தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் மக்கள் தொடர்ந்து வாங்கி வரும் நிலையில் இருக்கும் போது, சமீப காலமாகத் தங்கம் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் நகை கடைகளில் மக்கள் கூட்டம் படிப் படியாகக் குறைந்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் நிலைமை மாறி வருகிறது.
அமெரிக்கா மற்றும் இந்திய மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்திய நிலையில் பத்திர சந்தையிலும், பங்குச்சந்தையிலும் அதிகளவிலான முதலீடுகள் குவிந்து வருகிறது.
இதேவேளையில் டாலர் மதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்யச் சிறப்பான காலமாக மாறியுள்ளது.
இதற்கிடையில் இன்று தங்கம் விலை ஒரு மாத சரிவை பதிவு செய்து தங்கம் வாங்குவோருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
தங்கம்
கடந்த 2 வருடத்தில் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் நாணய மதிப்பில் ஏற்படும் சரிவை சமாளிக்க அதிகளவிலான தங்கத்தை வாங்கிக் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை
வெள்ளிக்கிழமை MCX சந்தை வர்த்தகம் முடிவில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.13 சதவீதம் சரிந்து 56,780 ரூபாயாக உள்ளது. இதுவே ஸ்பாட் மார்கெட்டில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை நேற்றைய வர்த்தக இறுதியில் 56,837 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலை
இதேபோல் MCX சந்தையில் 1 கிலோ வெள்ளி விலை 0.44 சதவீதம் சரிந்து 66,735.00 ரூபாயாக உள்ளது. இதுவே ஸ்பாட் மார்கெட்டில் 1 கிலோ வெள்ளி விலை நேற்றைய வர்த்தக இறுதியில் 66,586.00 ரூபாயாக உள்ளது.
சர்வதேச சந்தை விலை
பிப்ரவரி 10 ஆம் தேதி சர்வதேச சந்தை வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1870 டாலரில் இருந்து 1857 டாலர் வரையில் சரிந்து வர்த்தகம் முடியும் வேளையில் 1865 டாலராக மட்டுமே உள்ளது. இது பெரிய அளவிலான சரிவு இல்லை என்றாலும் முதலீட்டுகள் தங்க உலோகத்தை விட்டு வெளியேறியது உறுதியாகியுள்ளது.
டிமாண்ட்
தங்கம் மீதான டிமாண்ட் வெளிநாட்டில் குறைந்தாலும், இந்தியாவில் இப்போது தான் அதிகரிக்க உள்ளது. தங்கம் விலையில் பதிவான ஒரு மாத சரிவு அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் வேளையில் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவே விரும்புவார்கள். இதனால் அடுத்த சில நாட்களுக்குத் தங்க நகைக் கடைகளில் மக்கள் கூட்டத்தைக் காண முடியும்.
22 கேரட் தங்கம் விலை
சென்னை - 53,400 ரூபாய்
மும்பை - 52,600 ரூபாய்
டெல்லி - 52,750 ரூபாய்
கொல்கத்தா - 52,600 ரூபாய்
பெங்களூர் - 52,650 ரூபாய்
ஹைதராபாத் - 52,600 ரூபாய்
கேரளா - 52,600 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை
சென்னை - 58,250 ரூபாய்
மும்பை - 57,380 ரூபாய்
டெல்லி - 57,530 ரூபாய்
கொல்கத்தா - 57,380 ரூபாய்
பெங்களூர் - 57,430 ரூபாய்
ஹைதராபாத் - 57,380 ரூபாய்
கேரளா - 57,380 ரூபாய்
1 கிலோ வெள்ளி விலை
சென்னை - 72700.00 ரூபாய்
மும்பை - 70500.00 ரூபாய்
டெல்லி - 70500.00 ரூபாய்
கொல்கத்தா - 70500.00 ரூபாய்
பெங்களூர் - 72700.00 ரூபாய்
ஹைதராபாத் - 72700.00 ரூபாய்
கேரளா - 72700.00 ரூபாய்


Click it and Unblock the Notifications