பலத்த சரிவில் தங்கம் விலை.. தங்கத்தை அள்ள இது சரியான நேரமா? இன்னும் குறையுமா? நிலவரம் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய மக்களின் கலாச்சாரத்தோடு கலந்துள்ள தங்கம், நமது வாழ்வின் அனைத்து சுப காரியங்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதனால் தங்கத்தின் தேவையானது இந்த கொரோனா காலகட்டத்தில் சற்று குறைந்தாலும், மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.

தங்கத்தின் மீது உள்ள ஈர்ப்பால், மக்கள் கொரோனா காலத்தில் கடைகளுக்கு சென்று வாங்க முடியாத பட்சத்தில் ஆன்லைனில் வாங்கினர். அந்தளவுக்கு நம்மவர்களுக்கு தங்கத்தின் மீது மோகம் உண்டு.

தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு

தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு


அப்படியானவர்களுக்கு கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, தங்கம் விலையானது தொடர்ச்சியாக சரிந்து வருகிறது. ஆக இது தங்கம் வாங்குபவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் ஆபரணத் தங்கத்தின் விலையானது தொடர்ச்சியாக குறைந்து நிலையில், இது நகை வாங்க நல்ல நேரமாகவும் உள்ளது.

என்னென்ன பார்க்கபோகிறோம்?

என்னென்ன பார்க்கபோகிறோம்?


அதெல்லாம் சரி, கடந்த வாரத்தில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? எவ்வளவு குறைந்திருக்கு, அல்லது விலை கூடிருக்கா? தங்கத்திற்கு சாதக பாதகமான காரணிகள் என்னென்ன? இனி நீண்டகால நோக்கில் இன்னும் தங்கம் விலை எப்படி இருக்கும்? வரும் வாரத்தில் எப்படி இருக்கும்? உள்ளிட்ட பலவற்றையும் இன்று பார்க்கவிருக்கிறோம்.

தங்கம் விலை பலத்த சரிவு

தங்கம் விலை பலத்த சரிவு

சர்வதேச சந்தையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கம் விலையானது வீழ்ச்சி கண்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அவுன்ஸூக்கு தங்கம் விலையானது உச்சத்தில் இருந்து 105 டாலர்கள் குறைந்துள்ளது. இதே கடந்த திங்கட்கிழமையன்று முடிவு விலையில் இருந்து, வெள்ளி கிழமை முடிவு விலையுடன் ஒப்பிட்டு பார்த்தால் 86.5 டாலர்கள் குறைந்துள்ளது.

முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு

முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு

கடந்த திங்கட்கிழமையன்று 1869.50 டாலர்களாக தொடங்கிய தங்கம் விலை, அதிகபட்சமாக அன்று 1875 டாலர்கள் வரை சென்றது. இதே கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவு விலை 1783.10 டாலர்களாக முடிவுற்ற நிலையில், குறைந்தபட்சமாக 1770 டாலர்கள் வரை சென்று திரும்பியுள்ளது. உண்மையில் இது முதலீட்டாளர்களுக்கு குறைந்த விலையில் வாங்க நல்லா வாய்ப்பு தான். இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அவுன்ஸுக்கு 2089.20 டாலர்கள் வரை சென்றது.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையினை போலவே வெள்ளியின் விலையும் கடந்த வாரத்தில் பலத்த சரிவினைக் கண்டுள்ளது. தொடர்ச்சியாக கடந்த 10 வர்த்தக அமர்வுகளாகவே வெள்ளி விலையானது சற்று சரிந்து கொண்டே தான் வருகின்றது. கடந்த திங்கட்கிழமையன்று வெள்ளி விலை தொடக்கத்தில் 24.225 டாலர்களாக தொடங்கிய நிலையில், அதிகபட்சமாக 24.455 டாலர்களாக அதிகரித்தது. இதே கடந்த வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 22.325 டாலர்கள் வரை சென்ற நிலையில், முடிவில் 22.680 டாலர்களாகவும் முடிவுற்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை, கடந்த வாரத்தில் பலத்த வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று தங்கம் விலை தொடக்கத்தில் 10 கிராமுக்கு 50,234 ரூபாயாக தொடங்கிய நிலையில், அதிகபட்சமாக 50,350 ரூபாயாக அதிகரித்தது. இதே கடந்த வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 47,800 ரூபாய் வரை சென்ற நிலையில், முடிவில் 48,125 ரூபாயாக முடிவுற்றது. இது ஒரு வாரத்தில் 10 கிராம் தங்கத்தின் விலையானது 2,550 ரூபாய் உச்சத்தில் இருந்து குறைந்துள்ளது. இதுவே கடந்த ஆகஸ்ட் மாத உச்சமான 56,200 ரூபாயில் இருந்து பார்க்கும் போது, 8,400 ரூபாய் சரிந்துள்ளது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் கடந்த வாரத்தில் பலத்த வீழ்ச்சியில் தான் காணப்படுகிறது. எம்சிஎக்ஸ் வெள்ளியின் விலை கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக சரிந்து வந்த நிலையில், கிலோவுக்கு 4,423 ரூபாய் ஒரே வாரத்தில் குறைந்துள்ளது.

