தலையை சுற்ற வைக்கும் தங்கம் விலை.. சாமானியர்கள் கவலை.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

தங்கம் விலையானது சாமானிய மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து 40,000 ரூபாய்க்கு மேலாகவே இருந்து வருகின்றது. இது இன்னும் வரும் வாரத்தில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே முதலீட்டு ரீதியாக பார்க்கும்போது தங்க முதலீட்டாளர்கள், வரும் நாட்களில் வெளியாகவிருக்கும் பொருளாதார ரீதியான முக்கிய தரவுகளை கண்கானித்து வருகின்றனர். இது மேற்கொண்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக தங்கம் பார்க்கப்படும் நிலையில், இது மேற்கொண்டு சர்வதேச அளவில் பணவீக்கத்தினை கட்டுப்படுத்த, வட்டி விகிதம் அதிகரித்து வருகின்றது.

ரெசசன் அச்சம்

ரெசசன் அச்சம்

வட்டி விகிதம் அதிகரித்து வரும் சூழலில் இது மேற்கொண்டு பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு தங்கத்திற்கான தேவையினை முதலீட்டு ரீதியாக அதிகரிக்கலாம். இது தங்கம் விலைக்கு ஆதரவாக நீண்டகால நோக்கில் அமையலாம். தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் ரெசசன் அச்சம் அதிகரித்து வருகின்றது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தொடர்ந்து பொருளாதாரம் சரிவினையே கண்டு வந்தாலும், பணவீக்கம் குறையும் வரையில் நடவடிக்கை இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. இதன் காரணமாக தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கபபடுகிறது.

எதிர்பார்ப்பு எவ்வளவு?

எதிர்பார்ப்பு எவ்வளவு?

எம்சிஎக்ஸ் தங்கம் விலையானது 54,400 ரூபாயை தாண்டினால், 54,600 ரூபாய் என்ற லெவலை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக ரெசசன் காலம் என்றாலே தங்கத்தின் விலையானது அதிகரிக்கலாம். அப்போது மக்களின் வருவாய் குறையும். இதனால் தங்கத்தின் தேவையானது குறையலாம் என்றாலும், முதலீட்டு ரீதியாக பாதுகாப்பு புகலிடமாகவவும் பார்க்கப்படுகிறது.

அரசியல் பதற்றங்கள்

அரசியல் பதற்றங்கள்

தொடர்ந்து அதிகரித்து வரும் அரசியல் பதற்றங்கள் மத்தியில் இன்னும் பிரச்சனையானது தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. குறிப்பாக சீனாவில் நிலவி வரும் கொரோனா பதற்றம், ரஷ்யா உக்ரைன் பிரச்சனை என பலவும் நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை?

தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்றே அதிகரித்து, 1828.45 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்றே தடுமாற்றத்தில் இருக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே வெள்ளி விலையானது சர்வதேச சந்தையில் 0.30% அதிகரித்து, 24.267 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்றே குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கமாடிட்டி சந்தை நிலவரம்?

இந்திய கமாடிட்டி சந்தை நிலவரம்?

இந்திய கமாடிட்டி சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது, 10 கிராமுக்கு, 9 ரூபாய் குறைந்து, 55,062 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இதே இந்திய சந்தையில் வெள்ளியின் விலையானது, 58 ரூபாய் குறைந்து, கிலோவுக்கு 69,651 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரணத் தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், ஆபரணத் தங்கம் விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலையானது சென்னையில் இன்று கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து, 5124 ரூபாயாகவும், சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்து, 40,992 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 7 ரூபாய் அதிகரித்து, 5590 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது 10 கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து, 55,900 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையும் மாற்றமின்றி கிராமுக்கு 74.70 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 74,700 ருபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+