ஓசூர் விமான நிலையம்: இடத்தை மாற்றும் தமிழக அரசு..!! மத்திய அரசின் அனுமதி கிடைக்குமா?

ஓசூர் நகரம் தொழில் ரீதியாக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஒரு நகரம். இங்கே ஆயிரக்கணக்கான சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களும் பெரிய பெரிய உற்பத்தி ஆலைகளும் செயல்படுகின்றன. இங்கே விமான நிலையம் அமைத்தால் பொருளாதார வளர்ச்சியும் முதலீடும் இன்னும் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகாவில் ஓசூர் விமான நிலையத்திற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் அனுமதி மறுத்தது. இந்நிலையில் புதிய இடத்தை தேர்வு செய்வது குறித்து தமிழக அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. தற்போது பரிசீலிக்கப்பட்டு வரும் புதிய இடம், ஓசூர் மைய பகுதியிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெலகொண்டப்பள்ளியில் தனேஜா ஏரோஸ்பேஸ் மற்றும் ஏவியேஷன் லிமிடெட் (TAAL - Taneja Aerospace and Aviation Limited) நிறுவனத்தின் தனியார் விமான ஓடுதளத்திற்கு அருகில் அமைந்துள்ளது என தி இந்து செய்தி கூறுகிறது. இது தொடர்பான விரிவான ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் அனுப்பி வைக்கப்படும்.

ஓசூர் விமான நிலையம்: இடத்தை மாற்றும் தமிழக அரசு..!! மத்திய அரசின் அனுமதி கிடைக்குமா?

சூளகிரி தாலுகாவில் பேரிகை மற்றும் பாகலூர் இடையே முதலில் அடையாளம் காணப்பட்ட இடத்தில் வான்வெளி கட்டுப்பாடுகளை சுட்டிக்காட்டி மத்திய அரசு அனுமதி மறுத்தது. இதனால் தமிழக அரசு மாற்று இடத்தை கண்டறிந்துள்ளது. இதற்கு அரசின் அனுமதி கிடைத்தால் ஓசூரில் வளர்ச்சி பிரம்மிக்க தக்க வகையில் மாறும்.

Also Read

ஆனால் அது அத்தனை எளிதான ஒரு விஷயமல்ல. ஏனெனில் அண்மையில் தான் அரசு குப்பம் விமான நிலையத்திற்கு தள அனுமதி கொடுத்தது. இது ஓசுருக்கு அருகிலேயே இருப்பதால் குப்பம் விமான நிலையத்தை சுட்டிக்காட்டி ஓசூர் திட்டத்துக்கு அனுமதி கிடைக்காமல் போகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சூழலில், தனேஜா ஏரோஸ்பேஸ் ஓடுதளத்திற்கு அருகில் உள்ள இடத்தை எவ்வாறு விரிவுபடுத்தி, ஓசூருக்கான விமான நிலையத்தை உருவாக்குவது என்பது குறித்து ஆய்வு செய்ய பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனத்தை தமிழக அரசு ஏற்கனவே ஈடுபடுத்தியிருந்தது.

Recommended For You

கடந்த சில வாரங்களாக இந்த நிறுவனம் அங்கு விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு அந்த ஆய்வு அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், திட்டத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்வது குறித்தும், அதனை தொடர்ந்து இட அனுமதி பெறுவது குறித்தும் அரசு மட்டத்தில் அடுத்தகட்ட ஆலோசனைகள் நடைபெற உள்ளன என தி இந்து செய்தி கூறுகிறது.

முதலாவதாக, சூளகிரி இடத்திற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்திடம் இருந்து ஒப்புதல் பெற தமிழக அரசு ஏற்கனவே இரண்டு முறை முயற்சி செய்தது; ஆனால் அது நடக்கவில்லை. குப்பம் விமான நிலையமும் அதே வான்வெளி பகுதிக்காக போட்டியிட்டதால், தற்போது புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கபடுகிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+