சூப்பர் சரிவில் தங்கம் விலை.. நிபுணர்கள் சொன்னதெல்லாம் நடந்துவிடும் போலிருக்கே..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது முதலீட்டாளர்களுக்கும், தங்க ஆர்வலர்களுக்கும் சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, இன்றும் மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது.

நேற்று காலை நேர வர்த்தக நேர அமர்வில் வலுவான ஏற்றத்தினைக் கண்ட நிலையில், பிற்பகுதியில் மீண்டும் சரிவினைக் கண்டு முடிவடைந்த நிலையில் இன்று மீண்டும் சரிவில் காணப்படுகிறது.

நிபுணர்கள் சொன்னதைப்போல, கடந்த வெள்ளிக்கிழமையன்று எல்லா முக்கிய சப்போர்ட் லெவலையும் உடைத்துக் காட்டியது. இனி எங்கு செல்லுமோ? இன்னும் எவ்வளவு குறையுமோ என்று பலத்த எதிர்ப்பார்ப்புகள் நிலவியது.

தங்கம் விலை சரிவினைக் காணும்

தங்கம் விலை சரிவினைக் காணும்

அதோடு நிபுணர்கள் 1750 டாலர்களை உடைத்தாலே, இன்னும் சரிவினைக் காணும். எனினும் குறைந்த தங்கம் விலையானது பலரையும் வாங்க தூண்டும். ஆனால் தங்கம் விலையானது செல்லிங் பிரஷரில் இருப்பதால் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது என கூறியிருந்தனர். ஆக நிபுணர்கள் கூறியதை போல் நேற்று சற்று ஏற்றம் கண்டாலும், மீண்டும் சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது.ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்குவதே நல்லது.

இன்று என்னவெல்லாம் பார்க்கபோகிறோம்?

இன்று என்னவெல்லாம் பார்க்கபோகிறோம்?

அதெல்லாம் சரி, இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? இந்த இரு சந்தைகளிலும் வெள்ளி விலை எவ்வளவு? தங்கத்திற்கு சாதகமான, பாதகமான காரணிகள் என்னென்ன? நீண்டகால நோக்கில் இன்னும் தங்கம் விலை இனி எப்படி இருக்கும்? வரும் வாரத்தில் எப்படி இருக்கும்? என பலவற்றையும் தற்போது பார்க்கவிருக்கிறோம்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வருகிறது. தற்போது அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 11.20 டாலர்கள் குறைந்து, 1711.70 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. அதோடு முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே வெள்ளியின் விலையும் இன்று பலத்த சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 2.% குறைந்து, 26.146 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வு விலையை விட, இன்று சற்று கீழாகத் தொடங்கியுள்ளது. எனினும் அதோடு முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

இந்திய சந்தையில் தங்கம் விலை நிலவரம்

இந்திய சந்தையில் தங்கம் விலை நிலவரம்

இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது இன்று காலை தொடக்கத்தில் இருந்தே, சர்வதேச சந்தையின் எதிரொலியாக சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 260 ரூபாய் குறைந்து, 45,048 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் தொடக்க விலையானது நேற்றைய முடிவு விலையை விட, கீழாகத் தொடங்கியுள்ளது. அதோடு முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை நிலவரம்

இந்திய சந்தையில் வெள்ளி விலை நிலவரம்

இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும், சர்வதேச சந்தையின் எதிரொலியாக சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 1264 ரூபாய் குறைந்து, 66,158 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. குறைந்த பட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. எனினும் மார்ச் காண்டிராக்ட் இந்த வாரத்தில் எக்ஸ்பெய்ரி என்பதால் அடுத்த காண்டிராக்டில் வர்த்தகம் செய்வது நல்லது. எப்படியிருந்தாலும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

Array

Array

தங்கம் விலையானது கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்துடன் ஒப்பிடும்போது 11,000 மேலும், இதே வெள்ளியின் விலையானது 10,000 ரூபாய்க்கு மேலும் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால முதலீட்டாளர்கள் பாதுகாப்பு காரணம் கருதியும், தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது பலத்த சரிவில் காணப்படுவதால் வாங்கலாம். இது தங்கம் மற்றும் வெள்ளி விலைக்கு ஆதரவாக அமையலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பத்திர லாபம் Vs பணவீக்கம்

பத்திர லாபம் Vs பணவீக்கம்

அமெரிக்காவில் அதிகரித்து வரும் 10 வருட பத்திர லாபம், கடந்த வாரத்தில் மட்டும் 1.60% ஏற்றம் கண்டது. இதன் காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பும் ஏற்றத்தினை கண்டது. இது தான் தங்கம் விலை சரிய முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஒரு வேளை பத்திர லாபத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அது தங்கத்தில் எதிரொலிக்ககூடும். அப்போது தங்கம் விலையில் மாற்றம் வரலாம்.

முதலீட்டாளர்களின் ஆர்வம்

முதலீட்டாளர்களின் ஆர்வம்

குறைவான விலையானது நீண்டகால முதலீட்டாளர்களை வாங்க தூண்டும் என்பதால், தங்கம் விலையானது பெரியளவில் சரிவினை தடுக்கலாம். எனினும் தற்போது சற்று ரிஸ்கியான முதலீடுகளாக ஈக்விட்டிகள் மற்றும் கிரிப்டோகரன்சிகள் போன்ற முதலீடுகள் முதலீட்டாளர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. இவை தங்கத்தோடு போட்டியிடலாம். அதேசமயம் ஈக்விட்டி சந்தையில் ஏதேனும் கரெக்ஷன் இருக்கும் பட்சத்தில் மீண்டும் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இதற்கிடையில் நிபுணர்கள் அடுத்த மூன்று - நான்கு மாதங்களில் தங்கத்தின் விலையானது அவுன்ஸூக்கு 1960 டாலர்களை தொடலாம் என்றும் கணித்துள்ளனர்.

தங்கத்தின் முக்கிய லெவல்கள்

தங்கத்தின் முக்கிய லெவல்கள்

தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவல், இந்திய சந்தையில் 45,100 - 44,880 ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 45,550 - 45,770 ரூபாயாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதே வெள்ளியின் ரெசிஸ்டன்ஸ் லெவல் 69,200 - 69,900 ரூபாயாகும். இதே சப்போர்ட் லெவல் 68,300 - 67,700 ரூபாய் என்றும் கணித்துள்ளனர்.

தங்கத்திற்கு ஆதரவாக பணவீக்கம்

தங்கத்திற்கு ஆதரவாக பணவீக்கம்

உலகளவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டு வரும் நிலையில், பொருளாதாரத்தினை ஊக்குவிக்க இன்னும் ஊக்கத்தொகைகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு பத்திர சந்தையும் மீண்டு வந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் பணவீக்கம் பற்றிய கவலையும் எழுந்துள்ளது. இது பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக இருக்கும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்று கூறப்படுகிறது.

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது மீடியம் டெர்மில் தங்கம் விலை சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம். வெள்ளியிலும் நீண்டகால நோக்கில் வாங்கலாம். மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருப்பது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold rates fall today, is it safe to invest in this time?

Gold price update.. gold rates fall today, is it safe to invest in this time?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X