சும்மா எகிறி அடிக்கும் தங்கம் விலை.. போகிற போக்கை பார்த்தால் நினைக்க மட்டும் தான் முடியும் போல?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Gold price update: தங்கம் விலையானது வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்றும் சற்றே ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு தங்கம் விலை அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 

தொடர்ந்து டாலரின் மதிப்பானது அழுத்தத்தில் காணப்படும் நிலையில், இது தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது.

இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 57,050 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. இதே வெள்ளின் விலையானது கிலோவுக்கு 63,301 ரூபாயாக உச்சத்தில் காணப்படுகின்றது.

தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தம்.. ஆபரண தங்கம் விலை குறையுமா..நிபுணர்களின் கணிப்பு? தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தம்.. ஆபரண தங்கம் விலை குறையுமா..நிபுணர்களின் கணிப்பு?

ஜிடிபி எப்படியிருக்கும்?

ஜிடிபி எப்படியிருக்கும்?

தங்கம் விலையினை நிர்ணய செய்யும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பானது அழுத்தத்தில் காணப்படும் நிலையில், இது தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.

இதற்கிடையில் இந்த வாரத்தில் வெளியாகவிருக்கும் GDP குறித்தான தரவானது வெளியாகவுள்ளது. ஆக இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய தரவுகள்

முக்கிய தரவுகள்


டாலரின் மதிப்பானது தடுமாற்றத்தில் காணப்படும் அவுன்ஸூக்கு 1936 டாலராக இருந்து வருகின்றது. நிபுணர்கள் வரவிருக்கும் பொருளாதாரம் குறித்த தரவுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். குறிப்பாக அடுத்த வாரம் நடக்கவிருக்கும் பெடரல் ஓபன் மார்கெட் கமிட்டி கூட்டத்தினை முதலீட்டாளர்கள் கண்கானித்து வருகின்றனர்.இது தவிர உற்பத்தி குறித்தான தரவு, ஜிடிபி என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

பங்கு சந்தை & பத்திர சந்தை ஏற்றம்
 

பங்கு சந்தை & பத்திர சந்தை ஏற்றம்

அமெரிக்காவின் பங்கு சந்தையானது மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் பத்திர சந்தையும் ஏற்றம் கண்டு வருகின்றது. இந்த போக்கு தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீட்டினை குறைக்கலாம். இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.

பட்ஜெட் 2023

பட்ஜெட் 2023

வரவிருக்கும் பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி வரியானது குறைக்கப்பட வேண்டும் என்ற பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இது தற்போது 15% ஆக இருக்கும் நிலையில், இது 7.5% ஆக குறைக்கப்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இது வர்த்தக பற்றாக்குறையை குறைக்கவும், ரூபாய்க்கு ஆதரவளிக்கவும் அதிகரிக்கப்பட்டது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு பெரியளவில் மாற்றமின்றி, 1936.60 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை அவுன்ஸூக்கு காலையில் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது சற்று அதிகரித்து, 24.090 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று மேலாகவே காணப்படுகிறது. இது மேற்கொண்டு மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம். இது மீண்டும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 274 ரூபாய் அதிகரித்து, 57,091 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கிலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சர்வதேச சந்தையில் எதிரொலியாக சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 379 ரூபாய் அதிகரித்து, 68,318 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. நீண்டகால நோக்கிலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரணம் தங்கம் விலை

ஆபரணம் தங்கம் விலை

ஆபரண தங்கம் விலையானது இன்று கிராமுக்கு 32 ரூபாய் அதிகரித்து, 5355 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 256 ரூபாய் அதிகரித்து, 42,840 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது வரவிருக்கும் நாட்களில் மேற்கொண்டு அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்த, 5842 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 350 ரூபாய் அதிகரித்து, 58,420 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

தங்கம் விலையானது அதிகரித்தாலும், ஆபரண வெள்ளியின் விலையானது இன்று சற்று குறைந்துள்ளது. இது கிராமுக்கு 70 பைசா குறைந்து, 74 ரூபாயாக விற்பனை செய்யபட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து, 74,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold rate today surge to new high: its may move further highs

Gold rate today surge to new high: its may move further highs
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X