கிடைச்ச வாய்ப்ப மிஸ் பண்ணிட்டோமோ.. மீண்டும் தங்கம் விலை குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரண்டு வாராங்களாகவே முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, தங்கம் விலையானது தொடர்ச்சியாக சரிந்து வந்தது. ஆனால் இன்றோடு கடந்த மூன்று தினங்களாக மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

குறைந்த விலையில் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாக அமைந்த நிலையில், பலரும் இன்னும் குறையுமோ, இப்போது வாங்காலாமா? என்ற குழப்பத்தினாலேயே வாங்காமல் இருந்திருப்பர். அப்படியானவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா? தங்கம் விலை மீண்டும் குறையுமா? நிபுணர்களின் கணிப்பு என்ன?

சர்வதேச சந்தைகளில் தங்கம் விலையும் குறையும்பட்சத்தில், அது ஆபரண தங்கத்தின் விலையிலும் எதிரொலிக்கும் என்பதால், மீண்டும் விலை அதிகரித்துவிடுமோ? என்ற அச்சமும் தங்கம் முதலீட்டாளர்கள் இடையே எழுந்துள்ளது.

என்னென்ன பார்க்கவிருக்கிறோம்?

என்னென்ன பார்க்கவிருக்கிறோம்?

சரி இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன? சர்வதேச சந்தையில் எவ்வளவு? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? அடுத்து என்ன செய்யலாம். நிபுணர்கள் என்ன கூறுகின்றனர். அடுத்த சப்போர்ட்& ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் என்னென்ன? சாதகமான காரணிகள் என்ன? பாதகமான காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை என்ன?

எம்சிஎக்ஸ் தங்கம் விலை என்ன?

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை சற்று ஏற்றம் கண்டுள்ளது. தற்போது இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 264 ரூபாய் ஏற்றம் கண்டு, 49,200 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. நேற்று 48,947 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 49,147 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது இன்னும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி நிலவரம்

எம்சிஎக்ஸ் வெள்ளி நிலவரம்

இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையும், சர்வதேச சந்தையின் எதிரொலியாக ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. எம்சிஎக்ஸ் வெள்ளியின் விலை கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக சரிந்து வந்த நிலையில், இன்று கிலோவுக்கு 245 ரூபாய் அதிகரித்து, 63,570 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, சற்றே மேலே தொடங்கியுள்ளது. இதனால் வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாக உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு வாரங்களாகவே தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் தங்கம் விலையானது, இன்றோடு தொடர்ச்சியாக மூன்று தினங்களாகவே ஏற்றம் கண்டு வருகிறது. தற்போது அவுன்ஸுக்கு 6.05 டாலர்கள் அதிகரித்து, 1836.15 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த அமர்வின்போது ஏற்பட்ட உச்ச விலையை உடைத்து காட்டியுள்ளதால், விலை சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையினை போலவே வெள்ளியின் விலையும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. தொடர்ச்சியாக கடந்த இரண்டு வாரங்களாக சரிவினை கண்டு வந்த வெள்ளி விலையானது, கடந்த இரு தினங்களாக ஏற்றம் கண்டு வருகிறது. தற்போது 0.14 சதவீதம் ஏற்றம் கண்டு, 24.108 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள்

கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள்

தங்கம் விலையானது முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, நான்கு மாதங்களில் இல்லாத அளவு கடந்த வாரத்தில் வீழ்ச்சி கண்டது. இதற்கு முக்கிய காரணம் கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்தியே. கொரோனா தடுப்பூசியின் முடிவுகள் சாதகமாக வந்து கொண்டுள்ள நிலையில், அது சர்வதேச அளவில் நிலவி நெருக்கடியான நிலையை மாற்றும் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது பெரியளவில் ஏற்றம் காணமல் உள்ளது.

நிபுணர்களின் கணிப்பு என்ன?

நிபுணர்களின் கணிப்பு என்ன?

தங்கம் விலையானது தொடர்ச்சியாக கடந்த இரண்டு வாரங்களாக வீழ்ச்சி கண்ட நிலையில், கடந்த மூன்று தினங்களாகவே ஏற்றம் கண்டு வருகின்றது. எனினும் அமெரிக்காவில் இரண்டாம் கட்ட ஊக்கத் தொகை குறித்தான அறிவிப்புகள் இன்னும் இழுபறியாகவே உள்ளது. இது டாலரின் மதிப்பில் சற்று அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது தங்கம் விலை அதிகரிக்க காரனமாக அமைந்துள்ளது.

தங்கம் விலை அதிகரிக்கும்

தங்கம் விலை அதிகரிக்கும்

ஆக சரியான ஊக்கத் தொகை பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் வரையில், அது தங்கத்திற்கு ஆதரவாகவே அமையும். ஒரு புறம் கொரோனாவுக்கான தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது நல்ல விஷயமாகவும், சந்தை சாதகமாகவும் இருந்தாலும், அதிகரித்து வரும் கொரோனா வழக்குகள் அது அனைவருக்கும் கிடைப்பதை தாமதமாக்கும். இதனால் பொருளாதாரம் பின்னடைவையே சந்திக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் கட்ட கொரோனா பரவல்

இரண்டாம் கட்ட கொரோனா பரவல்

ஒரு புறம் தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டு இருந்தாலும், அமெரிக்காவின் சில பகுதிகளிலும் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சில பகுதிகளிலும் இரண்டாம் கட்ட கொரோனா பரவலானது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. ஆக இது அதிக விலை சரிவினை தடுக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்கத்தின் சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்கள்

தங்கத்தின் சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்கள்

தங்கம்
சப்போர்ட் லெவல்கள் - $1814 - $1800
ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - $1844 - $1858

சப்போர்ட் லெவல்கள் - ரூ.48,720 - 48,550
ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - ரூ.49,155 - 49,330

வெள்ளி

சப்போர்ட் லெவல்கள் - $23.80- $23.55
ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - $24.44 - $24.70

சப்போர்ட் லெவல்கள் - ரூ.62,800 - 62,300
ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - ரூ.63,800 - 64,500

 

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது கடந்த மூன்று தினங்களாக அதிகரித்து வரும் நிலையில், டெக்னிக்கலாலாகவும் சற்று ஏற்றம் கானும் விதமாக காணப்படுகிறது. குறிப்பாக 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜினை தாண்டியுள்ள நிலையில், இன்னும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்மிலும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.
நிபுணர்களின் கணிப்பு ஒரு புறம் இருந்தாலும், இறுதி முடிவு என்பது உங்களுடையதாக இருக்கட்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold prices trade nearly 49,200 in MCX market

Gold price update.. gold prices trade nearly 49,200 in MCX market
Story first published: Thursday, December 3, 2020, 13:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X