நகை வாங்க ரெடியா.. தங்கம் விலை எவ்வளவு குறைஞ்சிருக்குன்னு பாருங்க..!

டெல்லி: தங்கத்தின் மீது பெண்களுக்கு அளவில்லா ஆசை என்றாலும், இன்றைய காலகட்டத்தில் முதலீட்டிலும் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.

முதலீட்டு ஆலோசகர்களும் தங்கத்தினை போர்ட்போலியோவில் அவசியம் வைத்திருக்க பரிந்துரை செய்கின்றனர். இது நெருக்கடியான காலகட்டங்களில் பாதுகாப்பு புகலிடமாக இருந்து வருகின்றது.

வரவிருக்கும் நாட்களில் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் ஆனது வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யவுள்ளன. இதனை முதலீட்டாளர்கள் தீவிரமாக கவனித்து வருகின்றனர்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும் கடந்த சில தினங்களாகவே 1640 என்ற லெவலில் காணப்படுகின்றது. இது அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பத்திர சந்தையானது ஏற்றம் காணலாம் என எதிர்பார்ப்புக்கு மத்தியில் பெரிய மாற்றமின்றி காணப்படுகிறது. குறிப்பாக நடக்கவிருக்கும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை ஏற்றம்

தங்கம் விலை ஏற்றம்

ஸ்பாட் கோல்டின் விலையானது அவுன்ஸூக்கு 1637.54 என்ற லெவலை எட்டியது. இது அக்டோபர் 21ல் இருந்து பார்க்கும்போது குறைந்த விலையாகும். அமெரிக்க சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1640.20 டாலர் என்ற லெவலிலும் காணப்படுகின்றது. இதே டாலரின் மதிப்பு 0.2% சரிவில் காணப்படுகின்றது. பத்திர சந்தையும் சரிவில் காணப்படுகின்றது. இதற்கிடையில் தான் தங்கம் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகின்றது.

எப்படியிருக்கும்?

எப்படியிருக்கும்?

நடக்கவிருக்கும் ஃபெடரல் வங்கி கூட்டம் காரணமாக தங்கம் விலையில் 25 - 50 டாலர்கள் அளவுக்கு மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தங்கம் விலையானது மீண்டும் 1625 டாலர் என்ற லெவலை உடைத்தால், அது 1600 டாலரை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி எவ்வளவு அதிகரிக்கும்?

வட்டி எவ்வளவு அதிகரிக்கும்?

புதன் கிழமையன்று தொடங்கவிருக்கும் இரண்டு நாள் கூட்டத்தில் அமெரிக்காவின் மத்திய வங்கியானது 75 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலையில் அழுத்தம் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது. எனினும் 75 அடிப்படை புள்ளிகள் அதிகரிப்பு இருக்குமா? என்பதும் பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.

21% சரிவு

21% சரிவு

தங்கம் விலையானது கடந்த மார்ச் 2022 மாதத்தில் 2000 டாலர்களை எட்டிய நிலையில், தற்போது அந்த லெவலில் இருந்து 21% சரிவில் காணப்படுகின்றது. இந்த லெவலை மீட்டும் எட்டுமா? என்பதும் பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.

இதற்கிடையில் நடப்பு காலாண்டில் தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை?

காமெக்ஸ் தங்கம் விலை?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை அவுன்ஸூக்கு 5.35 டாலர்கள் அதிகரித்து, 1646.10 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கிழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்து காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை?

காமெக்ஸ் வெள்ளி விலை?

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையானது 2.46% அதிகரித்து, 19.587 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாக தொடங்கியிருந்தாலும், கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்றே அதிகரித்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 88 ரூபாய் அதிகரித்து, 50,410 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, உச்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்தில் இருந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலையும் தற்போது அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 962 ரூபாய் அதிகரித்து, 58,640 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்றே அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்து காணப்பட்டாலும், ஆபரண தங்கம் விலை சற்று குறைந்தே காணப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 4705 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 37,640 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து, 5133 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து, 41,064 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து, 51,330 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

தஙகம் விலை குறைந்து காணப்பட்டாலும், ஆபரண வெள்ளி விலை மாற்றம் காணவில்லை. இது கிராமுக்கு 63 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 630 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 63,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று - ரூ.47,050

மும்பை - ரூ.46,000

டெல்லி - ரூ.46,150

பெங்களூர் - ரூ.46,050

கோயம்புத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.47,050

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+