ஷாக் கொடுக்க போகும் தங்கம் விலை.. ரூ.70,000 தொடலாம்.. இனி நகைகளை வாங்கவே முடியாதா?

இந்தியாவினை பொறுத்தவரையில் தங்கம் என்பது முதலீட்டு அம்சம் என்பது இரண்டாவது அம்சமாகும், ஏனெனில் பாரிம்பரிய சின்னமாகும், பல இடங்களில் கெளரவ சின்னமாகவும் பார்க்கப்படுகிறது.

ஒரு குழந்தை பிறப்பு முதல் சடங்கு சம்பிரதாயம், காதுகுத்து, திருமணம், கருமாதி வரையில் ஒரு பாரிம்பரிய அம்சமாகவே இருந்து வருகிறது.

அந்தளவுக்கு இந்தியர்களின் வாழ்வோடு ஒன்றிபோன ஒரு சின்னமாக தங்கம் இருந்து வருகிறது.

அனுதினமும் புதிய உச்சம்

அனுதினமும் புதிய உச்சம்

இந்த நிலையில் தற்போது நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் தங்கம் விலையானது அனுதினமும் வரலாறு காணாத புதிய உச்சத்தினை தொட்டு வருகிறது. இது நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில், அதனைவிட வேகமாக போட்டிபோட்டுக் கொண்டு ஏற்றம் கண்டு வருகிறது தங்கம் விலை.

இனியும் தங்கம் விலை அதிகரிக்கும்

இனியும் தங்கம் விலை அதிகரிக்கும்

இப்படி நாள் தோறும் தங்கம் விலையானது புதிய உச்சத்தினை தொட்டு வரும் நிலையில், இன்னும் எந்தளவுக்கு ஏற்றம் காணுமோ தெரியவில்லை. தற்போதைய நிலையில் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்பட, அவுன்ஸூக்கு 2,000 டாலர்களுக்கு மேல் வர்த்தகமாகியது. இது விரைவில் 3,000 தொடக்கூட வாய்ப்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.

தங்கத்தின் அடுத்த டார்கெட்

தங்கத்தின் அடுத்த டார்கெட்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய எம்சிஎக்ஸ் சந்தையிலும், தங்கம் விலையானது புதிய உச்சத்தினை தொட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று 54,780 ரூபாய் அருகில் வர்த்தகமாகியும் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் ஜேபி மார்கன் அறிக்கையின் படி, வரும் தீபாவளிக்குள் 10 கிராம் தங்கம் விலையானது 70,000 ரூபாயினை தொடலாம் என்று கூறுகின்றனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

உலககெங்கிலும் பரவி வரும் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில், பொருளாதாரமானது சரிந்து வருகிறது. இன்று வரையிலும் கூட கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இனி பொருளாதாரம் என்னவாகுமோ? என்ற பதற்ற நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி தங்களது முதலீடுகளை தங்கத்தின் பக்கம் திருப்பி விடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது தான் தங்கத்தின் உச்சம்

இது தான் தங்கத்தின் உச்சம்

தங்கம் விலையின் உச்சம் 57,008 ரூபாயாகும். இதே தங்கம் விலையினை தொடர்ந்து வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக கடந்த வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 77,840 ரூபாயினை திட்டத்து. இது தான் வெள்ளியின் புதிய உச்சமாகும். இது தான் இந்த விலையுயர்ந்த உலோகங்களின் புதிய உச்சம் என ஹெச் டி எஃப்சியின் அறிக்கை கூறுகின்றது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது இன்று பெரியளவில் மாற்றம் காணாத நிலையில், கிராமுக்கு 5,381 ரூபாயும், இதே சவரனுக்கு 43,048 ரூபாயாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது அதிகபட்சமான கடந்த வெள்ளிக்கிழமையன்று, சவரனுக்கு 43,360 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆபரண வெள்ளி

ஆபரண வெள்ளி

தங்கம் விலையின் உச்சம் 57,008 ரூபாயாகும். இதே தங்கம் விலையினை தொடர்ந்து வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக கடந்த வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 77,840 ரூபாயினை தொட்டத்து. இது தான் வெள்ளியின் புதிய உச்சமாகும். இது தான் இந்த விலையுயர்ந்த உலோகங்களின் புதிய உச்சம் என ஹெச் டி எஃப்சியின் அறிக்கை கூறுகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+