இன்றும் பலத்த சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா? நிபுணர்களின் கணிப்பு என்ன?

கடந்த இரண்டு வாராங்களாகவே முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, தங்கம் விலையானது தொடர்ச்சியாக சரிந்து வருகின்றது.

இது தங்கம் வாங்க நினைபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஒரு புறம் நிபுணர்கள் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்று கூறி வரும் நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக சரிந்து வருவது முதலீட்டாளர்களிடையே சற்று குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் தங்கம் விலை இன்னும் குறையுமா? அல்லது நீண்டகால நோக்கில் வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எம்சிஎக்ஸ்- மாலை 5 மணிக்கு தான் தொடங்கும்

எம்சிஎக்ஸ்- மாலை 5 மணிக்கு தான் தொடங்கும்

இந்திய கமாடிட்டி வர்த்தகமானது இன்று குருநானக் ஜெயந்தி என்பதால் சந்தை மாலை 5 மணிக்கே தொடங்கும். இதனால் இந்த சந்தையில் தற்போதைய ஒட்டுமொத்த தாக்கமும் இருக்கும் என்பதால், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது. ஏனெனில் சர்வதேச சந்தையில் அந்தளவுக்கு வீழ்ச்சி கண்டு வருகிறது. சொல்லப்போனால் கடந்த மாதத்திற்கு பிறகு இந்த குறைந்தபட்ச விலையை தற்போது எட்டுகிறது. ‘

காமெக்ஸ் தங்கம் நிலவரம்

காமெக்ஸ் தங்கம் நிலவரம்

சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு வாரங்களாகவே தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் தங்கம் விலையானது, இன்றும் பலத்த வீழ்ச்சி கண்டு வருகிறது. தற்போது அவுன்ஸுக்கு 19.35 டாலர்கள் குறைந்து, 1768.40 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது கடந்த அமர்வின்போது ஏற்பட்ட குறைந்தபட்ச விலையையும் உடைத்து காட்டியுள்ளதால், விலை சரியும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்கி வைப்பது நல்லது.

தங்கம் விலை இன்னும் குறையலாம்

தங்கம் விலை இன்னும் குறையலாம்

கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, தங்கம் விலையானது தொடர்ச்சியாக சரிந்து வருகிறதே என்ன காரணம். ஆக இது தங்கம் வாங்குபவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. எனினும் டெக்னிக்கலாக பார்க்கும் போது தங்கம் விலை இன்னும் குறையும் விதமாகவே காணப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலை கூட 1% மேல் தான் குறைந்திருந்தது. ஆனால் வெள்ளியின் விலையானது 2.69% வீழ்ச்சி கண்டுள்ளது. தொடர்ச்சியாக கடந்த இரண்டு வாரங்களாக சரிவினை கண்டு வரும் வெள்ளி விலையானது, இன்றும் பலத்த சரிவினைக் கண்டுள்ளது. தற்போது 0.601 டாலர்கள் குறைந்து, 22.035 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள்

கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள்

தங்கம் விலையானது முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, நான்கு மாதங்களில் இல்லாத அளவு வீழ்ச்சி கண்டு வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்தியே. கொரோனா தடுப்பூசியின் முடிவுகள் சாதகமாக வந்து கொண்டுள்ள நிலையில், அது சர்வதேச அளவில் நிலவி நெருக்கடியான நிலையை மாற்றும் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.

பட்டையை கிளப்பும் பங்கு சந்தைகள்

பட்டையை கிளப்பும் பங்கு சந்தைகள்

சர்வதேச பங்கு சந்தைகள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வரும் நிலையில், பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் விலை குறைந்து வருகின்றது. தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்துவிட்டால், பொருளாதாரம் விரைவில் மீண்டு வரும். இதன் காரணமாக சந்தைகள் ஏற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அன்னிய முதலீடுகள் பங்கு சந்தைகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதன் காரணமாகவும் தங்கம் விலை சரிந்து வருகின்றது.

வலுவடையும் டாலர் மதிப்பு

வலுவடையும் டாலர் மதிப்பு

தங்கத்தின் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பு, தடுப்பூசி பற்றிய சாதகமான விஷயத்தினால் சற்று வலுவாக காணப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலை சரிய காரணமாக அமைந்துள்ளது. மேலும் அமெரிக்கா ஊக்கத் தொகை பற்றிய அறிவுப்புகள் விரைவில் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலை இன்னும் சரிய காரணமாக அமைந்துள்ளது.

இரண்டாம் கட்ட கொரோனா பரவல்

இரண்டாம் கட்ட கொரோனா பரவல்

ஒரு புறம் தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டு இருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சில பகுதிகளில் இரண்டாம் கட்ட கொரோனா பரவலானது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பூசியே செயல்பாட்டுக்கு வந்தாலும், அது அனைவருக்கும் கிடைக்க, இன்னும் சில காலம் ஆகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது அதிக விலை சரிவினை தடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று முதலீட்டாளர்கள் கூறினாலும், மீடியம் டெர்மில் தங்கம் விலை சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஏனெனில் பல காரணிகளும் தங்கம் விலை குறைய ஏதுவான காரணிகளாகவே உள்ளன. ஆக நீண்டகால நோக்கில் வாங்குபவர்கள் மட்டும் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இன்ட்டிரா டே வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+