பொதுவாக நாம் எவ்வளவு சம்பாதித்தாலும், அதில் இருந்து நமது சக்தி தகுந்த அளவுக்கு பணத்தை கொஞ்சமாவது நல்ல பணிகளுக்கு செலவிட வேண்டும் அல்லது நன்கொடையாக கொடுக்க வேண்டும். நம் நாட்டின் பெரிய கோடீஸ்வரர்கள் தங்களது வருமானத்தில் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்கி வருகின்றனர்.
கடந்த நிதியாண்டில் நம் நாட்டில் அதிகம் நன்கொடை வழங்கிய டாப் 10 நன்கொடையாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. 2022-23ம் நிதியாண்டுக்கான ஹூருன் இந்தியாவின் டாப் 10 நன்கொடையாளர்கள் பட்டியலில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவருமான ஷிவ் நாடார் முதல் இடத்தில் உள்ளார்.

இந்தியாவின் டாப் 10 நன்கொடையாளர்கள்
1. சிவ் நாடார்: தொடர்ந்து 2வது ஆண்டாக இந்த பட்டியலில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவருமான ஷிவ் நாடார் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் கடந்த நிதியாண்டில் ரூ.2,042 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் 3 முறை இந்த பட்டியலில் ஷிவ் நாடார் முதலிடத்தை பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2.அசிம் பிரேம்ஜி: நாட்டின் முன்னணி ஐ.டி. நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவின் நிறுவனர் அசிம் பிரேம்ஜி டாப் 10 நன்கொடையாளர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். கல்வி சார்ந்த விஷயங்களுக்கு அசிம் பிரேம்ஜி அதிக நன்கொடை அளித்துள்ளார். கடந்த நிதியாண்டில் ரூ.1,774 கோடி நன்கொடை வழங்கினார்.
3.முகேஷ் அம்பானி: இந்தியாவின் மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளவரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானி, இந்தியாவின் டாப் 10 நன்கொடையாளர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். முகேஷ் அம்பானி கடந்த நிதியாண்டில் ரூ.376 கோடி நன்கொடை அளித்தார்.
4.குமார் மங்கலம் பிர்லா: டாப் 10 நன்கொடையாளர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் ஆதித்யா குழுமத்தின் தலைவரும் பிரபல தொழிலதிபருமான குமார் மங்கலம் பிர்லா உள்ளார். இவர் கடந்த 2022-23ம் நிதியாண்டில் ரூ.287 கோடி நன்கொடை கொடுத்தார்.
5.கவுதம் அதானி: நன்கொடையாளர்கள் பட்டியலில் பிரதமர் மோடியின் நண்பரும், அதானி குழும தலைவருமான கவுதம் அதானி இரண்டு இடங்கள் முன்னேறி 5வது இடத்தை பிடித்தார். இவர் கடந்த நிதியாண்டில் ரூ.285 கோடி நன்கொடை அளித்துள்ளார். 2021-22ம் நிதியாண்டில் டாப் 10 நன்கொடையாளர்கள் பட்டியலில் கவுதம் அதானி 7வது இடத்தில் இருந்தார்.
6.பஜாஜ் குடும்பம்: நாட்டின் பிரபலமான வர்ததக குடும்பங்களில் ஒன்றான பஜாஜ் குடும்பம் கடந்த நிதியாண்டில் ரூ.264 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. நன்கொடையாளர்கள் பட்டியலில் பஜாஜ் குடும்பம் 11 இடங்கள் முன்னேறி 6வது இடத்தை பிடித்துள்ளது. பஜாஜ் குடும்பம் நன்கொடையில் பெரும் பகுதியை கல்வி துறையில் செலவிட்டுள்ளது.
7.அனில் அகர்வால்: வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் மற்றும அவரது குடும்பம் மொத்தம் ரூ.241 கோடியை செலவிட்டுள்ளது. நன்கொடையாளர்கள் பட்டியலில் அனில் அகர்வால் மற்றும் அவரது குடும்பம் 7வது இடத்தை பிடித்துள்ளது. அனில் அகர்வால் குடும்பம் சுகாதாராத் துறையில் தொண்டு பணிகளுக்காக நன்கொடையை செய்துள்ளது.
