சாமனியர்களுக்கு நல்ல வாய்ப்பு.. மீண்டும் சரிவில் தங்கம் விலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே தொடர்ந்து மீண்டும் சரிவினைக் காண ஆரம்பித்துள்ளது. இது தங்க முதலீட்டாளர்கள், ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது குறைந்து வருகிறது. அதிலும் இந்திய சந்தையில் தங்கம் விலையானது ஒரு வருட குறைந்த விலையினை எட்டியுள்ளது.

திங்கட்கிழமையன்று ஹோலி காரணமாக சந்தை விடுமுறை என்பதால், தங்கம் விலையில் இன்று இன்னும் அழுத்தம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.12,500 சரிவில் தங்கம் விலை

ரூ.12,500 சரிவில் தங்கம் விலை

அதோடு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது, 12,500 ரூபாய் சரிவில் தான் காணப்படுகிறது. இதே இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பார்க்கும்போது 6,000 ரூபாய் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக தங்கத்தினை நீண்டகால நோக்கில் வாங்க இது நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. அடுத்த வாரத்தில் ஏப்ரல் காண்டிராக்ட் எக்ஸ்பெய்ரி என்பதால், நீண்டகால நோக்கில் வாங்குபவர்கள் ஜூன் காண்டிராக்டில் வாங்கலாம்

இன்று இதெல்லாம் பார்க்கபோகிறோம்?

இன்று இதெல்லாம் பார்க்கபோகிறோம்?

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? இரு சந்தைகளிலும் வெள்ளி விலை எவ்வளவு? தங்கத்திற்கு சாதகமான, பாதகமான காரணிகள் என்னென்ன? நீண்டகால நோக்கில் இனி தங்கம் விலை எப்படி இருக்கும்? வரும் வாரத்தில் எப்படி இருக்கும்? இன்று எப்படி இருக்கும்? வாங்கலாமா? விற்கலாமா? என பலவற்றையும் தற்போது பார்க்கவிருக்கிறோம்.

comex தங்கம் விலை நிலவரம்

comex தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலையானது இரண்டாவது நாளாக இன்றும் சற்று சரிவில் காணப்படுகிறது. இது தற்போது அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 7.40 டாலர்கள் குறைந்து, 1707.20 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, சற்று மேலாக தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் குறைந்த விலையை உடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் வார கேண்டில் பேட்டர்னில் தங்கம் விலையானது முந்தைய வாரத்தின் குறைந்தபட்ச விலையை உடைத்து காட்டியுள்ளது.

comex வெள்ளி விலை நிலவரம்

comex வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 0.62% குறைந்து, 24.618 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக வெள்ளியின் விலையானது சற்று சரியும் விதமாகவே காணப்படுகிறது.

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது இன்று காலை தொடக்கத்தில் இருந்தே, சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று சரிவில் தான் காணப்படுகிறது. அதோடு ஏப்ரல் காண்டிராக்ட் எக்ஸ்பெய்ரி என்பதால் ஜூன் காண்டிராக்ட் விலையானது அழுத்தத்தில் காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 151 ரூபாய் குறைந்து, 44,547 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் தொடக்க விலையானது நேற்றைய முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலை சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

MCX வெள்ளி விலை நிலவரம்

MCX வெள்ளி விலை நிலவரம்

இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 287 ரூபாய் குறைந்து, 63,887 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கிழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக இன்னும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

தங்கம் ஆபரண விலை

தங்கம் ஆபரண விலை

சென்னையில் இன்று தங்கம் ஆபரணத்தின் விலையானது சற்று குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு 32 ரூபாய் குறைந்து, 4,192 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து 33,536 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு தினங்களாகவே சற்று சரிந்து வருவது சாமனியர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடந்த ஜனவரி 1 அன்று சவரனுக்கு 37,808 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 33,536 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மூன்று மாதத்தில் தங்கம் விலையானது சவரனுக்கு 4,200 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய ( 24 கேரட்) தங்கத்தின் விலையினை பொறுத்தவரையில், இன்று கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 4,573 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து 36,584 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதுவும் கடந்த 2 தினங்களாக சற்று சரிவினை கண்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே கிராம் வெள்ளியின் விலையானது 0.80 பைசா குறைந்து, 68.50 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கிலோவுக்கு இன்று 800 ரூபாய் குறைந்து 68,500 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையும் கடந்த சில தினங்களாகவே பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது.

அதிகரிக்கும் பத்திர லாபம்

அதிகரிக்கும் பத்திர லாபம்

அமெரிக்காவின் பத்திர லாபமும் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ந்து வலுவடைந்து காணப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலையானது சற்று அழுத்தத்தில் காணப்படுகிறது. ஏனெனில் தொடர்ந்து அதிகரிக்கும் பத்திர லாபமானது, வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்குகிறது. இதன் காரணமாக முதலீடுகள் குறையும்போது, தங்கம் விலையானது அழுத்தத்தினை காண ஆரம்பித்துள்ளது.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

அமெரிக்க டாலரின் மதிப்பானது 0.18% அதிகரித்து 92.938 டாலர்களாக அதிகரித்துள்ளது. ஆக இது மற்ற நாணயதாரர்களுக்கு தங்கத்தின் விலையை அதிகமாக மாற்றியுள்ளது. ஆக இது தங்கத்தில் முதலீடுகளை குறைக்கலாம். இதனால் தங்கத்தின் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். மற்ற நாணயதாரர்கள் தங்கம் வாங்குவது குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தகர்களின் கவனம்

வர்த்தகர்களின் கவனம்

தங்க வர்த்தகர்கள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்கட்டமைப்பு துறை சம்பந்தமான ஊக்கத்தொகைகளை, உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். குறிப்பாக சாலைகள், பாலங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகளை கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூயஸ் கால்வாய் மீண்டும்

சூயஸ் கால்வாய் மீண்டும்

சூயஸ் கால்வாயில் தரைதட்டிய ராட்சத கப்பலினால் கடந்த சில தினங்களாகவே, திரவ தங்கத்தின் விலையானது ஏற்றம் கண்டு வந்தது. இந்த நிலையில் தரைதட்டிய எவர் கீரின் கப்பல் மீட்கப்பட்டுள்ளது. ஆக விரைவில் சூயஸ் கால்வாய் மீண்டும் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சர்வதேச வர்த்தகத்தினை மீண்டும் எளிதாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஐரோப்பிய பங்கு சந்தைகள் பெரும்பாலும் ஏற்றத்தில் காணப்பட்டன.

வளர்ச்சி பாதையில் பொருளாதாரம்

வளர்ச்சி பாதையில் பொருளாதாரம்

தற்போது உலகளவில் இரண்டாம் கட்ட கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசிகளும் மும்முரமாக பல நாடுகளிலும் செலுத்தப்பட்டு வருகின்றன. அதோடு பொருளாதார வளர்ச்சி குறித்தான கணிப்புகளும் சாதகமான வந்து கொண்டுள்ளன. அமெரிக்காவில் பொருளாதார வளர்ச்சி குறித்தான கணிப்புகளை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ஆக இதுவும் தங்கம் விலையில் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. கேண்டில் பேட்டர்னும் சற்று சரியும் விதமாகவே காணப்படுகிறது. அதோடு வரலாற்று உச்சத்தில் இருந்து தங்கம் விலையானது, பலத்த சரிவில் காணப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் வாங்குபவர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

great chances to buy gold, gold become so cheap in past 2 days

Gold price update.. great chances to buy gold, gold become so cheap in past 2 days
Story first published: Tuesday, March 30, 2021, 11:48 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X