இன்ப அதிர்ச்சி கொடுக்கபோகும் தங்கம் விலை.. இன்று எப்படியிருக்கு தெரியுமா?

டெல்லி: தங்கத்தினை(Gold) இந்தியாவில் பிடிக்காத பெண்கள் உண்டா? என்றால் அது நிச்சயம் வெகு குறைவாகத் தான் இருப்பார்கள். தங்கம் என்றாலே என்ன என்றே தெரியாதா? சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரையில் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருந்து வருகின்றது.

இந்தியாவினை பொறுத்த வரையில் பிறப்பு முதல் இறப்பு வரையில் அத்தனை நல்ல கெட்ட காரியங்களிலும், தங்கம் என்பது முக்கிய அம்சமாக இருந்து வருகின்றது.

இப்படிப்பட்ட தங்கம் விலையானது கடந்த சில வாரங்களாகவே சரிவிலேயே இருந்து வருகின்றது. இது குறிப்பாக சர்வதேச சந்தையில் தொடர்ந்து முக்கிய லெவலான 1699 டாலர்களுக்கு கீழாகவே இருந்து வருகின்றது.

தங்கம் விலை சரியலாம்

தங்கம் விலை சரியலாம்


ஆக தங்கம் விலையானது தற்போதைக்கு சற்று தடுமாற்றத்தில் இருந்தாலும், மேற்கொண்டு இந்த முக்கிய லெவலை உடைக்கும்பட்சத்தில் மேலே அதிகரிக்கலாம். எனினும் தற்போதைக்கு தங்கம் விலையானது சரிவிலேயே காணப்படுகின்றது. இந்த சரிவானது தொடரும் பட்சத்தில் 1614 டாலர் மற்றும் 1560 டாலர் என்ற லெவலை எட்டலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தற்போதைய நிலவரம் என்ன?

தற்போதைய நிலவரம் என்ன?

ஒரு வேளை இந்த வார இறுதியில் தங்கம் விலையானது 1699 டாலர்களை உடைத்து மேலாக முடிவடைந்தால், ஏற்றம் காணத் தொடங்கலாம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர். அதனை உடைத்து மேலே செல்லும் பட்சத்தில் அவுன்ஸூக்கு 1813 டாலர்களை தொடலாம் என கணித்துள்ளனர். எப்படியிருப்பினும் இன்று தங்கம் விலையானது 2 வார உச்சத்தில் காணப்படுகின்றது. தொடர்ந்து கடந்த சில தினங்களாகவே பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும் ஏற்றம் கண்டு வருகின்றது.

டாலரின் மதிப்பு சரிவு

டாலரின் மதிப்பு சரிவு

அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது சற்றே ஏற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது விலையானது சர்வதேச சந்தையில் குறைந்திருந்தாலும், அது தொடர்ந்து பெரியளவில் குறையவில்லை என்பதும் கவனிக்கதக்க விஷயமாக உள்ளது.

பத்திர சந்தையும் சரிவு

பத்திர சந்தையும் சரிவு

தொடர்ந்து அமெரிக்க பொருளாதாரம் மெதுவான நிலையில் வளர்ச்சி கண்டு வரும் நிலையில், அது மேற்கொண்டு தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். இது தற்போது பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தாவிட்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்க காரணமாக அமையலாம். டாலரின் மதிப்பு சரிவினைக் கண்டு வரும் நிலையில், அமெரிக்க பத்திர சந்தையும் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இதுவும் தங்கம் விலையானது பெரியளவில் சரியாமல் பாதுகாப்பு புகலிடமாக இருந்து வருகின்றது.

வட்டி அதிகரிக்கலாம்

வட்டி அதிகரிக்கலாம்

எப்படியிருப்பினும் வரவிருக்கும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு பணவீக்கத்தினை கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதேசமயம் பத்திர சந்தை, டாலரின் மதிப்பினை இது ஊக்குவிக்கலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். இது தங்கம் விலை சரிய காரணமாக அமையலாம் என எதிர்பார்க்கபப்படுகிறது.

எதிர்பார்ப்பு இது தான்

எதிர்பார்ப்பு இது தான்

குறிப்பாக வரவிருக்கும் நவம்பர் மாத கூட்டத்தில் வட்டி விகிதமானது 75 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என்றும், இது டிசம்பர் மாதத்தில் 50 புள்ளிகள் வரை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து வட்டி விகிதத்தினை மத்திய வங்கியானது அதிகரிக்கும் பட்சத்தில் அது, நீண்டகால நோக்கில் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

காமெக்ஸ் தங்கம் விலை?

காமெக்ஸ் தங்கம் விலை?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1667.30 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்க விலை சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று அழுத்தத்திலேயே இருக்கலாம் என்றாலும், உச்ச விலை அல்லது குறைந்தபட்ச விலையை உடைக்கும்போது பெரியளவில் ஏதேனும் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை?

காமெக்ஸ் வெள்ளி விலை?

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையானது சற்று குறைந்து, 19.477 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் தடுமாற்றத்திலேயே இருக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை சற்று குறைந்திருந்தாலும், இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்றே அதிகரித்து காணப்படுகிறது. தொடக்கத்தில் 10 கிராமுக்கு 63 ரூபாய் அதிகரித்து, 50,750 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் தங்கம் குறைந்தபட்ச விலை, உச்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்தில் இருக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை தற்போது சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 34 ரூபாய் அதிகரித்து, 58,200 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் சற்றே தடுமாற்றத்திலேயே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலை சற்று குறைந்தே காணப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, 4745 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 37,960 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 22 ரூபாய் குறைந்து, 5176 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 32 ரூபாய் குறைந்து, 41,408 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 176 ரூபாய் குறைந்து, 51,760 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 1 ரூபாய் குறைந்து, 63.50 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 635 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 1000 ரூபாய் குறைந்து, 63,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று - ரூ.47,450

மும்பை - ரூ.47,100

டெல்லி - ரூ.47,250

பெங்களூர் - ரூ.47,150

கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.47,450

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+