சூப்பர் சரிவில் தங்கம் விலை.. சாமனியர்களுக்கு நல்ல வாய்ப்பு தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் இன்றோடு இரண்டாவது நாளாக சரிவில் காணப்படுகிறது. அதுவும் நேற்றைய வர்த்தக அமர்வில் காலை நேரத்தில் ஏற்றத்தில் காணப்பட்ட நிலையில், பிற்பாதியில் சரிவினைக் நோக்கி சென்றது. அதுவும் 1% மேலாக சரிவினைக் கண்டது.

இது சாமனியர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் மீண்டும் குறைந்த விலையில் தங்கத்தினை வாங்க இது ஒரு வாய்ப்பாக அமையுமே.

கடந்த சில வாரங்களாகவே முதலீட்டாளர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, தொடர்ந்து தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வந்த நிலையில், இந்த வாரத்தின் முதல் நாள் சற்று சரிவிலும், அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் ஏற்றத்திலும் காணப்பட்டது. மீண்டும் இன்றோடு இரண்டாவது நாளாக சரிவு பாதையில் உள்ளது. இது முதலீட்டாளர்கள் குறைந்த விலையில் தங்கத்தினை வாங்கியிருக்கலாம். இதனால் தங்கம் விலையானது சற்று ஏற்றத்தினைக் கண்டு இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இன்று என்ன பார்க்கபோகிறோம்?

இன்று என்ன பார்க்கபோகிறோம்?

அதெல்லாம் சரி, இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தற்போது எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? இந்திய மற்றும் சர்வதேச சந்தைகளில் வெள்ளியின் விலை எவ்வளவு? தங்கத்திற்கு சாதகமான, பாதகமான காரணிகள் என்ன? நீண்டகால நோக்கில் தங்கம் விலை இனி விலை எப்படி இருக்கும்? இன்று எப்படி இருக்கும்? முக்கிய லெவல்கள் என்னென்ன? இப்போது வாங்கலாமா? இன்னும் குறையுமா? என பலவற்றையும் தற்போது பார்க்கலாம் வாருங்கள்.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் இந்த வாரத் தொடக்கத்தில் சற்று சரிந்து, அதன் பின் இரண்டு நாட்கள் ஏற்றம் கண்ட நிலையில், மீண்டும் இன்றோடு இரண்டாவது நாளாக சரிவினைக் கண்டு வருகிறது. தற்போது அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 9.50 டாலர்கள் குறைந்து, 1713.15 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. அதோடு இன்று தொடக்கத்தில் முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, சற்று கீழாகத் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையும், கடந்த இரண்டு நாட்களாக சரிவினைக் கண்டு வருகிறது. இது தற்போது 1.06% சரிவில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 0.291 டாலர்கள் குறைந்து, 25.890 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வு விலையை விட, இன்று சற்று கீழாகத் தொடங்கியுள்ளது. ஆக வெள்ளியின் விலையும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது இன்று சற்று சரிவில் தான் இரண்டாவது நாளாக காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 250 ரூபாய் குறைந்து 44,629 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இந்திய சந்தையில் தங்கத்தின் முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்கலாம்.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும், சர்வதேச சந்தையின் எதிரொலியாக சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 780 ரூபாய் குறைந்து, 66,765 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று கேப் டவுன் ஆகி சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருக்கலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று தங்கம் ஆபரணத்தின் விலையானது சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து, 4,210 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து, 33,680 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வருட தொடக்கம் முதல் கொண்டே தங்கம் விலையானது சற்று குறைந்து வந்த நிலையில், இது தங்க ஆர்வலர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. அதோடு தங்கம் விலையானது சவரனுக்கு தொடர்ந்து 34,000 ரூபாய்க்கும் கீழாகவே காணப்படுகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய ( 24 கேரட்) தங்கத்தின் விலையினை பொறுத்த வரையில், இன்று கிராமுக்கு 41 ரூபாய் குறைந்து 4,593 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 328 ரூபாய் குறைந்து, 36,744 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதுவும் கடந்த 10 தினங்களில் 5 நாட்கள் ஏற்றம் கண்ட நிலையில்,5 நாட்கள் சரிவினைக் கண்டுள்ளது

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே கிராம் வெள்ளியின் விலையானது கிராமுக்கு 4.10 பைசா அதிகரித்து 71.50 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவே கிலோவுக்கு இன்று 4100 ரூபாய் அதிகரித்து 71,500 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையும் கடந்த 10 தினங்களில், 3 நாட்கள் மட்டுமே சரிவில் காணப்பட்டது.

முதலீடுகளை குறைக்கிறது?

முதலீடுகளை குறைக்கிறது?

சர்வதேச பங்கு சந்தைகள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், அது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அமெரிக்க பத்திர சந்தையும் தொடர்ந்து நல்ல லாபம் கொடுத்து வரும் நிலையில், வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைய வழிவகுத்துள்ளன. இதனால் தங்கத்தில் முதலீடுகள் குறைந்துள்ளன. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக, கொரோனா தடுப்பூசிகள் பற்றிய சாதகமான செய்திகளுக்கு மத்தியில், சந்தையானது ஏற்றம் கண்டு வருகின்றது.

இறுதிக்கட்டத்தில் ஊக்கத்தொகை

இறுதிக்கட்டத்தில் ஊக்கத்தொகை


அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் 1.9 டிரில்லியன் டாலர் ஊக்கத்தொகை இறுதி கட்டத்தினை எட்டியுள்ள நிலையில், விரைவில் ஊக்கத்தொகை அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பொருளாதாரத்தினை ஊக்குவிக்க பயந்படும். தேவையை ஊக்குவிக்கும். பொருளாதாரத்தினை விரைவில் மீட்டுக் கொண்டு வரும். இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக வட்டி விகிதமும் குறைவாகவே உள்ளது. ஆக இது எல்லாமே தங்கத்திற்கு எதிராகவே உள்ளன. இதன் காரணமாக தங்கம் விலையானது மீண்டும் சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது.

பங்கு சந்தைகள் ஏற்றம்

பங்கு சந்தைகள் ஏற்றம்

அமெரிக்க பங்கு சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்ததையடுத்து, ஆசிய சந்தைகளும் ஏற்றத்தில் காணப்பட்டன. இதனையடுத்து இந்திய பங்கு சந்தையும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. தடுப்பூசிகளும் சாதகமாக வந்து கொண்டுள்ள நிலையில், அது இன்னும் சந்தைக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. ஆக இதனாலும் தங்கத்தில் முதலீடுகள் மீண்டும் குறையத் தொடங்கியுள்ளன.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என கூறப்பட்டாலும், பல சர்வதேச காரணிகள் தங்கத்திற்கு எதிராக காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்மில் தங்கத்தினை வாங்குவது சற்று ரிஸ்கான விஷயமே. எனினும் நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம். வெள்ளியிலும் நீண்டகால நோக்கில் வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold rates today fall again, is it right time to buy?

Gold price update.. gold rates today fall again, is it right time to buy?
Story first published: Friday, March 12, 2021, 13:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X