தடுமாறும் தங்கம் விலை.. இப்போ நகை வாங்குவது சரியா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2020ல் பல முதலீட்டாளர்களைக் காப்பாற்றிய தங்கம் வெள்ளிக்கிழமை வர்த்தக நிலவரத்தின் படி அடுத்த சில வாரத்தில் 8 முதல் 10 சதவீதம் வரையில் குறையும் எனக் கணிக்கப்பட்டு இருந்த நிலையில் பிரிட்டனில் ஏற்பட்டுள்ள புதிய கொரோனா தொற்று தங்க முதலீட்டுச் சந்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் தங்கத்தில் முதலீடு குறித்துச் சந்தை வல்லுநர்களை குழப்பமான சூழ்நிலையில் உள்ளனர். இதற்கு முக்கியக் காரணமாகத் தங்கம் விலை உள்நாட்டுச் சந்தையிலும் சரி வெளிநாட்டுச் சந்தையிலும் சரி தொடர்ந்து அதிகளவிலான மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தங்கம் வாங்கலாமா..? வேண்டாமா..?

பெங்களூர் தொழிற்சாலை திட்டத்தை கைவிடும் போயிங்.. கர்நாடகாவிற்கு பெரும் இழப்பு..!பெங்களூர் தொழிற்சாலை திட்டத்தை கைவிடும் போயிங்.. கர்நாடகாவிற்கு பெரும் இழப்பு..!

தங்கம் விலை நிர்ணயம் செய்யும் காரணிகள்

தங்கம் விலை நிர்ணயம் செய்யும் காரணிகள்

சர்வதேசச் சந்தையில் தற்போது தங்கம் விலையை நிர்ணயம் செய்யும் இரு முக்கியக் காரணிகள் பிரிட்டனில் ஏற்பட்டுள்ள புதிய கொரோனா தொற்றும், அமெரிக்காவின் 900 பில்லியன் டாலர் பொருளாதார ஊக்கத் திட்டத்தின் ஒப்புதலும் தான்.

இவ்விரண்டின் காரணமாகத் தங்கம் விலை தற்போது கடுமையான ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்டு வருகிறது.

 

தங்கம் விலை எதிர்பார்ப்பு

தங்கம் விலை எதிர்பார்ப்பு

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இரு முக்கியக் காரணங்களால் அதிகளவிலான மாற்றங்களை எதிர்கொண்டு வருவதன் எதிரொலியாக, தங்கம் விலை நிலையான அளவீட்டை அடைந்துள்ளது.

திங்கட்கிழமை சர்வதேச சந்தை வர்த்தகத்தில் பிரிட்டன் கொரோனா தொற்றுக் காரணமாக ஒரு அவுன்ஸ் தங்கம் 1,898 டாலரில் இருந்து 1,864 டாலர் வரையில் வீழ்ச்சி அடைந்தது. இதன் பின்பு பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை.

 

தங்க முதலீட்டு சந்தை வல்லுனர்கள்

தங்க முதலீட்டு சந்தை வல்லுனர்கள்

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தங்க முதலீட்டு சந்தை வல்லுனர்கள் 50 நாள் சராசரி அளவிலான 1,870 டாலர் அளவீட்டையும், 10 நாள் சராசரி அளவான 1,857 டாலர் அளவீட்டில் வர்த்தகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பிரிட்டன் மூலம் 2வது முறை பரவினால் கண்டிப்பா நவம்பர் மாத உயர்வான 1,960 டலாரை கண்டிப்பாக அடையும் என தெரிவித்துள்ளனர்.

 

அமெரிக்காவின் டாலர் பொருளாதார ஊக்கத் திட்டம்

அமெரிக்காவின் டாலர் பொருளாதார ஊக்கத் திட்டம்

இதேவேளையில் அமெரிக்காவில் 900 பில்லியன் டாலர் பொருளாதார ஊக்க திட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த வாரத்தில் ஒப்புதல் அடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பத்திர சந்தையில் லாபம் அதிகரித்துள்ளது. இது முதலீட்டுச் சந்தைக்கு மிகவும் சாதகமான வாய்ப்பு.

தங்கம் மீதான முதலீடுகள் குறையும்

தங்கம் மீதான முதலீடுகள் குறையும்

அமெரிக்காவின் இந்த 900 பில்லியன் டாலர் பொருளாதார ஊக்கத் திட்டம் அமெரிக்கக் குடும்பங்கள் மற்றும் வர்த்தகங்களைக் கொரோனா பாதிப்பில் இருந்து பெரிய அளவில் மீட்டு எடுக்க முடியும். இத நடக்கும் பட்சத்தில் தங்கம் மீதான முதலீடுகள் குறைந்து சரிவைத் தழுவும்.

இதனால் முதலீட்டாளர்கள் தங்கம் மீது குறுகிய கால முதலீட்டுக்கும் சரி நீண்ட கால முதலீட்டுக்கும் சரி சரியான கணிப்பை அளிக்க முடியாமல் உள்ளனர்.

