உலகம் என்ன ஆனாலும் சரி, தங்கத்துக்கான மவுசு மட்டும் அப்படியே தான் இருக்கிறது. அதற்கு தற்போதைய கொரோனா வைரஸ் ஒரு சிறந்த உதாரணம்.
தற்போது ஒட்டு மொத்த உலகத்தில் சுமாராக 3.92 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்கிறது. சுமாராக 17,100 பேர் இந்த கொரோனாவால் மரணித்து இருக்கிறார்கள்.
ஆனால் தங்கம், தன் போக்கில் டாப் கியரில் விலை ஏறிக் கொண்டு தான் இருக்கிறது.
சர்வதேச தங்கம் விலை
கடந்த மார்ச் 09, 2020 அன்று சர்வதேச தங்கம் விலை ஒரு அவுன்ஸுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 1,25,085 ரூபாய்க்கு வர்த்தகமானது. வரலாறு காணாத விலை உச்சம் தான். தன் பின் கொஞ்சம் விலை சரிந்து மார்ச் 19, 2020 அன்று 1,10,508 ரூபாய்க்கு வந்தது. ஆனால், கடந்த 3 நாட்களில் சர்வதேச தங்கம் விலை மீண்டும் டாப் கியரில் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.
எவ்வளவு உயர்வு
இன்று மார்ச் 24, 2020 செவ்வாய்க் கிழமை, சர்வதேச ஸ்பாட் தங்கத்தின் விலை அதிகபட்சமாக 1,23,054 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக சுமாராக கடந்த நான்கு நாட்களில் சர்வதேச தங்கம் விலை 1,23,054 - 1,10,508 = 12,546 ரூபாய் அதிகரித்து இருக்கிறது.
சென்னையில் எதிரொலி
சென்னையில் இன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 43,620 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சர்வதேச அளவில் தங்கம் விலை சுமாராக 12,500 ரூபாய் விலை ஏற்றம் கண்டு இருப்பது மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 76 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாகிக் கொண்டு இருப்பதால், சென்னை தங்கம் விலையும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.
எவ்வளவு அதிகரிப்பு
கடந்த மார்ச் 19, 2020 அன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, சென்னையில் 41,920 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆனால் இன்று மார்ச் 24, 2020 43,620 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. ஆக 43,620 - 41,920 = 1,700 ரூபாய் விலை அதிகரித்து விற்பனை ஆகி வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. ஆக பவுனுக்கு சுமார் 1,360 ரூபாய் அதிகரித்து இருக்கிறது.
22 கேரட்
22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த மார்ச் 19, 2020 அன்று 38,340 ரூபாய்க்கு வர்த்தகமானது. இன்று மார்ச் 24, 2020 -ல் அதே 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 40,073 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications