டெல்லி: பணம் சம்பாதிப்பது பெரிதல்ல, அதனை சேமிப்பது தான் பெரிய விஷயமே. அப்படி சிறுக சிறுக சேமிக்கும் சேமிப்பில் முக்கிய பங்கு வகிப்பது தங்கம் தான். ஏனெனில் இன்றைய காலகட்டத்திலும் நம் மக்கள் மத்தியில் தங்கத்தின் மீதான ஆர்வம் என்பது மிக அதிகம்.
ஏனெனில் இன்றும் பல நடுத்தர குடும்பங்களில் அவசர காலகட்டங்களில் உதவும் நண்பனாக உள்ளது.
சொல்லப்போனால் கொரோனா காலக்கட்டத்தில் பல குடும்பங்களில் மக்களை வாழவைத்தது தங்கம் தான். மொத்தத்தின் நடுத்தர குடும்பங்களில் தங்கம் விருப்பமான முதலீடாகவும், சிறந்த நண்பனாகவும் இருந்து வருகின்றது.
இன்று எப்படியிருக்கு?
தங்கத்தின் தேவையானது சரியத் தொடங்கியுள்ள நிலையில் 1646 டாலர் என்ற லெவலில் காணப்படுகின்றது. தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவல் ஆக 1650 டாலர் உள்ளது. இந்த லெவலை உடைத்தால் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தேவை சரிவினைக் கண்டு வருகின்றது.
தங்கம் விலையில் அழுத்தம் இருக்கலாம்
மேலும் வரவிருக்கும் நாட்களில் நடக்கவிருக்கும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம், 75 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக டாலரின் மதிப்பு மேற்கோண்டு ஏற்றம் காணலாம். இதன் காரணமாக தங்கம் விலையானது அழுத்தத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாலர் மதிப்பு
ஏற்கனவே டாலரின் மதிப்பானது 111 என்ற லெவலில் கடந்த வெள்ளிக்கிழமையன்று உச்சம் தொட்டது. இதற்கிடையில் வரவிருக்கும் கூட்டத்திலும் வட்டி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பத்திர சந்தை
தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் டாலரின் மத்தியில், அமெரிக்க பத்திர சந்தையும் தொடர்ந்து ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த பத்திர சந்தையானது, உச்சத்தில் இருந்து சரிவினைக் கண்டிருந்த நிலையில், கடந்த வார இறுதியில் மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியது. இந்த போக்கானது இனியும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்ப்பு
வரவிருக்கும் நாட்களில் அமெரிக்காவின் உற்பத்தி குறித்தான தரவானது வெளியாகவுள்ளது. இது அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியின் போக்கினை சுட்டிக் காட்டலாம். இதுவும் டாலர் மதிப்பில் எதிரொலிக்கலாம். இது தங்கம் விலையினை தூண்டலாம். மொத்தத்தில் முதலீட்டாளார்களின் கவனம் இந்த தரவில் உள்ளது எனலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை?
சர்வதேச சந்தையில் தங்கம் விலை பெரியளவில் மாற்றமின்றி அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1644.15 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி விலை?
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையானது சற்று குறைந்து, 19.128 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் தடுமாற்றத்திலேயே இருக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலை சற்று தடுமாறினாலும், இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்றே அதிகரித்து காணப்படுகிறது. 10 கிராமுக்கு 114 ரூபாய் அதிகரித்து, 50,344 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, உச்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்தில் இருக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையில் வெள்ளி விலையும் தற்போது சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 34 ரூபாய் அதிகரித்து, 57,499 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் அதிகபட்ச விலை மற்றும் குறைந்தபட்ச விலையையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்றே தடுமாற்றத்திலேயே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும், ஆபரண தங்கம் விலை சற்று அதிகரித்தே காணப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து, 4715 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 37,720 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 11 ரூபாய் அதிகரித்து, 5144 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 88 ரூபாய் அதிகரித்து, 41,152 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 51,440 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
தஙகம் விலை அதிகரித்து காணப்பட்டாலும் , ஆபரண வெள்ளி விலை மாற்றம் காணவில்லை. இது 63 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 630 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 63,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று - ரூ.47,150
மும்பை - ரூ.46,600
டெல்லி - ரூ.46,750
பெங்களூர் - ரூ.46,650
கோயம்புத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.47,150
More From GoodReturns

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

பங்குச்சந்தை வீழ்ச்சியிலும் லாபம் பார்க்கும் அதானி..!! தரமான சம்பவம் செய்த அதானி பவர்..!!

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

மாதம் ரூ.20,000 வருமானம் + ரூ.1.5 லட்சம் வரி விலக்கு! அரசு திட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா?

டாடா மோட்டார்ஸ் பங்குகளை கைகழுவிய ராதாகிஷன் தமானி: சில்லறை முதலீட்டாளர்களே கவனம்..

பணக்காரர்களின் ரகசியப் பாதை! ஏன் ராபர்ட் கியோசாகியின் முதலீட்டு டிப்ஸ் இன்றும் ஒரு மந்திரம்?



Click it and Unblock the Notifications