ஒரு மாத சரிவில் தங்கம் விலை.. இதை விட்டா வேற சான்ஸ் கிடைக்காது..!

தங்கம் விலை குறைவதைப் பார்க்கும் போது யாருக்குத் தான் தங்கம் வாங்க ஆசை இருக்காது, அப்படித் தான் இன்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை ஒருமாத சரிவை எட்டியுள்ளது. இதனால் நகை கடைகளுக்கு மக்கள் வருகை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஒரு பக்கம் கொரோனா தொற்றில் இருந்து மக்கள் மீண்டு வரும் வேளையில் சந்தையில் டிமாண்ட் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஜூலை மாதத்தில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு உள்ள தங்கத்தின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது.

மேலும் தங்கம் விலை குறைவாக இருக்கும்போதே வாங்குவது தான் சரி. இந்த வகையில் இன்றைய விலை நிலவரம் தங்கத்தைத் தேவைக்காக வாங்குவோருக்கும் சரி, முதலீட்டுக்கான வாங்குவோருக்கும் சரி சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளது.

 எம்சிஎக்ஸ் சந்தை

எம்சிஎக்ஸ் சந்தை

இன்று எம்சிஎக்ஸ் சந்தை வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.18 சதவீதம் வரையில் சரிந்து 47525 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. மேலும் காலை வர்த்தகத்தில் தங்கம் விலை 47460 ரூபாய் வரையில் குறைந்து, அதிகப்படியாக 47,574 ரூபாய்க்கும் உயர்ந்துள்ளது.

 MCX கோல்டு ஸ்பாட் சந்தை

MCX கோல்டு ஸ்பாட் சந்தை

இதேபோல் MCX கோல்டு ஸ்பாட் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை அகமதாபாத் சந்தையில் சுமார் 47,498 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இந்தியாவில் பெரிய அளவில் மாறாமல் இருப்பதற்கு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு மிக முக்கியக் காரணம்.

 வெள்ளி விலை

வெள்ளி விலை

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று எம்சிஎக்ஸ் பியூச்சர்ஸ் சந்தையில் சரிவடைந்துள்ள காரணத்தால் முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்ய நல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது. தற்போது எம்சிஎக்ஸ் சந்தையில் ஒரு கிலோ தங்கம் விலை 0.16 சதவீதம் குறைந்து 66,888 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

 சர்வதேச தங்கம் விலை

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை நேற்று அதிகப்படியாக 1,813 டாலர் அளவிலான உயர்வை அடைந்து நிலையில், இன்று 1,799 டாலர் வரையில் குறைந்துள்ளது. இதன் தாக்கம் இந்தியா சந்தையிலும் எதிரொலித்துள்ளது.

 அமெரிக்க டாலர் - இந்திய ரூபாய்

அமெரிக்க டாலர் - இந்திய ரூபாய்

மேலும் இந்தியாவில் தங்கம் விலை சரிய மிக முக்கியமான காரணம் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு மெல்ல மெல்ல சரிந்து 74.17 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படும் காரணத்தால், இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் விலையும் குறைந்து வருகிறது.

 நிலையற்ற தன்மை

நிலையற்ற தன்மை

இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் பங்குச்சந்தை மற்றும் பத்திர சந்தைகளில் நிலையற்ற தன்மை இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்கத்தைப் பாதுகாப்பு கருவியாகப் பயன்படுத்தலாம். அப்போது தங்கம் விலை உயர அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.

 முதலீடு செய்வோருக்கு அறிவுரை

முதலீடு செய்வோருக்கு அறிவுரை

எனவே தங்கம் மீது முதலீடு செய்வோர் அல்லது குழந்தைகள் திருமணம், நீண்ட கால முதலீடு போன்றவற்றுக்குத் தங்கம் வாங்க விரும்பினால் தங்கம் விலை குறைவாக இருக்கும் போதே வாங்குவது தான் சரி. எதிர்காலத்தில் சேமிப்புக்கு, சேமிப்பும் ஆச்சு, லாபத்திற்கு லாபமும் கிடைத்துவிடும்.

 முதலீட்டு சந்தை

முதலீட்டு சந்தை

இன்று முதலீட்டுச் சந்தையில் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை முடிவுகளும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம் குறித்த அறிவிப்புகள் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. அப்படி ரிசர்வ் வங்கி சொன்னது என்ன..? வாங்க ஷார்ட்டா பார்த்திடுவோம்.

 ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம்

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம்

கொரோனா தொற்று அலைகள் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தைக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் ரிசர்வ் வங்கி நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் ரெப்போ விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதம் என எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவித்துள்ளது.

 இந்திய பொருளாதார வளர்ச்சி

இந்திய பொருளாதார வளர்ச்சி

இதேபோல் 2021-22ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்பில் உலகின் பல முன்னணி நிதி நிறுவனங்கள் மற்றும் பொருளாதாரக் கண்காணிப்பு அமைப்புகள் குறைந்து வரும் நிலையில் ரிசர்வ் வங்கி தனது கணிப்பில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவித்துள்ளது.

 பொருளாதாரம் 9.5 சதவீத வளர்ச்சி

பொருளாதாரம் 9.5 சதவீத வளர்ச்சி


இதன் மூலம் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 9.5 சதவீத வளர்ச்சியும், 2022-23ஆம் நிதியாண்டில் 17.2 சதவீதமாக இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

 இந்திய நுகர்வோர் பணவீக்கம்

இந்திய நுகர்வோர் பணவீக்கம்

இதேவேளையில் உலக நாடுகள் மற்றும் அரசு பயந்து நடுக்கும் பணவீக்க கணிப்பில், இந்திய நுகர்வோர் பணவீக்கம் 2021-22ஆம் நிதியாண்டில் 5.2 வரையில் உயரும் எனத் தெரிவித்துள்ளார் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ். முன்பு நுகர்வோர் பணவீக்கம் அளவீடு (CPI) 5.1 சதவீதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+