உலக நாடுகளில் தங்கம் விலை சரிந்தாலும் இந்தியாவில் உயர்வு.. ஏன்..?!

இந்தியாவில் தங்கம் விற்பனையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ஏற்கனவே தங்கம் மீதான இறக்குமதி வரியை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

இதே வேளையில், இந்தப் பட்ஜெட் அறிக்கையில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தங்க நகை மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்கள் மீது இறக்குமதி வரி உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் உலக நாடுகளில் தங்கம் விலை பெரிய அளவில் சரிந்த வேளையிலும் இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அது ஏன்..?!

தங்கம் விலை

தங்கம் விலை

கடந்த 2 வாரத்தில் தங்கம் விலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக அமெரிக்கப் பொருளாதாரம் ரெசிஷனுக்குள் நுழையும் என்ற அச்சம் அனைத்து தரப்பினரையும் பாதித்து வரும் வேளையில் புதன்கிழமை அந்நாட்டின் மத்திய வங்கி வேலைவாய்ப்பு எண்ணிக்கையில் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியது.

வட்டி விகித உயர்வு

வட்டி விகித உயர்வு

இதேபோல் இந்த வட்டி விகித உயர்வால் அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கையும் பெரிய அளவில் உயர்ந்து முதலீட்டு சந்தைக்குச் சாதகமாக மாறியதால் தங்கம் மீதான முதலீடுகள் பத்திர சந்தைக்கும், பங்குச்சந்தைக்கும் திரும்பியுள்ளது.

சர்வதேச சந்தை விலை

சர்வதேச சந்தை விலை

இதனால் சர்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1915 டாலரில் இருந்து 1865 டாலர் வரையில் சரிந்தது. இதேவேளையில் இன்றைய வர்த்தகத்தில் இந்தச் சரிவிலிருந்து முழுமையாக மீளவில்லை என்றாலும் 1879 டாலர் வரையில் உயர்ந்து தொடர்ந்து நிலைபெற்றுள்ளது.

MCX சந்தை விலை

MCX சந்தை விலை

ஆனால் இன்று இந்திய MCX சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை காலை வர்த்தகத்தில் 400 ரூபாய் வரையில் அதிகரித்து 56,980 ரூபாய் வரையில் உயர்ந்தது. பொதுவாக வெள்ளிக்கிழமையின் தாக்கம் திங்கட்கிழமை இருக்கும் ஆனால் இன்று தலைகீழாக உள்ளது.

அமெரிக்காவின் வட்டி விகிதம்

அமெரிக்காவின் வட்டி விகிதம்

இன்றைய வர்த்தகத்தில் இந்தியாவில் தங்கம் விலை உயர முக்கியமான காரணம் அமெரிக்காவின் வட்டி விகித உயர்வு, அதன் மூலம் டாலர் மதிப்பு மீண்டும் 103 என்ற அளவீட்டை டாலர் இன்டெகஸ் எட்டியது மூலம் தங்கம் விலை சர்வதேசச் சந்தையைக் காட்டிலும் இந்தியாவில் அதிகமாக உள்ளது.

ரீடைல் சந்தை விலை

ரீடைல் சந்தை விலை

ரீடைல் சந்தையில் தங்கம் விலை பல வரி விதிப்புக்குப் பின் விற்பனை செய்யப்படும் காரணத்தால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள்

அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள்

இந்திய பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகளின் வீழ்ச்சி மூலம் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் அதிகப்படியான விற்பனையைச் செய்தது வாயிலாக முதலீட்டைப் பாதுகாப்பான இடத்தில் வைக்கவும் தங்கம் மீது முதலீடு செய்யப்படுகிறது.

MCX சந்தை

MCX சந்தை

இன்று MCX சந்தையில் ஏப்ரல் மாதத்திற்கான 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் பியூச்சர் ஆர்டர் விலை 0.77 சதவீதம் அதிகரித்து 57,020 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 0.33 சதவீதம் அதிகரித்து 67,801 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

தங்கம் - பாதுகாப்பான முதலீடு

தங்கம் - பாதுகாப்பான முதலீடு

2022 ஆம் ஆண்டில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களைத் தாண்டி பெரிய பெரிய பொருளாதார நாடுகளும் தங்கம் மீது முதலீடு செய்து தனது பொருளாதாரத்தைக் காப்பாற்றிய நிலையும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+