வாரத்தின் முதல் நாளே சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. சாமனியர்களுக்கு நல்ல வாய்ப்பு..!

தங்கம் விலையானது கடந்த வாரத்தில் பலமான ஏற்றத்தினை கண்ட நிலையில், இன்று சற்று ஆறுதல் கொடுக்கும் விதமாக சரிவில் காணப்படுகிறது.

கடந்த வாரத்தில் ஏற்றத்தில் காணப்பட்டாலும், கடைசி அமர்வில் சற்று சரிவிலேயே காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்றும் சற்று சரிவிலேயே காணப்படுகிறது.

இம்மாத தொடக்கத்தில் ஒரு வருட சரிவு விலையானது கிட்டதட்ட 44,000 ரூபாயினை தொட்ட நிலையில், அதனையே சப்போர்ட்டாக எடுத்துக் கொண்டு மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது இன்று வரையில் மொத்தமாக பார்க்கும்போது சற்று ஏற்றத்திலேயே காணப்படுகிறது. தற்போதும் கூட, சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சரிவினைக் கண்டு இருந்தாலும், இந்திய சந்தையில் சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது.

இன்று என்னென்ன பார்க்க போகிறோம்?

இன்று என்னென்ன பார்க்க போகிறோம்?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம் என்ன? வெள்ளி விலை நிலவரம் என்ன? இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் விலை நிலவரம் என்ன? இந்த இரு சந்தைகளிலும் வெள்ளி விலை என்ன? தங்கம் ஆபரண விலை நிலவரம் என்ன? இன்று விலை இனி எப்படி இருக்கும்? நீண்டகால நோக்கில் எப்படி இருக்கும்? முக்கிய காரணிகள் என்னென்ன? இது வாங்க சரியான இடமா? அடுத்த என்ன செய்யலாம் வாருங்கள் பார்க்கலாம்.

உச்சத்தில் இருந்து சரிவு

உச்சத்தில் இருந்து சரிவு

தங்கம் விலையானது நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து பார்க்கும்போது, 10 கிராம் விலை 4000 ரூபாய்க்கு மேல் சரிவில் உள்ளது. இதே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வரலாற்று உச்சமான 56,200 ரூபாயுடன் ஒப்பிடும்போது, சுமார் 9,500 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாகத் தான் பார்க்கப்படுகிறது.

Comex தங்கம் விலை

Comex தங்கம் விலை

சர்வதேச சந்தையில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 6.55 டாலர் குறைந்து, 1738.45 டாலர்களாக காணப்படுகிறது. தங்கம் விலையானது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. மேலும் தங்கம் விலையானது கடந்த வாரத்தில் அதிகபட்சமாக 1758 டாலர்களை வரை சென்று திரும்பியுள்ளது. ஆனால் தற்போது வரையில் நிபுணர்கள் கூறியதை போல, 1760 டாலர்களையும் உடைக்காமல் காணப்படுகிறது. அதேசமயம் 1660 டாலர்களை உடைக்காமல் மேலேயே காணப்படுகிறது.

Comex வெள்ளி விலை

Comex வெள்ளி விலை

தங்கம் விலையினை போலவே வெள்ளி விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 0.60% குறைந்து, 25.172 டாலர்களாக காணப்படுகிறது. வெள்ளியின் விலையும் முந்தைய அமர்வின் முடிவு விலையை விட சற்று மேலாகத் தான் காணப்படுகிறது. எனினும் பெரியளவில் மாற்றமில்லாமல் சற்று குறைந்து காணப்படுகிறது.

MCX தங்கம் விலை

MCX தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்பட்டாலும், இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்து தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 72 ரூபாய் அதிகரித்து, 46,665 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலையானது சற்று அதிகரித்து காணப்பட்டாலும், இன்று மீண்டும் சற்று சரிவினை காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் சர்வதேச சந்தையினை போலவே, இந்திய சந்தையில் பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 2 ரூபாய் அதிகரித்து, 66,985 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றம் கணவில்லை. இன்று கிராமுக்கு 3 ரூபாய் அதிகரித்து, 4,378 ரூபாயாகவும், சவரனுக்கு 24 ரூபாய் அதிகரித்து, 35,024 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று பெரியளவில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் விலை

சென்னையில் இன்று 24 கேரட் தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது. இது கிராமுக்கு 3 ரூபாய் அதிகரித்து, 4776 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து, 38,208 ரூபாயாகவும் காணப்படுகிறது. தூய தங்கத்தின் விலையும் கடந்த சில அமர்வுகளாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது அதிகரித்து காணப்பட்டாலும், இன்று ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 4.70 ரூபாய் குறைந்து, 67 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 4,700 ரூபாய் குறைந்து, 67,000 ரூபாயாகவும் காணப்படுகிறது. வெள்ளியின் விலையானது கடந்த வாரத்தில் நல்ல ஏற்றத்தில் காணப்பட்ட நிலையில், முதல் நாளே சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக பலத்த சரிவினைக் கண்டுள்ளது.

தங்கத்திற்கு ஆதரவு

தங்கத்திற்கு ஆதரவு

அதிகரித்து வரும் பத்திர லாபம், இதனால் ஏற்றம் கண்டு வரும் டாலரின் மதிப்பு, தங்கத்தின் விலையில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கின்றது. எப்படி இருப்பினும் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம், சரிவில் உள்ள ரூபாயின் மதிப்பானது அதிக சரிவினைக் இந்திய சந்தையில் தடுக்கலாம்.

பாதுகாப்பு புகலிடத்தில் தஞ்சம்

பாதுகாப்பு புகலிடத்தில் தஞ்சம்

அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தினால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பங்கு சந்தைகளில் உள்ள முதலீடுகளை வெளியே எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக சந்தையானது பலமான சரிவினைக் கண்டு வருகின்றது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தினை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். ஆக இதுவும் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Array

Array

தங்கத்தின் சப்போர்ட் விலை 46,400 - 46,180 ரூபாயாகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவலாக 46,880 - 47,050 ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதே வெள்ளியின் சப்போர்ட் விலையானது 66,600 - 66,100 ரூபாயாகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவலாக 67,500 - 68,200 ரூபாயாகவும் உள்ளது.

இதே டாலரில் தங்கத்தின் சப்போர்ட் விலை 1728 - 1714 டாலராகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவலாக 1758 - 1770 டாலராகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதே வெள்ளியின் சப்போர்ட் விலையானது 25 - 24.70 டாலராகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவலாக 25.70 - 26 டாலராகவும் உள்ளது.

 

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கத்தினை பொறுத்த வரையில் தற்போது சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் நீண்ட கால நோக்கில் வாங்கி வைக்கலாம். ஏனெனில் பல காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாகவே உள்ளன. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் 1760 டாடலர்களை உடைத்து சென்றால் வாங்கலாம். ஏனெனில் கடந்த சில வாரங்களாக விலையினை உடைக்காமல் தடுமாற்றத்திலேயே இருந்து வருகின்றது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது. இருப்பினும் விலை குறையும் போது வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+