இது கடந்த வாரம் திங்கட்கிழமையன்று 62,119 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்று அதிகபட்சமாக 62,300 ரூபாய் வரையில் சென்றுள்ளது. இதே கடந்த வெள்ளிக்கிழமையன்று குறைந்த பட்சமாக 57,877 ரூபாய் வரையிலும், அன்று முடிவு விலையானது கிலோவுக்கு 558,984 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 19,823 ரூபாய் குறைந்துள்ளது.

 

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 38,016 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று 36,592 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆக ஒரே வாரத்தில் சவரனுக்கு 1424 ரூபாய் குறைந்துள்ளது. இதே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 7000 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. ஆக இது முதலீட்டாளர்களுக்கு தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் கடந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிவினைக் கண்டு வருகின்றது. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 51,840 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 49,910 ரூபாயாகும். நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 1930 ரூபாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 64.70 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 647 ரூபாயாகவும், கிலோவுக்கு 64,700 ரூபாயாகவும் உள்ளது. வெள்ளியின் விலையும் தங்கத்தினை போலவே சரிவில் தான் காணப்படுகிறது. நடப்பு வார தொடக்கத்தில் 66,700 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 64,700 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் மட்டும் வெள்ளியின் விலை கிலோவுக்கு 2,000 ரூபாய் குறைந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள்

கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள்

தங்கம் விலையானது முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, நான்கு மாதங்களில் இல்லாத அளவு வீழ்ச்சி கண்டு வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்தியே. கொரோனா தடுப்பூசியின் முடிவுகள் சாதகமாக வந்து கொண்டுள்ள நிலையில், அது சர்வதேச அளவில் நிலவி நெருக்கடியான நிலையை மாற்றும் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.

பட்டையை கிளப்பும் பங்கு சந்தைகள்

பட்டையை கிளப்பும் பங்கு சந்தைகள்

பங்கு சந்தைகள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வரும் நிலையில், பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் விலை குறைந்து வருகின்றது. தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்துவிட்டால், பொருளாதாரம் விரைவில் மீண்டு வரும். இதன் காரணமாக சந்தைகள் ஏற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அன்னிய முதலீடுகள் பங்கு சந்தைகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளன. மேலும் முதலீட்டாளர்கள், தாங்கள் தங்கத்தில் செய்துள்ள முதலீடுகளையும் வெளியே எடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாகவும் தங்கம் விலை சரிந்து வருகின்றது.

தங்கம் Vs டாலர்

தங்கம் Vs டாலர்

தங்கத்தின் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பு, தடுப்பூசி பற்றிய சாதகமான விஷயத்தினால் சற்று வலுவாக காணப்படுகிறது. ஆகவும் இதுவும் தங்கம் விலை சரிய காரணமாக அமைந்துள்ளது. மேலும் அமெரிக்கா ஊக்கத் தொகை பற்றிய அறிவுப்புகள் விரைவில் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலை இன்னும் சரிய காரணமாக அமைந்துள்ளது.

இரண்டாம் கட்ட கொரோனா பரவல்

இரண்டாம் கட்ட கொரோனா பரவல்

ஒரு புறம் தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டு இருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சில பகுதிகளில் இரண்டாம் கட்ட கொரோனா பரவலானது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பூசியே செயல்பாட்டுக்கு வந்தாலும், அது அனைவருக்கும் கிடைக்க சில காலம் ஆகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது அதிக விலை சரிவினை தடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று முதலீட்டாளர்கள் கூறினாலும், மீடியம் டெர்மில் தங்கம் விலை சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஏனெனில் பல காரணிகளும் தங்கம் விலை குறைய ஏதுவான காரணிகளாகவே உள்ளன. ஆக நீண்டகால நோக்கில் வாங்குபவர்கள் மட்டும் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Heavy fall in gold price, is it right time buy?

Gold price update.. Heavy fall in gold price, is it right time buy?
Story first published: Sunday, November 29, 2020, 14:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X