தங்கம் விலையானது சர்வதேச அளவில் நிலவி வரும் ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றத்தின் மத்தியில், விலையானது அவ்வப்போது சரிவினைக் கண்டாலும் தொடர்ந்து ஏற்றத்திலேயே காணப்படுகின்றது.
குறிப்பாக சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது 1900 டாலர்களையும் தொட்டுள்ளது. கடந்த அமர்விலேயே 1900 டாலர்களை உடைத்த தங்கம் விலையானது, முடிவிலும் 1902 டாலர்களாக முடிவுற்றுள்ளது.
இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக இன்று தொடக்கத்திலும் தங்கம் விலையானது 1902.60 டாலர்களாக அவுன்ஸூக்கு தொடங்கியுள்ளது. ஆக தற்போது தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும், மீண்டும் ஏற்றம் காணலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
8 மாத உச்சத்தில் தங்கம்
குறிப்பாக தங்கத்தில் 1923 டாலர்களை உடைத்தால் அடுத்த மீடியம் டெர்ம் இலக்கு 1970 டாலர்களாகவும் உள்ளது. ஆக இன்று வார இறுதி வர்த்தக நாள் என்பதால் சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், மீண்டும் ஏற்றம் காணலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதே இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது 8 மாத உச்சத்தில் காணப்படுகின்றது.
பாதுகாப்பு புகலிடம்
உக்ரைன் ரஷ்யா பதற்றமானது தற்போது வரையிலும் தணிந்த பாடாக இல்லை. அமெரிக்கா ரஷ்யா பின் வாங்கியுள்ளதாக அறிவித்திருந்தாலும், உக்ரைன் மீது எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம். இன்னும் முழுமையாக ரஷ்ய படைகள் வெளியேறவில்லை. இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
பணவீக்கம்
மேற்கொண்டு தங்கத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக, அமெரிக்காவில் தொடர்ந்து பணவீக்கமும் உச்சம் தொட்டு வருகின்றது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக ரஷ்யா - உக்ரைன் பதற்ற நிலைக்கு மத்தியில் கச்சா எண்ணெய் சப்ளையானது மேலும் பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மேற்கொண்டு பணவீக்கம் உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக தங்கமானது பார்க்கப்படுகிறது.
பங்கு சந்தைகளும் சரிவு
சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், பங்கு சந்தையில் இருந்து முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றன. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு முதலீடுகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் தங்கத்தின் விலையினை ஊக்குவிக்க காரணமாக அமையலாம். ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் தங்கத்தினை வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
More From GoodReturns

இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம்!! அட்சய திருதியை-க்கு ஒரு நாளே இருக்கும் நிலையில் விலை சரிவு!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

தங்கத்தை தூக்கி சாப்பிட்ட வெள்ளி..!! அட்சய திருதியை எனும் அமோக வாய்ப்பு!! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!!

மதுரையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

மதுரையில் தங்கம் விலை சரிந்தது: இன்று நகை வாங்கலாமா? மேலும் விலை குறையுமா?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?



Click it and Unblock the Notifications