உச்சத்திலிருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.6,000 வீழ்ச்சி.. இது நல்லா இருக்கே.. இப்போது வாங்கலாமா!

கொரோனா பீதியின் மத்தியில் தங்கம் விலையானது கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத அளவு ஏற்றம் கண்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த எட்டு தினங்களில் 7 நாட்கள் தங்கம் விலை குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிலும் காலையில் சற்று ஏற்றம் காணுவது போல் ஏற்றம் கண்டு வந்தாலும், மாலை வேளையில் மீண்டும் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எம்சிஎக்ஸ் சந்தையில் விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் விலை

இந்த நிலையில் எம்சிஎக்ஸ்-சில் காலையில் 1.59% வீழ்ச்சி கண்டு 39,090 ரூபாயாக வீழ்ச்சி கண்டிருந்தது. அதாவது 633 ரூபாய் வீழ்ச்சி கண்டிருந்தது. இது கடந்த எட்டு நாட்களில் ஏழாவது நாள் சரிவாகும். இந்த பியூச்சர் கோல்டின் விலையானது அண்மையில் 45,000 என்ற உச்ச விலையினை தொட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு வீழ்ச்சியா?

இவ்வளவு வீழ்ச்சியா?

ஆனால் அதன் பின்னர் சர்வதேச சந்தையில் கண்டு வரும் வீழ்ச்சி காரணமாக, எம்சிஎக்ஸ் சந்தையிலும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. ஆக அதன் சமீபத்திய உச்ச விலையுடன் ஒப்பிடும்போது அதன் வீழ்ச்சி சுமார் 6000 ரூபாயாகும். ஆக குறைந்தபட்சம் கடந்த மாத காலத்தில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்றம் கண்டு வந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது வீழ்ச்சியில் தான் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தை நிலவரம்

சர்வதேச சந்தை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலை டாலரில் இன்று காலையில் அவுன்ஸூக்கு 10 டாலர்கள் வரை குறைந்து 1,467.50 டாலர்களாக குறைந்தது. எனினும் அந்த வீழ்ச்சியானது தொடர்ச்சியாக கைகொடுக்கவில்லை என்பதே உண்மை. ஏனெனில் தற்போது 0.88% அதிகரித்து 1,490.85 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை

சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் வெள்ளி விலையானது தற்போது பெரிதாக மாற்றம் இல்லை என்றாலும், 2.53% ஏற்றம் கண்டு 12.065 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. தங்கம் விலை கடந்த 8 தினங்களில் 7 தினங்கள் குறைந்ததாக கூறப்பட்டாலும், வெள்ளி விலையும் தொடர்ந்து 8 தினங்களும் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எம்சிஎக்ஸ் வெள்ளி

எம்சிஎக்ஸ் வெள்ளி

சர்வதேச சந்தையின் எதிரொலியாக, எம்சிஎக்ஸ் சந்தையிலும் வெள்ளியின் விலையும் கடந்த எட்டு தினங்களுக்கும் மேலாக தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. தங்கத்தினை போல அல்லாமல் வெள்ளி ஆபரணத்திற்காக அதிகமாக உபயோகப்படுத்தப் படுவதில்லை. எனினும் சீனா போன்ற முக்கிய நாடுகளின் தொழில்சாலைகளில் எந்திர தயாரிப்புகளின் போது பயன்படுத்தப்படுகிறது. சீனாவில் கொரோனாவால் தொழில் சாலைகள் முடங்கியுள்ள நிலையில், வெள்ளியின் பயன்பாடும் தேவையும் முடங்கியுள்ளது. இதனால் வெள்ளி விலை தங்கத்துடன் ஒப்பிடும்போது அதிக அளவு ஏற்றம் காணவில்லை என்றே கூறலாம். எனினும் தற்போது எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் வெள்ளி விலையானது 533 ரூபாய் அதிகரித்து 34,445 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

தங்க ஆபரண விலை

தங்க ஆபரண விலை

சென்னையை பொறுத்தவரையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 3,940 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து, 31,520 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. இதே போல் சுத்தமான தங்கத்தினை பொறுத்தவரையில் கிராமுக்கு 4,298 ரூபாயாகவும், இதே சுத்தமான 8 கிராம் தங்கம் விலை 34,384 ரூபாயாகவும் அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது.

ஆபரண வெள்ளி

ஆபரண வெள்ளி

வெள்ளி விலையினை பொறுத்தவரையில் நேற்றைய விலையில் மாற்றமில்லை என்றே கூறலாம். கிராமுக்கு 41.78 ரூபாயாகவும், இதே கிலோ வெள்ளியின் விலை 41,780 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக மார்ச் 6 அன்று 51,080 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட விலையானது, குறைந்தபட்சமாக 41,780 ரூபாயாக மார்ச் 17 அன்று விற்பனை செய்யப்பட்ட விலையாக உள்ளது. வெள்ளி விலையும், கடந்த 17 தினங்களில் மட்டும் 9,300 ரூபாய் குறைந்துள்ளது கவனிக்கதக்கது.

நிகழ்ச்சிகள் ரத்து

நிகழ்ச்சிகள் ரத்து

கொரோனா பீதியின் காரணமாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்க்குமாறு அரசு கூறியுள்ள நிலையில், திருமணம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் தங்கத்தின் தேவையும் குறைந்துள்ளது. மேலும் தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் மக்கள் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர். ஆக இந்த விலை ஏற்ற இறக்கங்கள் அவ்வளவாக மக்களை பாதிக்காது என்றே கூறலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+