Gold: தங்கம் விலையானது கடந்த அமர்வில் சரிவினைக் கண்டிருந்த நிலையில், இன்று மீண்டும் இன்று உச்சத்தினை எட்ட ஆரம்பித்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சரிவில் காணப்படும் நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்றும் மீண்டும் அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் சர்வதேச வங்கிகள் மத்தியில் நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியில், பொருளாதாரம் என்னவாகுமோ? என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதற்கிடையில் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது உச்சத்தில் காணப்படுகிறது.
டாலர் மதிப்பு
இன்று டாலரின் மதிப்பு சற்றே வலுவாக காணப்படும் நிலையில், இது சர்வதேச சந்தையில் விலை அழுத்தத்தில் காணப்படுகின்றது. எனினும் முன்னதாக தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்த நிலையில் டாலரில் தங்கத்தினை வாங்குபவர்களுக்கு விலை உயர்ந்ததாக மாற்றியுள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் குறைந்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் விலை அழுத்தத்தில் காணப்படுகிறது. எனினும் இது நீண்டகால நோக்கில் இன்னும் விலை குறையும்பட்சத்தில் முதலீட்டாளர்கள் வாங்கலாம். இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்.
விலை அதிகரிக்கலாம்
மேலும் வங்கி துறையில் நிலவி வரும் நெருக்கடியானது மேற்கொண்டு தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். தொடர்ந்து அமெரிக்காவில் மீண்டும் பணவீக்கம் என்பது உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவின் பொருளாதார குறிகாட்டிகளும் கடந்த சில வாரங்களாக மீண்டும் சந்தைக்கு எதிராக திரும்பி வரும் நிலையில், விலையானது உச்சத்தில் காணப்படுகிறது.
குறைந்த விலையில் வாங்கலாம்
அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை என்பதும் விரிவடைந்து வருகின்றது. இது மேற்கொண்டு டாலரின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
ஆக டெக்னிக்கலாகவும் தங்கம் விலையானது குறைந்தாலும், மீண்டும் உச்சம் தொடலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆக விலையானது குறையும்போது வாங்கலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 7.55 டாலர்கள் குறைந்து, 1982.90 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் கேப் அப் ஆகி மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலைபோல வெள்ளி விலை அவுன்ஸூக்கு 0.48% குறைந்து காணப்படுகின்றது. தற்போது சற்று குறைந்து, 23.308 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று மேலாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக, 10 கிராமுக்கு, 184 ரூபாய் குறைந்து, 58,850 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று கேப் டவுன் ஆகி கீழாகவே காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்மில் குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 304 ரூபாய் குறைந்து, 70,291 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று கீழாகவே காணப்படுகிறது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து, 5545 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து, 44,360 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 38 ரூபாய் அதிகரித்து, 6049 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 380 ரூபாய் அதிகரித்து, 60,490 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையும் இன்று பலத்த ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது கிராமுக்கு 30 பைசா அதிகரித்து, 76 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து, 76,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?



Click it and Unblock the Notifications