Gold price updates: தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 1970 டாலர்களுக்கு அருகில் வர்த்தகமாகி வருகின்றது. இது வரவிருக்கும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம், யுபிஎஸ் - கிரெடிட் சூசி என திட்டம் என பல விஷயங்களை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொண்டுள்ளனர்.
எனினும் மீடியம் டெர்மில் தங்கம் விலையில் சற்று அழுத்தம் இருக்கலாம். இது சற்று குறைந்து பின்னர் அதிகரிக்க வழிவகுக்கலாம்.
எப்படியிருப்பினும் சிறு முதலீட்டாளார்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது. ஏனெனில் அடுத்த சில நாட்களுக்கு ஏற்ற இறக்கம் என்பது இருக்கலாம். இது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
கவனமுடன் செயல்படுங்கள்
தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பும் சற்றே சரிவில் காணப்படும் நிலையில், இது 103.80 என்ற லெவலுக்கு ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கத்தின் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். எனினும் வரவிருக்கும் மத்திய வங்கி கூட்டத்தில் நடவடிக்கை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கோண்டு தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என்றாலும், பொருளாதாரம் குறித்தான தரவுகள் அதில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்பதால், முதலீட்டாளர்கள் மிக கவனமுடன் செயல்படுவது நல்லது.
இவ்வளவு அதிகரிக்குமா?
இது ஒரு புறம் எனில் தொடர்ந்து சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்து வரும் சூழலில், ஆபரணத் தங்கம் விலையும் சமீபத்திய நாட்களாக தொடர்ந்து மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது மீண்டும் இன்னும் உச்சம் தொடலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது விரைவில் 50,000 ரூபாயினை எட்டினாலும் அது ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் கூறப்படுகின்றது.
இதே இந்திய கமாடிட்டி சந்தையில் 10 கிராமுக்கு 70,000 ரூபாயினை கூட எட்டலாம். முதலீட்டு ரீதியாக தொடர்ந்து தேவையானது அதிகரித்து வரும் சூழலில், இதற்கான வாய்ப்பு என்பது மிக அதிகமாகவே உள்ளது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 5 டாலர்கள் அதிகரித்து, 1978.50 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. இது மீடியம் டெர்மில் சற்று தடுமாறினாலும், சற்று குறைந்து பின்னர்அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது 0.05% அதிகரித்து, 22.473 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. ஆக இதுவும் மீடியம் டெர்மில் சற்று தடுமாறினாலும், சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்து காணப்படும் நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று மாற்றமின்றி காணப்படுகின்றது. இது கிராமுக்கு 5560 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 44,480 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 6065 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 60,650 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையானது சர்வதேச சந்தையில் அதிகரித்து காணப்படும் நிலையில், ஆபரண வெள்ளி விலையனது இன்று கிராமுக்கு 74.40 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 74,400 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications