தங்கம் விலையானது முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, கடந்த நான்கு வர்த்தக அமர்வுகளாக பலத்த சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று கிடு கிடு ஏற்றத்தில் காணப்படுகிறது.
நிபுணர்கள் சொன்னதைப்போல, கடந்த வெள்ளிக்கிழமையன்று எல்லா முக்கிய சப்போர்ட் லெவலையும் உடைத்துக் காட்டியது. இனி எங்கு செல்லுமோ? இன்னும் எவ்வளவு குறையுமோ என்று பலத்த எதிர்ப்பார்ப்புகள் நிலவியது.
இந்த நிலையில் குறைந்த தங்கம் விலையானது பலரையும் வாங்க தூண்டியுள்ளது. இதனால் தங்கம் விலையானது சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?
இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? இரு சந்தைகளிலும் வெள்ளி விலை எவ்வளவு? தங்கத்திற்கு சாதகமான, பாதகமான காரணிகள் என்னென்ன? நீண்டகால நோக்கில் இன்னும் தங்கம் விலை இனி எப்படி இருக்கும்? வரும் வாரத்தில் எப்படி இருக்கும்? என பலவற்றையும் தற்போது பார்க்கவிருக்கிறோம்.
comex தங்கம் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலையானது பலத்த ஏற்றத்தினைக் கண்டு வருகிறது. தற்போது அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 21.35 டாலர்கள் அதிகரித்து, 1750.20 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, சற்று மேலாக தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலை என்பதையும் உடைத்துக் காட்டவில்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.
comex வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தின் விலையை போலவே வெள்ளியின் விலையும் இன்று பலத்த ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 2.02% அதிகரித்து, 26.975 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வு விலையை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியுள்ளது. எனினும் அதோடு முந்தைய அமர்வின் உச்சம், குறைந்தபட்ச விலை இரண்டையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.
MCX தங்கம் விலை
இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது இன்று காலை தொடக்கத்தில் இருந்தே, சர்வதேச சந்தையின் எதிரொலியாக ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 206 ரூபாய் அதிகரித்து, 45,942 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் தொடக்க விலையானது நேற்றைய முடிவு விலையை விட, சற்று மேல் தொடங்கியுள்ளது.
MCX வெள்ளி விலை
இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும், சர்வதேச சந்தையின் எதிரொலியாக ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 739 ரூபாய் அதிகரித்து, 68,000 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. ஆக இன்னும் சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் முந்தைய அமர்வின் உச்சவிலையை உடைக்கவில்லை. வெள்ளியில் மார்ச் காண்டிராக்ட் இந்த வாரத்தில் எக்ஸ்பெய்ரி என்பதால் அடுத்த காண்டிராக்டில் வர்த்தகம் செய்வது நல்லது.
அதிகரித்து வரும் பத்திர லாபம்
அமெரிக்காவில் அதிகரித்து வரும் 10 வருட பத்திர லாபம், கடந்த வாரத்தில் மட்டும் 1.60% ஏற்றம் கண்டது. இதன் காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பும் ஏற்றத்தினை கண்டது. இதனால் தங்கத்தின் மதிப்பானது பலத்த சரிவினைக் கண்டது. இது தங்கத்தின் மீதுள்ள ஈர்ப்பினை முதலீட்டாளர்களிடம் குறைத்துள்ளது. இது தங்கம் விலை மேலும் சரிய காரணமாக அமைந்துள்ளது. எனினும் குறைந்த விலையானது பலரையும் வாங்க தூண்டியுள்ளதால் இன்று சற்று அதிகரித்துள்ளது.
முக்கிய லெவல்கள்
தங்கத்தின் விலையானது மீண்டும் அதிக ஏற்ற இறக்கம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அதன் முக்கிய சப்போர்ட் லெவல், இந்திய சந்தையில் 45,550 - 45,300 ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 46,000 - 46,300 ரூபாயாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதே வெள்ளியின் ரெசிஸ்டன்ஸ் லெவல் 69,500 - 70,200 ரூபாயாகும். இதே சப்போர்ட் லெவல் 68,300 - 67, 700 ரூபாய் என்றும் கணித்துள்ளனர்.
தங்கத்திற்கு ஆதரவாக பணவீக்கம்
தற்போது உலகளவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டு வரும் நிலையில், பொருளாதாரத்தினை ஊக்குவிக்க இன்னும் ஊக்கத்தொகைகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு பத்திர சந்தையும் மீண்டு வந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் பணவீக்கம் பற்றிய கவலையும் எழுந்துள்ளது. இது பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்று கூறப்படுகிறது.
இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?
தங்கம் விலையானது மீடியம் டெர்மில் தங்கம் விலை சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் நிபுணர்கள் 1750 டாலர்களை உடைத்தால் இன்னும் குறையலாம் என்றே கடந்த வெள்ளிக்கிழமையன்று கணித்திருந்தனர். ஆக தற்போது தங்கம் விலை சற்று அதிகரித்திருந்தாலும், மீண்டும் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!



Click it and Unblock the Notifications