தங்கம் விலை டாலரின் மதிப்பானது உச்சத்தில் காணப்படும் நிலையில், அழுத்தத்தில் காணப்படுகின்றது.
அமெரிக்காவின் பத்திர சந்தை மற்றும் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறித்தான முடிவு என பல காரணிகளுக்கு மத்தியில், தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இது மேற்கொண்டு சரியுமா? தற்போது வாங்கலாமா? வேண்டாமா? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
டாலர் மதிப்பு
அமெரிக்க டாலரின் மதிப்பு சற்றே ஏற்றம் கண்டிருந்த நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் குறைந்துள்ளது. இது உலகம் முழுக்க டாலரில் தங்கத்தினை வாங்குபவர்களுக்கு மேற்கொண்டு சாதகமாக அமையலாம். மேற்கொண்டு அடுத்த ஆண்டிலும் வட்டி விகிதம் அதிகரிக்கலாம். இது டாலரின் மதிப்பினை ஊக்குவிக்கலாம். இதுவும் தங்கத்தின் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
ரெசசன் அச்சம்
எனினும் தொடர்ந்து அதிகரித்து வரும் வட்டி விகிதம் காரணமாக, பொருளாதார வளர்ச்சி விகிதமானது சரிவடையலாம். இதன் காரணமாக ரெசசன் வரலாம் என்ற அச்சம் உள்ளது. அதோடு பணவீக்கமும் தொடர்ந்து உச்சம் எட்டி வரும் நிலையில், இது பாதுகாப்பு புகலிடமாகவும் பார்க்கப்படுகிறது. இது வட்டியில்லா முதலீடாக இருந்தாலும், சவாலான காலகட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கலாம்.
உச்சத்தில் இருந்து ரூ.1000 குறைவு
தங்கம் விலையானது கடந்த வாரத்தில் 10 கிராமுக்கு 55,000 ரூபாயினை எட்டிய நிலையில், உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 1000 ரூபாய்க்கு மேலாக சரிவினைக் கண்டுள்ளது. இது குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தங்கம் விலையானது 54,400 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை?
தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்றே அதிகரித்து, 1798.15 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்றே தடுமாற்றத்தில் இருக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதே வெள்ளி விலையானது சர்வதேச சந்தையில் 0.11% அதிகரித்து, 23.225 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்றே குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.
இந்திய கமாடிட்டி சந்தை நிலவரம்?
இந்திய கமாடிட்டி சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது, 10 கிராமுக்கு, 171 ரூபாய் அதிகரித்து, 54,431 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மிலும் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாக காணப்படுகின்றது. இது நீண்டகால நோக்கிலும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதே இந்திய சந்தையில் வெள்ளியின் விலையானது, 105 ரூபாய் அதிகரித்து, கிலோவுக்கு 67,617 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரணத் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலை சற்று அதிகரித்து காணப்பட்டாலும், ஆபரணத் தங்கம் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலையானது சென்னையில் இன்று கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து, 5065 ரூபாயாகவும், சவரனுக்கு 65 ரூபாய் குறைந்து, 40,520 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து, 5525 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது 10 கிராமுக்கு 90 ரூபாய் குறைந்து, 55,250 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 60 பைசா குறைந்து, 72.50 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 600 ரூபாய் குறைந்து, 72.500 ருபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
More From GoodReturns

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?



Click it and Unblock the Notifications