தங்கம் விலை தொடர் ஏற்றம்.. அதுவும் 4 நாட்களுக்குள் ரூ.1,100.. இனி என்னவாகும்..!

தங்கத்திம் மீது எம் பெண்களுக்கு இருக்கும் நேசமும் நெருக்கமும் கூடிக் கொண்டே போகிறது. ஆபரணங்களாக்கி அணிந்தவர்கள், இன்று பட்டு புடவைகளில் கரை ஆக்கி உடுத்தி வருகிறார்கள். ஏன் பண வசதி உள்ளவர்கள் தங்கத்தை பஸ்பமாக்கி சாப்பிடுகிறார்கள் அந்தளவுக்கு தங்கத்தின் மீதான மோகம் அதிகரித்து வருகிறது.

அந்தளவுக்கு தங்கத்தின் மீதான ஆசையும் வளர்ந்து கொண்டே செல்கிறது. ஒரு காலத்தில் தங்கத்தினை பொருளாக வங்கியவர்கள், இன்று தாங்கள் செய்யும் முதலீடுகளிலும் தங்கம் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்கள்.

அதுவும் தங்க பத்திரம், ஃப்யூச்சர் வர்த்தகத்தில் தங்கத்தின் மீதும் முதலீடு செய்து வருகின்றனர்.

ஏற்ற இறக்கத்தில் லாபம்

ஏற்ற இறக்கத்தில் லாபம்

அதிலும் எம்சிஎக்ஸ் தங்கத்தினை பொறுத்தவரையில் தினசரி லாபம் பார்க்க முடியும் என்பது ஒரு பிளஸ் பாயிண்டாக உள்ளது. மேலும் விற்று வாங்கினாலும் லாபம், வாங்கி விற்றாலும் லாபம் என்பதால் தங்கம் ஏற்றத்திலும் சரி, இறக்கத்திலும் சரி நல்லதொரு லாபம் பார்க்க முடியும் என்பதால் இதில் முதலீடுகள் என்றுமே அதிகரித்து வருகின்றன.

தங்கம் விலை

தங்கம் விலை

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது சர்வதேச சந்தைகளில் தொடர் ஏற்றம் கண்டு வரும் நிலையில், இந்திய சந்தைகளிலும் அதன் பிரதிபலனை காண முடிகிறது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலையானது 1,100 ரூபாய் ஏற்றம் கண்டு 39,087 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதே போல வெள்ளியின் விலையானது 0.12% அதிகரித்து 46,879 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

டாலர் வீழ்ச்சியால் ஏற்றம்

டாலர் வீழ்ச்சியால் ஏற்றம்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது அதன் மிகப்பெரிய வாராந்திர முன்னேற்றத்தை நான்கு மாதங்களுக்கும் மேலாக டாலரின் சரிவு மாற்றியது. இது உலோகத்திற்கான தேவையை மாற்று சொத்தாக உயர்த்தியது. இந்த நிலையில் பிப்ரவரி டெலிவரிக்கான தங்கத்திற்கான எதிர்காலம் 0.2 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நியூயார்க் சந்தையான காமெக்ஸில் ஓரு அவுன்ஸூக்கு 1,518.10 டாலராக நிலைபெற்றது.

தங்கம் விலை அதிகரிப்பு

தங்கம் விலை அதிகரிப்பு

இதே இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் தங்கம் விலை 24 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவிற்கும் சினாவிற்கும் இடையிலான மாதங்கள் பழமையான வர்த்தக இடைவெளி, உலகின் முன்னணி பொருளாதாரங்கள் முழுவதும் எளிதான நாணயக் கொள்கை மற்றும் பரிவர்த்தனை வர்த்தக நிதிகள் மற்றும் மத்திய வங்கிகளை தொடர்ந்து வாங்குதல் விலையை உயர்த்தியுள்ளது.

ஆபரண தங்கத்தின் விலை

ஆபரண தங்கத்தின் விலை

சர்வதேச சந்தையில் இப்படி ஒரு கூர்மையான எழுச்சியும், இந்தியாவில் இறக்குமதி வரி அதிகரிப்பு மற்றும் ஜிஎஸ்டி அதிகரிப்பு காரணமாக தங்கத்தின் விலையானது அந்தளவுக்கு உயர்ந்துள்ளது. அதிலும் தற்போது ஆய்வாளர்கள் வர்த்தக மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் 2020ம் ஆண்டில் உலோகத்திற்கு மேலும் லாபத்தை தரும் என்றும் கூறியுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் தங்கம் பவுன் 29,840 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் தங்கத்திற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் விலை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+