சர்வதேச அளவிலான நிச்சயமற்ற சூழலில் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கம், கடந்த ஒரு மாதத்தில் சந்தித்த சரிவு 17 ஆண்டுகால சாதனையை முறியடித்திருக்கிறது. ஆனால் ஏப்ரல் தொடக்கத்திலேயே, மீண்டும் தனது பழைய வேகத்தை எட்டிப்பிடிக்க தொடங்கியுள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு, மத்திய வங்கிகளின் கொள்கை முடிவுகள் மற்றும் உலகளாவிய பதற்றங்கள் என எவை தங்கத்தை மீண்டும் அரியணையில் ஏற்றுகின்றன? வரும் நாட்களில் தங்கம் எட்டப்போகும் புதிய இலக்கு என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.
கடந்த மார்ச் மாதத்தில் தங்கம் விலையானது 11%-க்கு மேலாக வீழ்ச்சி கண்டு காணப்பட்டது. இது கடந்த 2008-க்கு பிறகு கண்ட மிக மோசமான ஒரு மாத சரிவாகும். இது மத்திய வங்கிகளின் வட்டி விகித முடிவு கடுமையாக்கப்படும் என்ற அச்சத்தின் மத்தியில் காணப்பட்டது. மேற்கொண்டு டாலர் மதிப்பும் வலுவாக காணப்பட்டது தங்கம் விலை சரிய முக்கிய காரணமாகவும் பார்க்கப்பட்டது.

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் பதற்றமானது நிலவி வந்தாலும், மத்திய வங்கிகள் நடப்பு ஆண்டில் இரண்டு முறை வட்டி விகிதத்தை குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான சூழல் ஆனது, வட்டி குறைப்பு எதிர்பார்ப்பை முற்றிலும் அகற்றியுள்ளது. மாறாக அதிகரித்து வரும் பணவீக்கம் மத்தியில், பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
குறுகிய கால அடிப்படையில் பார்க்கும்போது பலவீனமான டாலர், சரிவில் இருக்கும் பத்திர சந்தை என சில காரணிகள் மத்தியில், தொடர்ந்து நான்காவது நாளாக ஏற்றத்தை கண்டு வருகிறது. மேற்கொண்டு அமெரிக்கா - ஈரான் இடையிலான பிரச்சனையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது. இது மீண்டும் தங்கத்தை உச்சம் தொட வைக்கலாம். முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடுத்த 2 - 3 வாரங்களில் போர் முடிவுக்கு வரலாம் என சமிக்கை காட்டியிருப்பது நல்ல விஷயமாக பார்க்கப்பட்டது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை விதைத்தது.
இருப்பினும் ஹார்மூஸ் ஜலசந்தியில் நிலவி வரும் பதற்றமும், போர் நிறுத்த ஒப்பந்தமும் எப்போது என்ற மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. இது சந்தையை ஒரு வித பதற்றத்திலேயே வைத்துள்ளது. இது குறுகிய காலத்தில் 17 ஆண்டுகால சரிவுக்குப் பிறகு ஏற்றம் காண முக்கிய காரணமாக இருக்கலாம். ஆனால் நீண்ட கால அடிப்படையில் இது போன்ற காரணிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.
குறிப்பாக ஈரானின் புதிய அதிபர் போர் நிறுத்தம் கோரியதாக டிரம்ப் கூறியதை அடுத்து, அதற்கு இது பொய்யானது, ஆதாரமற்ற தகவல் என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது மேற்கொண்டு பிரச்சனை தற்போதைக்கு முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையை உடைத்துள்ளது.
மேற்கொண்டு டிரம்பின் ஹார்மூஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு மிகவும் சுதந்திரமாகவும் பாதுகாப்பானதாகவும் இருந்தால் மட்டுமே நாங்கள் போர் நிறுத்தத்தை பரிசீலிப்போம் என்ற வார்த்தைகள், அப்படி நடக்கும் வரையில் நாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்பதாகத் தான் பார்க்கப்படுகிறது. ஆக குறுகிய காலத்தில் ஏற்ற இறக்கம் என்பது அதிகம் இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் அதிகரிக்கவே செய்யும். அதற்கு இரு முக்கிய காரணிகள் பின்னணியில் இருக்கலாம். ஒன்று அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள், இதனால் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் தொடரலாம். இது பணவீக்கத்தை ஊக்குவிக்கலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தை ஊக்குவிக்கலாம். இது ஆபரண தங்கம் விலையிலும் எதிரொலிக்கலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!



Click it and Unblock the Notifications

