தங்கம் விலை கிராமுக்கு 4,000 ரூபாயை தாண்டி விற்பனை.. வாடிக்கையாளர்கள் அதிருப்தி..!

போகிற போக்கை பார்த்தால் இனி பொட்டு தங்கமேனும் வாங்க முடியுமா? என்ற சந்தேகம் எழுகிறது.

ஏனெனில் அந்தளவுக்கு நாளுக்கு நாள் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சரவதேச அளவில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையின் மத்தியில் தங்கம் விலையானது, சர்வதேச வர்த்தகத்திலும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கம் விலை கிடு கிடுவென ஏற்றம் கண்டு கொண்டிருக்கிறது.

தொடர்ந்து ஏற்றம்

தொடர்ந்து ஏற்றம்

இந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையானது (22 கேரட் ) கிராமுக்கு 4,015 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதே சவரனுக்கு எட்டு ரூபாய் அதிகரித்து 32,120 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் கொண்டு அவ்வப்போது ஏற்றம் கண்டு வந்த தங்கத்தின் விலையானது, மார்ச் முதல் கொண்டு தொடர்ந்து நான்கு நாட்களாக ஏற்றம் கண்டு வருகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

ஆபரணத் தங்கத்தின் விலையே இப்படி எனில், சுத்தமான 24 கேரட் தங்கத்தின் விலையானது கிராமுக்கு 4,380 ரூபாயாகவும், இதே 10 கிராம் தங்கத்தின் விலையானது 43,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே 8 கிராம் தூய தங்கத்தின் விலையானது 35,040 ரூபாயாகவும், 100 கிராம் தங்கத்தின் விலையானது 4,38,000 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை

இதே வெள்ளியின் விலை 1 கிராமுக்கு 50.03 ரூபாயாகவும், இதே 10 கிராம் வெள்ளியின் விலையானது 500.30 ரூபாயாகவும், இதே கிலோ வெள்ளியின் விலை 50,030 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே நேற்றைய வெள்ளியின் விலையை 48,700 ரூபாயாக இருந்தது. இந்த நிலையில் கிலோ வெள்ளிக்கு 1,330 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.

சர்வதேச சந்தையில் விலை

சர்வதேச சந்தையில் விலை

கடந்த இரண்டு தினங்களாகவே அதிரடியாக ஏற்றம் கண்டு வந்த தங்கத்தின் விலையாது இன்று சற்று குறைந்து 1,638.55 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் நேற்று மட்டும் அவுன்ஸூக்கு 65 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 1646.40 டாலர்களாக தொடங்கிய நிலையில் இருந்தாலும், தற்போது சற்று குறைந்து 1638 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது.

இந்திய கமாடிட்டி வர்த்தகம்

இந்திய கமாடிட்டி வர்த்தகம்

சர்வதேச சந்தைகளின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இன்று எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் 37 ரூபாய் அதிகரித்து, 43,511 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இந்த விலையானது மீண்டும் வரலாற்று உச்சம் அருகில் வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது. கமாடிட்டி வர்த்தகத்தில் மட்டும் கடந்த இரண்டு தினங்களில் 1,800 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

என்ன காரணம்

என்ன காரணம்

அமெரிக்க மத்திய ஃபெடரல் வங்கி அவசர விகிதத்தினை குறைத்தது. இது தங்கம் விலை அதிகரிக்க உதவியது. மேலும் இந்தியாவில் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் நிலையில் தங்கம் விலையை மேலும் உயர்த்தியது. அதிலும் இந்தியாவில் இறக்குமதி வரி 12.5% + ஜிஎஸ்டி விகிதம் 3% ஆகியவை அடங்கும். இது தங்க ஆபரண விலை ஏற்றத்துக்கு மேலும் வழிவகுக்கும் விதமாகவும் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+