இந்தக் குழப்பத்திற்குப் பின்னால் இருக்கும் இதர முக்கியக் காரணங்கள் என்ன தெரியுமா வாங்கப் பார்ப்போம்.

 

கொரோனா தடுப்பு மருந்து

கொரோனா தடுப்பு மருந்து

உலகிலேயே முதல் நாடாக அனைத்துத் தரப்பு ஒப்புதல்களையும் பெற்று பிரிட்டன் அரசு கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மொத்த ஐரோப்பிய நாடுகளுக்கும் பிரிட்டன் விமானங்கள், பிரிட்டன் விமானப் பயணிகள் வருவதற்குத் தடை விதித்துள்ளது.

ஐரோப்பா முழுவதும் லாக்டவுன்

ஐரோப்பா முழுவதும் லாக்டவுன்

இதுமட்டும் அல்லாமல் பிரிட்டன் நாட்டின் கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணமாக ஐரோப்பா மொத்தமும் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்படும் அளவிற்குத் தற்போது சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும் பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு வந்த விமானப் பயணிகளில் பலருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பீதி அதிகரித்துள்ளது.

 

பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன்

பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன்

பிரிட்டன் நாட்டில் புதிதாகப் பரவி வரும் கொரோனா தொற்றில் பாதிப்பு ஏற்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் தொற்றைப் பரப்பும் அளவில் இருப்பதாகப் பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் உலக நாடுகளுக்குத் தெரிவித்துள்ளார். இதேபோல் பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சர் புதிய வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று வெளியான அறிவிப்பில் பிரிட்டனில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் மியூடெட் வைரஸ் ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

 

அமெரிக்கச் சந்தை

அமெரிக்கச் சந்தை

அமெரிக்காவிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் இதேவேளையில், அந்நாட்டின் பொருளாதாரத் தரவுகள் பெரிய அளவிலான வீழ்ச்சியை எதிர்கொண்டு உள்ளது. பிரிட்டனில் ஏற்பட்டுள்ள தாக்கம் அமெரிக்கச் சந்தையில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் வாயிலாக இன்று ஆசியச் சந்தை முழுவதுமாகப் பாதிப்பை எதிர்கொண்டது.

திங்கட்கிழமை வீழ்ச்சி

திங்கட்கிழமை வீழ்ச்சி

திங்கட்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்காவின் டாவ் ஜோன்ஸ் நிறுவனத்தைத் தவிர அனைத்து சந்தை குறியீடுகளும் சரிவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் S&P குறியீடு 0.39% , நாஸ்டாக் 0.10%, கனடா 0.24%, பிரேசில் 1.86%, சிலி 1.13%, மெக்சிக்கோ 1.43% சரிவை எதிர்கொண்டுள்ளது.

ஆசிய சந்தை பாதிப்பு

ஆசிய சந்தை பாதிப்பு

அமெரிக்கச் சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் எதிரொலியாகச் செவ்வாய்க்கிழமை ஆசிய சந்தையில் இன்று அனைத்து முக்கியமான சந்தைகளும் சரிவை எதிர்கொண்டுள்ளது, குறிப்பாக ஆஸ்திரேலியா, சீனா, ஹாக்காங், ஜப்பான், தைவான் ஆகிய நாடுகள் 1.2 சதவீதத்தில் இருந்து 0.11 சதவீதம் அளவிலான சரிவை எதிர்கொண்டு உள்ளது.

கச்சா எண்ணெய் சந்தை

கச்சா எண்ணெய் சந்தை

பங்குச் சந்தையைப் போல் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய லாக்டவுன் எதிரொலியாகக் கச்சா எண்ணெய் சந்தையும் சரிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் WTI கச்சா எண்ணெய் விலை 1.77 சரிவடைந்து 47.12 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. பிரென்ட் கச்சா எண்ணெய் 1.65 சதவீதம் சரிவடைந்து 50.07 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு

இதேபோல் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதன் காரணமா இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.89 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியாலும் தங்கம் விலை இந்தியாவில் உயரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

 

தங்கத்தில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா?

தங்கத்தில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா?

பங்குச்சந்தை, கச்சா எண்ணெய் சந்தை, ரூபாய் மதிப்பு, இந்தியாவின் வளர்ச்சி அளவீடுகள், தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா, அமெரிக்காவின் 900 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மூலம் சந்தை மீதான தாக்கம் தங்கம் விலையில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது. இதனால் அடுத்த சில வாரங்களுக்குத் தங்கம் விலையை ஆய்வு செய்த பின்பு முதலீடு செய்வது சிறந்ததாக இகுக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold Prices Whipsaw: Britain mutant covid spread, USA 900 billion stimulus major impact on gold

Gold Prices Whipsaw: Britain mutant covid, USA 900 billion stimulus has major impact on gold
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X