Gold price update: தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் 9 மாத உச்சத்தில் காணப்படுகின்றது. இது டாலரின் மதிப்பானது சற்றே தடுமாற்றத்தில் இருந்து வரும் நிலையில், தங்கம் விலை உச்சத்தில் காணப்படுகின்றது.
இதற்கிடையில் அமெரிக்காவின் ஜிடிபி விகிதமானது வரவிருக்கும் நிலையில், இது வரவிருக்கும் பெடரல் வங்கி கூட்டத்தில் தங்கம் விலையினை தீர்மானிக்கலாம்.
இது வெளியாகவிருக்கும் ஜிடிபி தரவானது பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதை சுட்டிக் காட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரெசசன் அச்சத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தங்கம் & வெள்ளி விலை
எப்படியிருப்பினும் டாலர் மற்றும் பத்திர சந்தையானது மந்த நிலையில் இருக்கும் நிலையில், இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதற்கிடையில் உற்பத்தி குறித்தான தரவு, தொழில்துறை வளர்ச்சியானது மேம்படும்போது அது வெள்ளியின் விலையினை ஊக்குவிக்கலாம். தங்கம் விலையினையும் ஊக்குவிக்கலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு, 4.45 டாலர்கள் அதிகரித்து, 1947.05 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 23.968 டாலராக காணப்படுகிறது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று மேலாகவே காணப்படுகிறது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் & வெள்ளி விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் இன்று விடுமுறையாகும். ஆக இதன் தாக்கம் நாளை இருக்கலாம். எனினும் கடந்த அமர்வில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 57,005 ரூபாய் என்ற லெவலிலும், இதே வெள்ளி விலை கிலோவுக்கு 203 ரூபாய் அதிகரித்து, 68,745 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.
ஆபரணம் தங்கம் விலை
ஆபரண தங்கம் விலையானது நேற்று சற்றே குறைந்திருந்த நிலையில், இன்று கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து, 5380 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து, 43,040 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 38 ரூபாய் குறைந்து, 5793 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 380 ரூபாய் குறைந்து, 58,930 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
ஆபரண வெள்ளியின் விலையானது இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து, 75 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 1000 ரூபாய் அதிகரித்து, 75,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?

உக்கிரமடையும் ஈரான் போர்: தங்கம், வெள்ளி விலை எவ்வளவு வரை உயரும்? இப்போது நகை வாங்கலாமா வேண்டாமா?

தங்கம் விலை 2 நாள் சரிவுக்கு பின்பு தடாலடி உயர்வு.. வெள்ளி விலை 3 லட்சத்தை தொட்டது..!!

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

10 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய தங்க சந்தையில் தள்ளுபடி – சீனாவில் பிரீமியம் விலை? ஏன்?

முதலீட்டாளர்களே உஷார்! இஸ்ரேல்-ஈரான் போர்: உங்கள் சேமிப்பை பாதுகாப்பா வச்சுக்கோங்க?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:



Click it and Unblock the Notifications