கிடுகிடு ஏற்றத்தில் தங்கம் விலை.. இனி நினைக்க மட்டும் தான் முடியும்போல.. எவ்வளவு தான் அதிகரிக்குமோ?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா ஒரு புறம் மக்களை வாட்டி வதைக்க தொடங்கியுள்ள நிலையில், மறபுறம் தங்கம் விலையானது தொடர்ந்து உச்சம் காண ஆரம்பித்துள்ளது.

போகிற போக்கினை பார்த்தால் நிபுணர்கள் சொன்னதைப் போல, புதிய உச்சத்தினை எட்டி விடும்போல அந்தளவுக்கு ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

தங்கத்தின் விலையானது நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தாலும், அவ்வப்போது பெரும் சரிவினையும் கண்டு வருகின்றது. இது கடந்த வாரத்தில் அவ்வப்போது சரிந்திருந்தாலும், வாரத்தின் இறுதியில் கிடுகிடு ஏற்றத்தில் தான் காணப்பட்டது.

தங்கத்தின் தேவை

தங்கத்தின் தேவை

இந்தியாவில் தொடர்ந்து கொரோனாவின் தாக்கமானது அதிகரித்து வரும் நிலையில், பிசிகல் தங்கத்தின் தேவையானது குறையத் தொடங்கியுள்ளது. இது தங்கம் விலைக்கு எதிரான ஒரு விஷயமாக பார்க்கப்பட்டாலும், பரவி வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில் ஒரு பாதுகாப்பு புகலிடமாகவே பார்க்கப்படுகிறது. இதனால் முதலீட்டு தேவையானது அதிகரித்து வருகின்றது. ஆக இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாக அமைந்துள்ளது.

நிலவரம் என்ன?

நிலவரம் என்ன?

கடந்த வாரத்தில் காமெக்ஸ் சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு? எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் விலை எவ்வளவு? ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? இரு சந்தைகளிலும் வெள்ளியின் விலை நிலவரம் என்ன? கடந்த வாரத்தில் குறைந்திருக்கா அல்லது ஏற்றம் கண்டு இருக்கா? தங்கத்திற்கு சாதக பாதகமான காரணிகள் என்னென்ன? இனி நீண்டகால நோக்கில் இன்னும் தங்கம் விலை எப்படி இருக்கும்? வரும் வாரத்தில் எப்படி இருக்கும்? வாருங்கள் பார்க்கலாம்.

COMEX தங்கம் விலை நிலவரம்

COMEX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது அவ்வப்போது சற்று குறைந்தாலும், மொத்தத்தில் ஏற்றத்தில் தான் காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று 1768.40 டாலர்களாக தொடங்கிய நிலையில், எனினும் வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 1844.40 டாலர்களை தொட்டு, அன்றே 1831.95 டாலர்களாக முடிவுற்றது. இது இன்னும் அதிகரிக்கும் விதமாகவே இருப்பதால் நீண்ட கால நோக்கில் வாங்கலாம் என்றாலும், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

COMEX வெள்ளி விலை நிலவரம்

COMEX வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலையினை போலவே, வெள்ளியின் விலையும் இரண்டு நாட்கள் சரிவில் காணப்பட்டாலும், மூன்று நாட்கள் பலமான ஏற்றத்தினை கண்டுள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று 25.990 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே 25.850 டாலர்களை தொட்டது. எனினும் வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 27.800 டாலர்கள் வரையில் சென்றது. முடிவில் 27.558 டாலர்களாக முடிவுற்றது. வெள்ளியின் விலையும் நாளை தொடக்கத்தினை பொறுத்தே இந்த வாரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம்.

