3 நாட்களுக்கு பிறகு சரிந்த தங்கம் விலை.. நல்ல சான்ஸ் தான்.. மிஸ் பண்ணிட்டோமோ?

தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சரிவினைக் கண்டுள்ளது. இது மேற்கொண்டு குறையுமா? அப்படி குறைந்தால் எவ்வளவு குறையும்? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்றே சரிவில் காணப்படும் நிலையில், இந்திய சந்தையிலும் சரிவில் காணப்படுகின்றது.

கடந்த அமர்வில் இந்தியாவில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 57,000 ரூபாயினை தாண்டிய நிலையில், இன்றும் கிட்டதட்ட அந்த லெவலை எட்டியுள்ளது.

தங்கம் விலை ஏற்றம்

தங்கம் விலை ஏற்றம்

நடப்பு ஆண்டில் இதுவரையில் தங்கம் விலையானது 4% ஏற்றத்தினை கண்டுள்ளது. இது தொடர்ந்து அழுத்தத்தில் காணப்பட்ட டாலரின் மதிப்பு, சர்வதேச சந்தையில் நிலவி வரும் அழுத்தம் என பல காரணிகளும் தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் டாலர் இன்டெக்ஸ் ஆனது கிட்டதட்ட 15% சரிவினைக் கண்டுள்ளது.

கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள்

கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள்

தொடர்ந்து மந்த நிலையில் இருந்து வரும் பொருளாதாரம், பணவீக்கம், வட்டி விகிதம், டாலர் மதிப்பு சரிவு, பட்ஜெட் 2023ல் தங்கம் வரி குறைப்பு குறித்த எதிர்பார்ப்பு என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆக மீடியம் டெர்மில் சரிவது என்பதும் நீண்டகால நோக்கில் வாங்க ஒரு நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

 

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு, 8.55 டாலர்கள் குறைந்து, 1927.15 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலை, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை அவுன்ஸூக்கு 1.03% குறைந்து, 23.527 டாலராக காணப்படுகிறது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று மேலாகவே காணப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 155 ரூபாய் குறைந்து, 56,814 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. இது பிப்ரவரி 3 அன்று எக்ஸ்பெய்ரி ஆகவுள்ள நிலையில், ரோலோவர், புராபிட் புக்கிங் இருக்கலம். ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலை குறைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சர்வதேச சந்தையில் எதிரொலியாக சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 428 ரூபாய் குறைந்து, 68,134 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் பொறுத்திருந்து வாங்கலாம்.

ஆபரணம் தங்கம் விலை

ஆபரணம் தங்கம் விலை

ஆபரண தங்கம் விலையானது இன்று மூன்று நாட்களுக்கு பிறகு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 5345 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 42,760 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து, 5831 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து, 58,310 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

தங்கம் விலையானது குறைந்தாலும், ஆபரண வெள்ளியின் விலையானது இன்று மாற்றமின்றி காணப்படுகின்றது. இது கிராமுக்கு 74 ரூபாயாக விற்பனை செய்யபட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 74,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+