8. நந்தன் நீல்கேனி: இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நந்தன் நீல்கேனி ரூ.189 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். நன்கொடையாளர்கள் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளார்.
9.சைரஸ், ஆதார் பூனாவாலா: செரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் சைரஸ் மற்றும் ஆதார் பூனாவாலா ஆகியோர் சுகாதார பணிகளுக்காக ரூ.179 கோடி நன்கொடை வழங்கியுள்ளனர். நன்கொடையாளர் பட்டியலில் 4 இடங்கள் முன்னேறி 9வது இடத்தை பிடித்துள்ளனர். 2021-22ம் நிதியாண்டுக்கான டாப் 10 நன்கொடையாளர்கள் பட்டியலில் அவர்கள் 13வது இடத்தில் இருந்தனர்.
10.ரோகிணி நீல்கேனி: இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நீல்கேனியின் மனைவியான ரோகிணி நீல்கேனி கடந்த நிதியாண்டில் ரூ.170 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். டாப் 10 நன்கொடையாளர்கள் பட்டியலில் இடம் பெற்ற ஒரே பெண்மணி ரோகிணி நீல்கேனி என்பது குறிப்பிடத்தக்கது.
டாப் பெண் நன்கொடையாளர்கள்: கடந்த நிதியாண்டில் அதிகம் நன்கொடை கொடுத்த பெண்கள் பட்டியலில் 64 வயதான ரோகிணி நீல்கேனி முதல் இடத்தில் உள்ளார். அதற்கு அடுத்தப்படியாக தெர்மாக்ஸ் நிறுவனத்துக்கு தலைமை தாங்கிய அனு ஆகா மற்றும் குடும்பம் ரூ.23 கோடி நன்கொடை அளித்துள்ளது. மருந்து துறையை சேர்ந்த யு.எஸ்.வி. நிறுவனத்தின் தலைவி லீனா காந்தி திவாரியும் கடந்த ஆண்டு ரூ.23 கோடி வாரி வழங்கினார்.
இளம் நன்கொடையாளர்: Zerodha இணை நிறுவனர்களான நிதின் மற்றும் நிகில் காமத் ஆகியோர் தொண்டு பணிகளுக்கான ரூ.110 கோடி நன்கொடை அளித்துள்ளனர். 2023ம் ஆண்டுக்கான ஹூருனின் டாப் நன்கொடையாளர்கள் பட்டியலில் 12வது இடத்தில உள்ளனர். அதேசமயம் இந்த பட்டியலில் இடம் பெற்றும் மிக இள வயது நன்கொடையாளர் என்ற பெருமையை நிகில் காமத் பெற்றார்.
உலகின் முன்னணி பணக்காரர்களான பில்கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் ஆகியோரால் நிறுவப்பட்ட தி கிவிங் ப்லெட்ஜ் என்ற அமைப்பில் அசிம் பிரேம்ஜி, கிரண் மஜூம்தார், ரோகிணி-நந்தன் நீல்கேனி ஆகியோருக்கு பிறகு உறுதிமொழி எடுத்த இந்தியர் நிகில் காமத் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறக்கட்டளையின் உறுப்பினர்கள் தங்களது செல்வத்தில் பெரும்பகுதியை நன்கொடை பணிகளில் செலவிட வேண்டும்.
2022-23ம் நிதியாண்டில் ரூ.100 கோடிக்கு மேல் நன்கொடை அளித்த நன்கொடையாளர்களின் எண்ணிக்கை 2ல் இருந்து 14ஆக உயர்ந்துள்ளது. மேலும் ரூ.50 கோடிக்கு மேல் நன்கொடை அளிப்பவர்களின் எண்ணிக்கை 5ல் இருந்து 24 ஆக அதிகரித்துள்ளது என்று ஹூருன் இந்தியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications