நிதானம் காட்டும் தங்கம் விலை.. மீண்டும் குறையுமா.. எதற்கு இந்த அமைதி.. குழப்பத்தில் ஆர்வலர்கள்..!

தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாக பெரியளவில் ஏற்றம் காணமல் வர்த்தகமாகி வருகின்றது. அவ்வப்போது ஏற்றம் காண ஆரம்பித்தாலும், அது மீண்டும் சரிவினைக் நோக்கியே வருகின்றது.

இது தங்க ஆர்வலர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் சற்று குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். ஏனெனில் தங்கத்திற்கு சாதகமாக சில காரணிகள் இருந்தாலும், வார கேண்டில் பேட்டர்னில் தங்கம் விலையானது சரியும் விதமாகவே காணப்படுகிறது. இதனால் தங்கம் விலை இன்னும் குறையுமோ? என்ற சந்தேகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

அதெல்லாம் சரி இன்று தங்கம் விலை எப்படியுள்ளது? இன்று வாங்கி வைக்கலாமா? வேண்டாமா? இன்றைய விலை நிலவரம் என்ன? வெள்ளி விலை நிலவரம் என்ன? என்பதை பற்றித் தான் இதில் பார்க்கவிருக்கிறோம்.

டாலர் மதிப்பு ஏற்றம்

டாலர் மதிப்பு ஏற்றம்

அமெரிக்க டாலரின் மதிப்பு தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ள நிலையில், அது தங்கம் விலைக்கு எதிராக அமைந்துள்ளது. இதனால் தங்கம் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளது. இது அமெரிக்க ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் உள்பட பல அதிகாரிகள், தர்போதைக்கு நாணயக் கொள்கையில் மாற்றம் இருக்காது என்று வேறு வேறு வழிகளில் உறுத்திபடுத்தியதையடுத்து, டாலரின் மதிப்பானது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், தற்போது சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 0.65 டாலர்கள் அதிகரித்து, 1778.05 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய முடிவினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் தங்கம் விலையானது சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் பொறுத்திருந்து வாங்கலாம்.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

தங்கத்தின் விலையினை போலவே, வெள்ளியின் விலையும் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. இதனால் மீடியம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம். தற்போது விலை அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 25.922 டாலர்களாக காணப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலை இன்று பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 45 ரூபாய் அதிகரித்து, 47,056 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட சற்று இன்று மேலாக தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று குறையும்போது வாங்கலாம்.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 143 ரூபாய் அதிகரித்து, 67,660 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று குறையும்போது வாங்கலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்று அதிகரித்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து, 4,455 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 35,640 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் ( 24 கேரட் ) தங்கத்தின் விலையானது 16 ரூபாய் அதிகரித்து, 4,860 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 128 ரூபாய் அதிகரித்து 38,880 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு 40 பைசா அதிகரித்து, 73.40 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 73,400 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தடுமாற்றத்தில் இருந்த நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே இருந்தாலும், நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம். இதே போல வெள்ளியின் விலையும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+