க்கப்படுகிறது. அவுன்ஸ் தங்கம் விலையின் சப்போர்ட் லெவல் - 1768 - 1755 டாலர்களாகும். வெள்ளியின் சப்போர்ட் லெவல்கள் 25.88 - 25.55 டாலர்களாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் 26.55 - 26.80 டாலர்களாகும்.

இந்திய சந்தையில் என்ன நிலவரம்?

இந்திய சந்தையில் என்ன நிலவரம்?

தங்கம் விலையானது இந்திய சந்தையில் சற்று சரிவில் காணப்படும் நிலையில், அடுத்த முக்கிய சப்போர்ட் லெவல்கள் என 46,850 - 46,600 ரூபாயாகும். இத் ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் 47,220 - 47,450 ரூபாயாகும்.

வெள்ளியின் விலை சப்போர்ட் விலை 68,500 - 68,100 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் 69,500 - 70,100 ரூபாயாகும்.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், தற்போது சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 2.35 டாலர்கள் குறைந்து, 1778.35 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய முடிவினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையினை போலவே, வெள்ளியின் விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. நேற்றைய முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாக தொடங்கியுள்ளது. தற்போது விலை அவுன்ஸூக்கு சற்று 0.22% குறைந்து, 26.165 டாலர்களாக காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலை சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 58 ரூபாய் குறைந்து, 46,950 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 84 ரூபாய் குறைந்து, 68,057 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. அதோடு மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக இன்றும் சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 4,435 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, 35,480 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று குறைந்தே காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 4 ரூபாய் குறைந்து, 4,840 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து, 38,720 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவும் இரண்டாவது நாளாக சற்று குறைந்துள்ளது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு 20 பைசா குறைந்து, 73.30 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, 73,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த சில நாட்களாகவே தடுமாற்றத்தில் இருந்த நிலையில், இன்று மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது. .

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. இதே போல வெள்ளியின் விலையும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும், நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. இன்னும் குறையும் போது வாங்கினால் லாபம் சற்று கூடுதலாக கிடைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices trade lower, is it good time to buy gold?

Gold price today updates.. Gold prices today also down, is it good time to buy gold?
Story first published: Tuesday, June 29, 2021, 12:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X