டெல்லி: இந்தியாவில் அரசனாக இருந்தாலும் சரி, ஆண்டியாக இருந்தாலும் சரி கடுகளவு ஆவது தங்கம் (Gold) வைத்திருப்பார்கள். அந்தளவுக்கு தங்கம் இந்திய மக்களின் உணர்வுகளுடன் கலந்துள்ள விலையுயர்ந்த உலோகமாக உள்ளது.
ஜொலி ஜொலிக்கும் தங்கத்தினை பிடிக்காத பெண்கள் இல்லை. பெண்கள் மட்டும் அல்ல, ஆண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினரும் விரும்பி அணிகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் விதவிதமான ஆபரணங்கள், நகைகள் வந்தாலும், மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று தங்கம் தான். இன்னும் சொல்லப்போனால் தங்கத்தினை விட விலை உயர்ந்த ஆபரணங்கள் இருந்தாலும், தங்கத்தின் மீதான மோகம் மட்டும் குறைவதில்லை.
அஸ்தஸ்தின் அடையாளம்
இது அஸ்தஸ்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றது. தங்கம் வெறும் ஆபரணமாக மட்டும் அல்ல, அவசர காலங்களில் உதவும் நண்பனாகவும் உள்ளது.. அவசர தேவைக்கு உடனே அடகு வைத்து கடன் வாங்கவும், அதை காசு கையில் இருக்கும்போது திரும்ப பெற்றுக் கொள்வதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது. மொத்தத்தில் தங்கத்தின் தேவை என்பது எதிர்காலத்தில் குறைய வாய்ப்புகள் குறைவு தான். இதுவே நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு சாதகமாக அமையலாம்.
பாதுகாப்பு புகலிடம்
தங்கம் என்பது வெறும் ஆபரணமாக மட்டும் அல்லாது, நெருக்கடியான சாதகமற்ற சூழலில் முதலீட்டாளர்களுக்கும் பாதுகாப்பு புகலிடமாக பார்க்கப்படுகிறது. இது பொருளாதார வளர்ச்சியின் தாக்கத்தினை எதிர்கொள்ள பயன்படும் ஒரு கருவியாகவும் உள்ளது. மொத்தத்தில் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பினை கொடுக்கிறது. இதனால் முதலீட்டு போர்ட்போலியோகளில் ஆலோசகர்கள் கட்டாயம் தங்கம் இடம்பெற வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
உலக வங்கியின் கணிப்பு
இப்படிப்பட்ட தங்கம் விலையானது அடுத்த ஆண்டிலும் சரிவினைக் காணலாம் என உலக வங்கி எதிர்பார்க்கிறது. தங்கம் விலையானது நடப்பு ஆண்டில் அவ்வப்போது ஏற்றத்தினை கண்டாலும், மொத்தமாக பார்க்கும்போது நடப்பு ஆண்டில் சரிவில் தான் காணப்படுகின்றது. இந்த போக்கு அடுத்த ஆண்டிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக வங்கியின் எதிர்பார்ப்பு
சர்வதேச அளவில் நிலவி வரும் பணவீக்க பிரச்சனைக்கு மத்தியில், மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது அடுத்த ஆண்டிலும் தொடரலாம். இதன் காரணமாக டாலரின் மதிப்பு தொடர்ந்து ஏற்றம் காணலாம். பத்திர சந்தையும் ஏற்றம் காணலாம். அதேசமயம் வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறையலாம். இது தங்கம் விலை அழுத்தம் காண வழிவகுக்கலாம்.
எவ்வளவு சரியலாம்
அடுத்த ஆண்டில் தங்கம் விலையானது இன்னும் 4% சரிவினைக் காணலாம் என உலக வங்கி கணித்துள்ளது. உலக வங்கியின் இந்த கணிப்பானது மூன்றாவது காலாண்டில் தங்கம் விலையானது 8% சரிவினைக் கண்டுள்ள நிலையில் வந்துள்ளது.
தங்கத்தின் முக்கிய சப்போர்ட் ஆக சுமார் 1650 டாலர் என்ற லெவலில் இருக்கலாம். இந்த லெவலை உடைத்து மீண்டும் செல்லும் பட்சத்தில் அது 1600 டாலர் எனற லெவலை தொடலாம்.
முதலீட்டு தேவை சரியலாம்
தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரித்து வரும் நிலையில், தங்கத்தின் முதலீட்டு தேவையானது சரிவினைக் காணலாம். இது தங்கத்தில் முதலீட்டினைக் குறைக்கலாம். எனினும் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலையால், பிசிகல் தங்கத்தின் விலையும் குறையலாம். குறைந்த தங்கம் விலையானது பலரையும் வாங்க தூண்டலாம். இது குறைந்த விலையில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
வெள்ளி நிலை எப்படி?
மூன்றாவது காலாண்டில் வெள்ளி விலையானது 15% சரிவினைக் கண்டது. இது ரெசசன் அச்சத்தின் மத்தியில் தேவை சரியலாம் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் விலை சரிவினைக் கண்டுள்ளது. குறிப்பாக தொழிற்துறையில் வெள்ளியின் தேவையானது சரியலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு வெள்ளி விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் குறைந்த வெள்ளி விலையானது பிசிகல் வெள்ளியினை வாங்க ஊக்குவிக்கலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை?
சர்வதேச சந்தையில் தங்கம் விலை பெரியளவில் மாற்றமின்றி அவுன்ஸூக்கு, 3.15 டாலர்கள் அதிகரித்து, 1668.70 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்க விலை சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று அழுத்தத்திலேயே இருக்கலாம் என்றாலும், உச்ச விலை அல்லது குறைந்தபட்ச விலையை உடைக்கும்போது பெரியளவில் ஏதேனும் மாற்றம் இருக்கலாம், கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது தொடர்ந்து பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை?
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையானது 0.34% அதிகரித்து, 19.570 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் தடுமாற்றத்திலேயே இருக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலை சற்று அதிகரித்துள்ள நிலையில், இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்றே அதிகரித்து காணப்படுகிறது. 10 கிராமுக்கு 28 ரூபாய் அதிகரித்து, 50,765 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, உச்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்தில் இருக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையில் வெள்ளி விலையும் தற்போது சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 97 ரூபாய் அதிகரித்து, 58,375 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் சற்றே தடுமாற்றத்திலேயே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலை சற்று குறைந்தே காணப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 4735 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 37,880 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 5137 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 41,096 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 51,370 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
தஙகம் விலை குறைந்திருந்தாலும், ஆபரண வெள்ளி விலை தற்போது கிராமுக்கு 20 பைசா அதிகரித்து, 63.70 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 637 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 63,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று - ரூ.47,350
மும்பை - ரூ.47000
டெல்லி - ரூ.47,150
பெங்களூர் - ரூ.47,050
கோயம்புத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.47,350
More From GoodReturns

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் மெகா சரிவு.. ஆனந்த கண்ணீரில் மிடில் கிளாஸ் மக்கள்..!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!



Click it and Unblock the Notifications