தங்கம் போகிற போக்கினை பார்த்தால் இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்குமோ தெரியவில்லை. ஏற்கனவே இந்தியாவில் இறக்குமதி வரி, ஜிஎஸ்டியால் விலை அதிகமாக உள்ள நிலையில், தற்போது அதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக சர்வதேச சந்தையிலும் கிடு கிடுவென ஏற்றம் கண்டு வருகின்றன.
அடித்தட்டு மக்கள் முதல் கொண்டு மேல் தட்டு மக்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் ஒரு உலோகம் தங்கமும் வெள்ளியும் தான்.
அதிலும் தங்கத்திற்கு சிறப்பு இடம் என்று கூறலாம். அதிலும் இந்தியா போன்ற பழமைவாதம் மிக்க நாடுகளில் திருமணம் முதல் இறுதி சடங்கு வரை தங்கம் இல்லாமல் இருக்காது எனலாம்.
சவரன் விலை
அந்தளவுக்கு மக்களின் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நிகழ்விலும் தங்கம் என்பது இல்லாமல் இருக்காது. அப்படி இருக்கும் நிலையில் இன்று தங்கம் விலையானது (22 கேரட்) இன்று மட்டும் சவரனுக்கு 760 ரூபாய் அதிகரித்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் கிராமுக்கு 95 ரூபாய் அதிகரித்து, சவரன் 33,848 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சொல்லப்போனால் சவரன் 34,000 ரூபாயை தொட இன்னும் 152 ரூபாய் மட்டுமே பாக்கி உள்ளது.
சுத்த தங்கம் என்ன விலை?
24 கேரட் சுத்த தங்கத்தின் விலையானது கிராமுக்கு 102 ரூபாய் அதிகரித்து 4,616 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே 10 கிராம் தங்கத்தின் விலையானது 46,160 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. கிட்டதட்ட 10 கிராம் தங்கத்திற்கு 1,020 ரூபாய் இன்று மட்டும் அதிகரித்துள்ளது.
இந்த மாதத்தில் விலை எப்படி?
நடப்பு மாதம் தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து வரும் தங்கம் விலையானது, இதுவரையில் இந்த மாதத்தில் ஒரு நாள் மட்டுமே விலையானது சற்று வீழ்ச்சி கொண்டுள்ளது. மற்ற ஐந்து நாட்களில் விலை அதிகரித்துள்ளது. மார்ச் 1ம் தேதியன்று சவரனுக்கு 31,888 ரூபாயாக இருந்த தங்கம் விலையானது, இன்று சவரனுக்கு 33,848 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆறு நாட்களில் சவரனுக்கு சுமார் 1,960 ரூபாய் அதிகரித்துள்ளது.
வெள்ளி விலை
தங்கம் விலையை போல் வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு கிராம் வெள்ளி விலையானது 51.08 ரூபாயாகவும், கிலோவுக்கு 1,230 ரூபாய் அதிகரித்து 51,080 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் 1 அன்று கிலோவுக்கு 48,500 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 51,080 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆக ஆறு நாட்களில் கிலோவுக்கு 2,580 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications