Gold price updates: தங்கம் விலையானது இன்று சற்று சரிவில் காணப்படுகின்றது. எனினும் இது அவுன்ஸூக்கு 1900 டாலர்களுக்கு மேலாகவே காணப்படுகின்றது. இது மீண்டும் அவுன்ஸூக்கு 1915 டாலர்களை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பத்திர சந்தைகள் சற்றே ஏற்றத்தில் காணப்படும் நிலையில், தங்கம் விலையானது சற்றே குறைந்து காணப்படுகின்றது.
அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறியீடு குறித்தான தரவானது வெளியான நிலையில், தங்கம் விலையானது பெரியளவில் ஏற்றம் கண்டாலும், முடிவில் சற்று குறைந்தே முடிவடைந்துள்ளது.
டெக்னிக்கலாக சரிவு?
இன்றும் டெக்னிக்கலாக தங்கம் விலையானது சற்றே சரிவில் காணப்படும் நிலையில், இது மேற்கொண்டு சற்றே குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது இன்னும் 1899 டாலர்களை உடைத்தால் இது மேற்கொண்டு பெரியளவில் வீழ்ச்சி காணலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிலிக்கான் வேலி வங்கியை தொடர்ந்து அமெரிக்காவில் இன்னும் சில வங்கிகளும் பிரச்சனையில் இருப்பதாக தெரிகின்றது. ஆக இது நீண்டகால நோக்கில் பண்டமெண்டலாக தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
வட்டி அதிகரிப்பு
அமெரிக்காவின் டாலரின் மதிப்பும் பத்திர சந்தையும் இன்றும் மீண்டும் சற்றே ஏற்றம் காணத் தொடங்கியுள்ள நிலையில், தங்கம் விலையானது சரிவில் காணப்படுகின்றது. எனினும் இன்று வரையில் பணவீக்கம் என்பது உச்சத்தில் உள்ளதையே தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. ஆக வரவிருக்கும் கூட்டத்திலும் வட்டி விகிதம் அதிகரிக்க இது காரணமாக அமையலாம். இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 6.15 டாலர்கள் குறைந்து, 1904.80 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. எனினும் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் அவுன்ஸூக்கு, சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது 0.87% குறைந்து, 21.848 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலை, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. இது மீடியம் டெர்மில் வெள்ளி விலையானது சற்று குறைந்து பின்னர், அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி 10 கிராமுக்கு, 98 ரூபாய் குறைந்து, 57,385 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று கீழாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 334 ரூபாய் குறைந்து, 66,620 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரணம் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்படும் நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று குறைந்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 5380 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 43,040 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து, 5869 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து, 58,690 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையானது சர்வதேச சந்தையில் குறைந்து காணப்படும் நிலையில், ஆபரண வெள்ளி விலையனது இன்று கிராமுக்கு 0.50 பைசா அதிகரித்து, 72.50 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து, 72,500 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications