தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. நடுத்தர மக்கள் கவலை.. இனி கனவில் தான் நினைக்கணும் போல?

தங்கம் விலையானது கடந்த அமர்வில் ஒரு வார உச்சத்தினை எட்டிய நிலையில், இன்று பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.

இது கடந்த அமர்வில் தங்கம் விலையானது கிடு கிடுவென ஏற்றம் கண்ட நிலையில், இன்று பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.

ஜப்பானின் மத்திய வங்கியானது திடீரென வட்டி விகிதத்தினை அதிகரித்த நிலையில், டாலரின் மதிப்பானது சரிவினைக் கண்டது. இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமைந்தது.

வட்டி அதிகரிப்பு தொடரலாம்

வட்டி அதிகரிப்பு தொடரலாம்

இதற்கிடையில் அடுத்த ஆண்டிலும் அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி அதிகரிப்பினை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கோண்டு பணவீக்கத்தினை கட்டுப்படுத்தலாம் என்றாலும், பொருளாதாரம் குறித்த கவலையும் எழுந்துள்ளது.இது மேற்கோண்டு பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

தங்கம் விலை அதிகரிக்கலாம்

தங்கம் விலை அதிகரிக்கலாம்

எனினும் வரவிருக்கும் பொருளாதாரம் குறித்தான தரவானது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலை குறைந்தாலும் குறையலாம். இதற்கிடையில் தான் முதலீட்டாளர்கள் இதனை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

இதற்கிடையில் அடுத்த ஆண்டில் அமெரிக்கா ரெசசனுக்குள் நுழையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.

தங்கம் விலையில் தாக்கம்

தங்கம் விலையில் தாக்கம்

டாலரின் மதிப்பானது அழுத்தத்தில் காணப்பட்டாலும் பத்திர சந்தையானது ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது அழுத்தத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் இது சர்வதேச சந்தையில் நீண்டகால நோக்கில் டாலர் மதிப்பு மற்றும் பத்திர சந்தை என இரண்டுமே தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

முதலீட்டாளர்களின் கவனம்

முதலீட்டாளர்களின் கவனம்

முதலீட்டாளர்கள் தொடர்ந்து சீனாவினை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அங்கு கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது மேற்கொண்டு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்துமா? அங்கு மீண்டும் லாக்டவுன் கடுமையாக்கப்பட்டால் தங்கத்தின் தேவையானது சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 சர்வதேச சந்தையில் தங்கம் விலை?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை?

தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்றே குறைந்து, 1823.40 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்றே தடுமாற்றத்தில் இருக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே வெள்ளி விலையானது சர்வதேச சந்தையில் 0.55% குறைந்து, 24.140 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்றே குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

 இந்திய கமாடிட்டி சந்தை நிலவரம்?

இந்திய கமாடிட்டி சந்தை நிலவரம்?

இந்திய கமாடிட்டி சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது, 10 கிராமுக்கு, 99 ரூபாய் அதிகரித்து, 54,997 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மிலும் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாக காணப்படுகின்றது. இது நீண்டகால நோக்கிலும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதே இந்திய சந்தையில் வெள்ளியின் விலையானது, 16 ரூபாய் குறைந்து, கிலோவுக்கு 69,626 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 ஆபரணத் தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், ஆபரணத் தங்கம் விலை அதிகரித்து காணப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலையானது சென்னையில் இன்று கிராமுக்கு 47 ரூபாய் அதிகரித்து, 5115 ரூபாயாகவும், சவரனுக்கு 376 ரூபாய் அதிகரித்து, 40,920 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 52 ரூபாய் அதிகரித்து, 5580 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது 10 கிராமுக்கு 520 ரூபாய் அதிகரித்து, 55,800 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

 ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையும் அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 2.20 ரூபாய் அதிகரித்து, 74.70 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 2200 ரூபாய் அதிகரித்து, 74,700 ருபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+