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

இந்திய சந்தையினை பொறுத்தவரையில் கடந்த திங்கட்கிழமையன்று 47,654 ரூபாயாக தொடங்கிய நிலையில், புதன்கிழமையன்று குறைந்தபட்சமாக 46,650 ரூபாயினை தொட்டது. இதே வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 48,050 ரூபாயாக அதிகரித்தது. இது தொடக்கத்தில் இருந்து பார்க்கும்போது 10 கிராம் தங்கம் விலை, கடந்த வாரத்தில் 400 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 8,000 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

MCX வெள்ளி விலை நிலவரம்

MCX வெள்ளி விலை நிலவரம்

இந்திய சந்தையில் வெள்ளி விலையும் கடந்த வாரத்தில் சற்று அதிகரித்தே காணப்பட்டது. திங்கட்கிழமையன்று, 68,807 ரூபாயாக தொடங்கிய நிலையில், வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 72,231 ரூபாயாக அதிகரித்தது. எனினும் முடிவில் 71,429 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. இது கடந்த வாரத்தில் மட்டும் 2,600 ரூபாய்க்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 6000 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான இடமாகத் தான் பார்க்கப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த வாரத்தில், 6 நாட்கள் ஏற்றத்திலும், ஒரு நாள் மட்டும் சற்று சரிவிலும் காணப்பட்டது. எனினும் அதிலும் பெரிய அளவு சரிவு இல்லை. கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 35,376 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையில் இன்று பெரியளவில் மாற்றமில்லாமல் கிராமுக்கு 4,511 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 36,088 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 7,500 ரூபாய்க்கும் மேல் குறைவாகத் தான் காணப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் கடந்த வார தொடக்கத்தில் பெரியளவில் ஏற்றம் கண்டுள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 48,240 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 49,210 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 970 ரூபாய் ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 76.10 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 761 ரூபாயாகவும், கிலோவுக்கு 76,100 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 73,500 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 76,100 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 2,600 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.

மீடியம் டெர்மில் எப்படியுள்ளது?

மீடியம் டெர்மில் எப்படியுள்ளது?

தங்கம் விலையானது மீடியம் டெர்மிலும் தங்கம் விலையானது சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. இந்தியாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் உச்சத்தினை எட்டி வரும் நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. அதோடு நாளுக்கு அதிகரித்து வேலையின்மை, பொருளாதார சரிவு என்பது ஏற்றத்திற்கு வழிவகுக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

டாலரின் மதிப்பு

டாலரின் மதிப்பு

அமெரிக்க டாலரின் மதிப்பானது சரிவினைக் கண்டு வரும் நிலையில், தங்கம் விலையானது உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. கூடுதலாக அமெரிக்காவின் பொருளாதாரம் சம்பந்தமான தரவுகள், எதிர்பார்ப்பினை விட மோசமாக வந்த நிலையில் அதுவும் டாலர் மதிப்பு சரிவுக்கு வழிவகுத்தது. இது வரும் வாரத்திலும் தங்கத்திற்கு ஆதரவாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பத்திர லாபம் சரிவு

பத்திர லாபம் சரிவு

தொடர்ச்சியாக லாபத்தினை கண்டு வந்த அமெரிக்க பத்திர சந்தையானது, தற்போது சற்று சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது. இதே நேரம் பங்கு சந்தைகளும் சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது. இதனால் முதலீட்டாலர்கள் பாதுகாப்பு புகலிடமாக இருக்கும் தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கின்றனர்.

முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு

முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு

தங்கம் விலையானது வரும் வாரத்தில் அவுன்ஸூக்கு 1860 டாலர்கள், 1880 டாலர்களை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே இந்திய எம்சிஎக்ஸ் சந்தையில் 49,500 ரூபாய் மற்றும் 50,000 ரூபாயினை தொடலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார சரிவுக்கு எதிராக மத்திய வங்கிகள் தங்கத்தில் முதலீடுகளை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இது தங்கத்துக்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரத்தில் வாங்கலாமா?

இந்த வாரத்தில் வாங்கலாமா?

மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் வார கேண்டில், தினசரி கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் நாளை எப்படி தொடங்குகிறது என்பதை பொறுத்தும், சந்தையின் போக்கினை பொறுத்தும் தீர்மானிக்கலாம். எனினும் பல்வேறு காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாக உள்ள நிலையில், நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold weekly update: Gold prices settle above $1830, it may further up this week

Gold weekly updates.. Gold weekly update: Gold prices settle above $1830, it may further up this week
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X