gold: தங்கம் விலையானது கடந்த நிதியாண்டில் நல்ல லாபகரமான முதலீடாக இருந்த நிலையில், இந்த போக்கானது நடப்பு நிதியண்டிலும் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. எனினும் இன்று வரவிருக்கும் அமெரிக்காவின் முக்கிய தரவுகளுக்கு மத்தியில் விலையானது சரிவில் காணப்படுகின்றது.
தங்கம் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான டாலரின் மதிப்பானது மீண்டு வரத் தொடங்கியுள்ள நிலையில், இது தங்கம் விலையில் வாரத்தின் முதல் நாளான இன்றே, நடப்பு நிதியாண்டின் முதல் வர்த்தக நாளான இன்று முதலீட்டாளார்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக சரிவில் காணப்படுகின்றது.
முக்கிய தரவு
குறிப்பாக பண்ணை அல்லாத வேலை வாய்ப்பு தரவானது வெளியாகவுள்ள நிலையில், இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் தான் தங்கம் விலையானது இன்று அழுத்தத்தில் காணப்படுகிறது.
கடந்த இரண்டு வாரங்களாகவே டாலரின் மதிப்பானது அழுத்தத்தில் காணப்பட்ட நிலையில், தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வந்தது. இந்த நிலையில் தற்போது டாலரின் மதிப்பும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இதற்கிடையில் தங்கத்தில் முதலீடுகள் குறைய ஆரம்பித்துள்ளது.
புராபிட் புக்கிங்
தொடர்ந்து தற்போது அமெரிக்க டாலரின் மதிப்பானது ஏற்றம் காண ஆரம்பித்துள்ள நிலையில், புராபிட் புக்கிங் காரணமாக விலையானது அழுத்தத்தில் காணப்படுகின்றது. இது இன்னும் சற்று குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தங்கம் விலையானது குறையும்போது, நீண்டகால நோக்கில் வாங்க நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.
வங்கி நெருக்கடி
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய வங்கிகளில் நிலவி வரும் நெருக்கடி காரணமாக, சர்வதேச அளவில் நிதித் துறையானது எந்தளவுக்கு நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது என காட்டுகின்றது. இதற்கிடையில் முதலீட்டு ரீதியாக தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவை அதிகரிப்பு
குறிப்பாக தங்கத்தினை அதிகளவில் வாங்கும் சீனாவில் தேவையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் தேவையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஆக இதுவும் தங்கம் விலை குறையும்போது வாங்கி வைக்க தூண்டலாம். இது மேற்கொண்டு தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்.
ஓபெக்கின் முடிவு
எண்ணெய் உற்பத்தி நாடுகளின் அமைப்பான ஒபெக், கச்சா எண்ணெய் உற்பத்தியினை குறைக்க திட்டமிட்டுள்ளது. இதன் படி சவுதி அரேபியா தினசரி மே மாதம் தொடங்கி இந்த ஆண்ட இறுதி வரையில் தினசரி 5 லட்சம் பேரல்கள் மட்டுமே உற்பத்தி செய்யவும் உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதற்கிடையில் தான் டாலரின் மதிப்பானது 0.25% ஏற்றம் கண்டுள்ளது. இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 17.50 டாலர்கள் குறைந்து, 1968.80 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் கீழாகவே தொடங்கியுள்ளது. இது கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலைபோல வெள்ளி விலை அவுன்ஸூக்கு 1% மேலாக குறைந்து காணப்படுகின்றது. தற்போது 1.52% குறைந்து, 23.788 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும் இன்று கீழாகவே காணப்படுகிறது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 302 ரூபாய் குறைந்து, 59,100 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே காணப்படுகிறது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 559 ரூபாய் குறைந்து, 71,661 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே காணப்படுகிறது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
ஆபரணம் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, 5535 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து, 44,280 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, 5989 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 250 ரூபாய் குறைந்து, 59,890 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையானது குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 60 பைசா குறைந்து, 77.10 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 600 ரூபாய் குறைந்து, 77,100 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு!! அட்சய திருதியைக்கு 5 நாட்களே இருக்கும் நிலையில் திடீர் விலை ஏற்றம்!!

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?

உங்க பணத்தை இரட்டிப்பாக்கும் போஸ்ட் ஆபிஸ் முதலீட்டு திட்டம்!! ரூ.1000 கூட முதலீடு செய்யலாம்!!



Click it and Unblock the Notifications