Gold: தங்கம் விலையானது டாலர் மதிப்பு தொடர்ந்து மீண்டும் வலுவடைய தொடங்கியுள்ள நிலையில், அழுத்தத்தில் காணப்படுகின்றது.அமெரிக்காவின் பத்திர சந்தையும் ஏற்றத்தில் காணப்படுகின்றது. இதற்கிடையில் தான் இன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சரிவில் காணப்படுகின்றது.
எப்படியிருப்பினும் தொடர்ந்து வெளியாகவிருக்கும் தரவுகளானது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்த கூடும்.
ஆக அப்படி வெளியாகவிருக்கும் தரவுகள் டாலரின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் தங்கம் விலையில் அதிகளவிலான ஏற்ற இறக்கம் என்பது காணப்படுகின்றது.
டாலரின் மதிப்பு ஏற்றம்
எப்படியிருப்பினும் தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்த டாலரின் மதிப்பானது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது சந்தைக்கு சாதகமான ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. இது 102.65 என்ற லெவலில் காணப்படுகிறது. இது தங்கத்தில் முதலீடுகளையும் குறைக்க வழிவகுக்கலாம். வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைந்து, இது பத்திர சந்தை, பங்கு சந்தைகளில் முதலீடுகள் அதிகரிக்க வழிவகுக்கலாம்.
டெக்னிக்கல் பேட்டர்ன்
டெக்னிக்கலாகவும் தங்கம் விலையானது சற்றே குறையலாம் என்ற நிலையிலேயே காணப்படுகிறது. குறிப்பாக 1953 டாலர் என்ற லெவலை உடைத்தால், பெரியளவில் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே இந்திய பியூச்சர் சந்தையினை பொறுத்தவரையில் இன்று விடுமுறையாகும். எனினும் மாலை அமர்வானது இருக்கும் நிலையில், இது தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 7.60 டாலர்கள் குறைந்து, 1976.95 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் கேப் டவுன் ஆகி கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை அவுன்ஸூக்கு 0.16% அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது சற்று அதிகரித்து, 23.503 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று கீழாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது குறைந்திருந்தாலும், ஆபரண தங்கம் விலையானது இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து, 5565 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து, 44,520 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 49 ரூபாய் அதிகரித்து, 6038 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 490 ரூபாய் அதிகரித்து, 60,380 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையும் இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது கிராமுக்கு 20 பைசா அதிகரித்து, 76.20 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 76,200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்களுக்கு செபி தலைவர் கூறும் அட்வைஸ்

டாடா மோட்டார்ஸ் பங்குகளை கைகழுவிய ராதாகிஷன் தமானி: சில்லறை முதலீட்டாளர்களே கவனம்..

பணக்காரர்களின் ரகசியப் பாதை! ஏன் ராபர்ட் கியோசாகியின் முதலீட்டு டிப்ஸ் இன்றும் ஒரு மந்திரம்?

நிறைய MFs-ல முதலீடு செய்தால் லாபம் அதிகமா கிடைக்குமா? இந்த தவறை ஒருபோதும் செய்யாதீங்க?



Click it and Unblock the Notifications