தடுமாறும் தங்கம் விலை.. இன்னும் குறையுமா? இப்போது வாங்கலாமா? நிபுணர்களின் கணிப்பு என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச சந்தையின் எதிரொலியாக தங்கம் விலையானது ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகிண்றது. குறிப்பாக சர்வதேச சந்தையிலும், இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று பலத்த சரிவினைக் கண்ட தங்கம் விலையானது, இன்று சற்று ஏற்றத்தினை காணத் தொடங்கியுள்ளது.

எனினும் வலுவான டாலர் மதிப்பின் காரணமாக தங்கம் விலையானது மீண்டும் சரிவினைக் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டாலரின் மதிப்பு

டாலரின் மதிப்பு

அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வரும் நிலையில், அமெரிக்காவிந் 10 வருட பத்திரத்தின் லாபம் அதிகரித்து கொண்டு வருகின்றது. இதற்கிடையில் வட்டியில்லா முதலீடுகளில் தங்களது பணத்தினை முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் யோசித்து வருகின்றனர். இதனால் தங்கம் விலை அழுத்ததினை காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவும் ஒரு காரணம்

இதுவும் ஒரு காரணம்

சொல்லப்போனால் செய்த முதலீடுகளையே லாபத்துடன் வெளியே எடுக்க தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக தங்கம் விலையானது கடந்த வாரத்தில் இருந்தே பெருத்த அடி வாங்கி வருகின்றது. இந்த நிலையில் அமெரிக்காவின் இருதரப்பு கட்சியினரும் மற்றொரு ஊக்கத்தொகைக்கு ஆதரவாக பேசி வருவது, மற்றொரு பெரிய ஊக்கத்தொகைக்கு வழிவகுக்கும்.

தங்கம் விலை குறையலாம்

தங்கம் விலை குறையலாம்

அப்படி இந்த மூன்றாம் கட்ட ஊக்கத்தொகை அறிவிப்புகள் வெளியாகும் பட்சத்தில், அது பத்திர லாபத்தினை இன்னும் அதிகரிக்க வழிவகுக்கும். இதன் காரணமாக வட்டியில்லா முதலீடான தங்கம் விலை இன்னும் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாத இறுதியில் அமெரிக்காவின் அதிபதிராக பதவியேற்க உள்ள ஜோ பிடன், விரைவில் மூன்றாம் கட்ட ஊக்கத்தொகை குறித்தான அறிவிப்பினை வெளியிடலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தங்கத்திற்கு ஆதரவு

தங்கத்திற்கு ஆதரவு

இதனால் அவர் பதவியேற்றவுடன் இது குறித்தான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி எனினும் தங்கம் விலையானது குறைந்த விலையில் கிடைப்பது, மீண்டும் முதலீட்டாளர்கள வாங்க தூண்டலாம். இது அதிக விலை சரிவினை தடுக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படும் தங்கம் விலையானது, பணவீக்கம் அதிகரிக்கும் போது வாங்கப்படலாம் என்றும் முதலீட்டாளர்கள் கூறியுள்ளனர். அதோடு இன்றைய காலகட்டத்தில் முதலீட்டாளர்களின் முக்கிய நம்பிக்கையே, கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், கொரோனா தடுப்பூசியின் காரணமாக அவை கட்டுக்குள் கொண்டு வரப்படலாம். இது பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் தேவை

தங்கத்தின் தேவை

இந்தியாவினை பொறுத்தவரையில் தங்கத்தின் தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது சர்வதேச சந்தையில் விலையே குறைந்தாலும், அது ஆபரணத் தங்கத்தின் விலையில் அதிகளவு குறைய வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. எம்சிஎக்ஸ் தங்கத்தினை பொறுத்தவரையில் 47600 ரூபாயினை உடைத்தால், இன்னும் சரிவினைக் காணும். அதே 52,000 ரூபாயினை உடைத்து சென்றால், புதிய உச்சத்தினை தொடலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் தற்போது தங்கம் விலையானது 49,500 ரூபாய் என்ற லெவலில் உள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை?

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது நேற்றைய முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாக தொடங்கியிருந்தாலும், நேற்றைய உச்ச விலையானது 1856 டாலர்களையும் உடைத்துக் காட்டியுள்ளது. இது நிபுணர்கள் சொல்வதனை போல குறைந்த விலையில் வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டலாம். ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் இந்த இடத்தில் வாங்கலாம். தற்போது அவுன்ஸூக்கு 6.10 டாலர்கள் அதிகரித்து, 1856.70 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

தங்கம் விலையினை போலவே வெள்ளியின் விலையும் சர்வதேச சந்தையில், 0.76% ஏற்றம் கண்டு, 25.475 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளியின் விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக கொஞ்சம் பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் தங்கம் விலையானது ஏற்றத்திலேயே காணப்படுகிறது. இது தற்போது 10 கிராமுக்கு 137 ரூபாய் அதிகரித்து, 49,478 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. முந்தைய அமர்வில் தங்கம் விலையானது 49,341 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 49,320 ரூபாயாக தொடங்கியுள்ளது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் வெள்ளியின் விலையும் ஏற்றத்திலேயே காணப்படுகிறது. இது தற்போது கிலோவுக்கு 452 ரூபாய் அதிகரித்து, 66,007 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வில் 65,555 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 65,444 ரூபாயாக தொடங்கியுள்ளது. மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

அமெரிக்க டாலரின் மதிப்பு மேற்கொண்டு வலுவடைந்து வரும் நிலையில், அது தங்கம் விலையில் அழுத்தத்தினை கொடுக்கலாம். ஆக தங்கம் விலையானது 49,550 ரூபாய் என்ற லெவலில் செல்லும் போது விற்கலாம். தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவல்கள் 49,550 - 48,800, இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் 49,550 - 49,800 ரூபாயாகும். இதே வெள்ளியின் சப்போர்ட் லெவல்கள் 64,800 - 64000 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் 66,600 - 67,200 ரூபாயாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold prices trades flat, silver rate also struggling

Gold price updates.. gold prices trades flat, silver rate also struggling
Story first published: Tuesday, January 12, 2021, 13:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X