கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து வருவதாக கூறப்பட்டாலும், இறப்பு எண்ணிக்கை என்னவோ நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் செல்கிறது.
அந்தளவு அதன் ஆதிக்கத்தினை நிலை நாட்டியுள்ளது கொரோனா வைரஸ். ஒருபுறம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், மறுபுறம் பொருளாதாரத்திலும் பதம் பார்க்க தொடங்கியுள்ளது என்றே கூறலாம்.
இது இப்படி எனில் சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் மத்தியில் கொரோனா ஒரு பயத்தினை உண்டாக்கியுள்ளது என்றே கூறலாம். அது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இதன் தாக்கத்தினால் பொருளாதாரத்திலும் வீழ்ச்சி அதிகரிக்குமோ என்ற பயத்தையும் உருவாக்கியுள்ளது தான்.
சர்வதேச பொருளாதாரம் பாதிக்கப்படலாம்
இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாகவே தங்கத்தின் விலையானது தாறுமாறாக அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த கொடிய கொரோனா வைரஸ் என்று கூறப்பட்டது. சொல்லப்போனால் கொரொனாவால் நிலைகுலைந்து போயுள்ள சீனாவின் வர்த்தகம் முழுவதும் முடங்கி போயுள்ள நிலையில், அதன் தாக்கம் சர்வதேச பொருளாதாரத்திலும் எதிரொலிக்கலாம் என்ற எண்ணம் நிலவி வருகிறது.
கொரோனா + தேர்தல்
இதனால் தங்கத்தின் விலையானது ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் கண்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் நவம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் அமெரிக்க தேர்தலும் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இது தங்கம் விலை மேலும் தொடர்ந்து அதிகரிக்க வழிவகுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து ஆய்வு நிறுவனமான கோல்டுமேன் சாச்சஸ் தங்கத்தின் விலை சர்வதேச சனதையில் அவுன்ஸூக்கு 1,800 டாலர்கள் வரை செல்லலாம் என்றும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
பாதுக்காப்பு புகலிடம்
பொருளதாரம் வீழ்ச்சியடையும் போது முதலீட்டாளர்கள் பாதுக்காப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் தான் கொரோனா வெடிப்பின் ஆரம்பத்திலிருந்து தங்கம் விலை ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் உலகளாவிய பொருளாதாரத்தில் நிலவி வரும் அச்சுறுத்தல், அதிகரித்து வரும் கொரோனா வழக்குகள், அமெரிக்காவின் தேர்தல் உள்ளிட்ட பல தங்கத்திற்கு ஆதரவாக நிற்கலாம் என்றும் கோல்டுமேன் சாச்சஸ் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
இது தான் எதிர்பார்பு
மேலும் அடுத்த மூன்று மாதத்திற்குள் அவுன்ஸூக்கு 1.700 வரை செல்லலாம் என்ற நிலையில், அடுத்த ஆறு மாதத்திற்குள் 1,750 டாலரை தொடலாம் என்றும் கோல்டுமேன் சாச்சஸ் கணித்துள்ளது. இதே போல வெள்ளியின் விலையும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 1800 டாலர் சரி, தற்போது தங்கம் விலை எவ்வளவு? தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலை அவுன்ஸூக்கு 9.25 டாலர்கள் அதிகரித்து 1,652.45 (10.15 மணியளவில்) டாலராக வர்த்தகமாகி வருகிறது.
தற்போது விலை எவ்வளவு
சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் கடந்த சில இரண்டு நாட்களுக்கு முன்பு தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தினை கண்டுள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக சற்று இறக்கம் காண்டாலும், தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. தற்போது இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் விலை 231 ரூபாய் அதிகரித்து 42,735 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
Recommended Video
ஆபரணம் விலை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கடந்த இரண்டு தினங்களாக சற்று இறக்கம் கண்டிருந்தாலும், மீண்டும் தற்போது ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. அதிலும் இன்று பெரிய அளவில் ஏற்றம் இல்லாவிட்டாலும் குறையவில்லை. ஒரு கிராம் (22 கேரட்) ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 4,062 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 32,496 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
போகிற போக்கை பார்த்தால் சவரன் 50,000 ரூபாயை அசால்ட்டாக தொட்டுவும் போலிருக்கிறதே. சாமானிய மக்களும் தங்கம் என்பது ஒரு கனவாகவே போய்விடும் போல் இருக்கிறது.


Click it and Unblock the Notifications