இரண்டாவது நாளாக சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. இனியும் குறையுமா? நிபுணர்களின் கணிப்பு என்ன?

தங்கம் விலையானது நடப்பு வார தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது.

இந்திய சந்தையில் பெரியளவில் மாற்றன் இல்லாவிட்டாலும், சற்றே சரிவில் தான் காணப்படுகிறது.

தற்போது உலகளவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டு வரும் நிலையில், பொருளாதாரத்தினை ஊக்குவிக்க ஊக்கத்தொகைகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றும் கூறப்படுகிறது.

என்னென்ன பார்க்கபோகிறோம்?

என்னென்ன பார்க்கபோகிறோம்?

கடந்த வாரத்தில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? எவ்வளவு குறைந்திருக்கு அல்லது விலை கூடிருக்கா? தங்கத்திற்கு சாதகமான, பாதகமான காரணிகள் என்னென்ன? இனி நீண்டகால நோக்கில் இன்னும் தங்கம் விலை எப்படி இருக்கும்? வரும் வாரத்தில் எப்படி இருக்கும்? உள்ளிட்ட பலவற்றையும் இன்று பார்க்கவிருக்கிறோம்.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

இம்மாத தொடக்கத்தில் வெளியான பட்ஜெட் அறிவிப்பில் தங்கத்திற்கான இறக்குமதி வரியினை இந்திய அரசு குறைத்தது. இது அதிக இறக்குமதிக்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு கடந்த ஆண்டு கொரோனாவால் விழாக்கள், இந்த ஆண்டு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கத்தின் தேவை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது அதிக தங்கம் விலை சரிவினை தடுக்கலாம்.

தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு

தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு

அதோடு நடப்பு ஆண்டும் தொடக்கம் முதல் கொண்டே தங்கம் விலையானது அவ்வப்போது ஏற்றம் கண்டாலும், தொடர்ச்சியாக சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, தங்கம் விலையானது தொடர்ச்சியாக சரிந்து வருகின்றது. குறிப்பாக 1991க்கு பிறகு வருடத் தொடக்கத்தில் இவ்வளவு சரிவினைக் கண்டது இந்த ஆண்டில் தான். அதோடு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத உச்சத்துடன் பார்க்கும்போது, கிட்டதட்ட 9500 ரூபாய் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக இது தங்கம் வாங்குபவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

COMEX தங்கம் விலை

COMEX தங்கம் விலை

சர்வதேச சந்தையில் இரண்டாவது நாளாக இன்று சற்று சரிவினைக் கண்டு வருகிறது. தற்போது அவுன்ஸ் தங்கத்தின் விலையானது சற்று குறைந்து 1805 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, சற்று கீழாக தொடங்கியுள்ளது. இதனால் தங்கம் விலையானது சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

COMEX வெள்ளி விலை

COMEX வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் தங்கத்தினை போல சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 0.17% குறைந்து, 27.655 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வு விலையை விட சற்று மேலே தான் தொடங்கியுள்லது. எனினும் பெரிய அளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. தினசரி கேண்டில் பேட்டர்னில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 55 ரூபாய் குறைந்து, 46,741 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் தங்கத்தின் விலையானது நேற்றைய முடிவு விலையை விட, சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

MCX வெள்ளி விலை நிலவரம்

MCX வெள்ளி விலை நிலவரம்

இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும், சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 250 ரூபாய் குறைந்து, 69,091 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடம் என்றாலும், மீடியம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

ஜெரோம் பவல் என்ன கூறியுள்ளார்?

ஜெரோம் பவல் என்ன கூறியுள்ளார்?

கொரோனா தாக்கத்தினால் முடங்கி போன பொருளாதாரம் இன்னும் சரிவிலேயே உள்ளது. இதனால் அமெரிக்க பொருளாதாரத்தினை மீட்டெடுக்க இன்னும் ஊக்கம் தேவை. இதனால் வட்டி விகிதத்தில் தற்போதைக்கு மாற்றமில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் பணவீக்கம் பற்றிய கவலைகளுக்கு மத்தியில், கொரோனா மக்களின் செலவினை குறைத்துள்ளது. இது மீண்டு வர இன்னும் சிறிது காலம் ஆகும். தேவை மீண்டும் வரவும் இன்னும் சிறிது காலம் ஆகும் என்றும் கூறியுள்ளார்.

முக்கிய சப்போர்ட்

முக்கிய சப்போர்ட்

தங்கம் விலையானது ஏற்றம் கண்டாலும் 1760 டாலர்களை முக்கிய சப்போர்ட்டாக எடுத்துக் கொண்டு வர்த்தகமாகி வருகிறது. இது முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 1870 டாலர்களாகும். ஒரு வேளை தங்கம் விலையானது மேற்கொண்டு சரிந்து 1755 டாலர்களை உடைத்து சென்றாம், தங்கம் விலையானது மீண்டும் செல்லிங் அழுத்தத்தில் இருக்கும். இதே எம்சிஎக்ஸ் சந்தையில் ரெசிஸ்டன்ஸ் லெவல் 47,450 ரூபாயாகும். இதே சப்போர்ட் லெவல் 45,300 ரூபாயாகும்.

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று முதலீட்டாளர்கள் கூறினாலும், மீடியம் டெர்மில் தங்கம் விலை சற்று குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+