பட்டையை கிளப்பும் தங்கம் விலை.. இன்னும் அதிகரிக்குமா.. எவ்வளவு தான் அதிகரிக்கும்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக தங்கம் விலையானது, வார இறுதி நாளான இன்றும் ஏற்றத்திலேயே காணப்படுகிறது.

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1800 டாலர்களை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக தங்கம் விலையானது மேற்கொண்டு அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

அதெல்லாம் சரி, இன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை எப்படி உள்ளது? இந்திய சந்தையில் எப்படி உள்ளது? இந்த இரு சந்தைகளிலும் வெள்ளி விலை நிலவரம் என்ன? முக்கியமான சாதகமான, பாதகமான காரணிகள் என்னென்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

எஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் சேவைகள் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் இயங்காது..!எஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் சேவைகள் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் இயங்காது..!

சர்வதேச தங்கம் நிலவரம்

சர்வதேச தங்கம் நிலவரம்

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில், தங்கம் விலையானது சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் 1800 டாலரகளை உடைத்துக் காட்டியுள்ளது. தற்போது 4 டாலர்கள் அதிகரித்து, 1819.50 டாலர்களாக காணப்படுகிறது. அதோடு முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாக தொடங்கியிருந்தாலும், முந்தைய அமர்வின் உச்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. அதோடு வார கேண்டில் பேட்டர்னிலும் அனைத்து லெவல்களையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக தங்கம் விலையானது இன்னும் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

சர்வதேச வெள்ளி நிலவரம்

சர்வதேச வெள்ளி நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையினைப் போலவே, வெள்ளியின் விலையும் இன்று சற்று ஏற்றத்திலேயே காணப்படுகிறது. தங்கத்தினை போலவே, வெள்ளியின் விலையிலும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 0.28% அதிகரித்து, 27.555 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது நீண்டகால நோக்கில் இன்னும் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. இந்திய கமாடிட்டி வர்த்தகத்தினை பொறுத்த வரையில் கடந்த அமர்வில் பலமான ஏற்றத்தினைக் கண்ட நிலையில், இன்றும் ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 116 ரூபாய் அதிகரித்து, 47,711 ரூபாயாக காணப்படுகிறது. தங்கம் விலையானது கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று மேலாகவே ரூபாயாக தொடங்கியுள்ளது. இதுவும் தங்கம் விலை சற்று ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோ வெள்ளியின் விலையானது 219 ரூபாய் அதிகரித்து, 71,900 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளியின் விலையும் முந்தைய அமர்வில் 71,681 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று 71,650 ரூபாயாக தொடங்கியுள்ளது, எனினும் நேற்றைய உச்ச விலையினையும் உடைத்துக் காட்டியுள்ளது.

ஆபரணத் தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையும் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்று ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது கிராமுக்கு 47 ரூபாய் அதிகரித்து, 4,497 ரூபாயாகவும், சவரனுக்கு 376 ரூபாய் அதிகரித்து, 35,976 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தொடர்ந்து இந்த மாத தொடக்கம் முதல் கொண்டே தங்கம் விலையானது சவரனுக்கு 35,000 ரூபாயாக்கு மேலாகவே இருந்து வருகின்றது.

24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் விலை

தூய தங்கம் (24 கேரட் தங்கம் விலை ) விலையும் இன்று இரண்டாவது நாளாக அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கிராமுக்கு 57 ரூபாய் அதிகரித்து, 4,906 ரூபாயாகவும், இதே 8 கிராமுக்கு 456 ரூபாய் அதிகரித்து, 39,248 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 49,060 ரூபாயாகவும் காணப்படுகிறது. இது தொடர்ச்சியாக இம்மாத தொடக்கத்தில் இருந்தே 48,000 ரூபாயாக்கு மேலாக இருந்த நிலையில், இன்று 49,000 ரூபாய்க்கு மேலாக சென்றுள்ளது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

சமீப காலமாக வெள்ளி விலையானது பெரியளவிலான ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றது. அதனை போலவே இன்றும் சென்னையில் இன்று ஆபரண வெள்ளியில் விலையானது, தற்போது கிராமுக்கு 2.30 ரூபாய் அதிகரித்து, 76.50 ரூபாயாகவும்,. இதே கிலோவுக்கு 2,300 ரூபாய் அதிகரித்து, 76,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. நடப்பு மாத தொடக்கத்தில் 72,800 ரூபாயாக இருந்த வெள்ளி விலை இன்று, 76,500 ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை உச்சம்

தங்கம் விலை உச்சம்

தொடர்ச்சியாக தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வரும் நிலையில், இன்று 2 ½ மாத உச்சத்தினை தொட்டுள்ளது. இது அமெரிக்க பத்திர சந்தையானது 1.6% சரிவினைக் கண்டுள்ளது. இதன் எதிரொலியாக டாலரின் மதிப்பும் சரிவினைக் கண்டுள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது பலமான உச்சத்தினை தொட்டுள்ளது. இதற்கிடையில் இன்று அமெரிக்காவின் விவசாயம் அல்லாத பே ரோல் குறித்த அறிக்கையினை முதலீட்டாளர்கள் கவனிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் முக்கிய லெவல்கள்

தங்கத்தின் முக்கிய லெவல்கள்

தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வரும் நிலையில் அடுத்த முக்கிய லெவல்கள் என்ன? இந்திய சந்தையில் அதன் சப்போர்ட் லெவல் 47,330 - 47,100 ரூபாயாகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 47,800 - 48,050 ரூபாயாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இதே போல வெள்ளிவின் விலையின் சப்போர்ட் லெவல் 71,100 - 70,700 ரூபாயாகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 72,400 - 72,900 ரூபாயாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

 

இரண்டாம் கட்ட கொரோனா தாக்கம்

இரண்டாம் கட்ட கொரோனா தாக்கம்

இந்தியாவினை பொறுத்தவரையில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் என்பது மிக மோசமாக பரவிக் கொண்டுள்ளது. இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. அதோடு ரூபாயின் மதிப்பும் மற்றொரு முக்கிய காரணமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது பொருளாதார சரிவுக்கு மீண்டும் வழிவகுக்குமோ, என்ற அச்சத்தினையும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இன்று நிலவரம் எப்படி இருக்கும்?

இன்று நிலவரம் எப்படி இருக்கும்?

தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைக்கு மீடியம் டெர்மிலும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. ஆக அதற்கேற்றாற்போல் முதலீட்டாளர்கள் வாங்கலாம். வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices trade nearly two month high on weaker dollar, bond yields: check details

Gold price update.. Gold prices trade nearly two month high on weaker dollar, bond yields: check details
Story first published: Friday, May 7, 2021, 11:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X