தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் அளவீட்டை அடைய வேண்டும் என்ற இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசுக்கு, புதிய முதலீடுகளையும், அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்கட்டமைப்பு சேவைகளை மேம்படுத்துவது மிகவும் அவசியமாக உள்ளது. இவை இரண்டும் பூர்த்தி செய்யும் இடமாக ஓசூர் விளங்கும் காரணத்தால் பிரம்மாண்ட சர்வதேச விமான நிலையத்தை அமைக்கும் திட்டத்தை முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழ்நாடு அரசு ஓசூர் விமான நிலையத்தை அமைக்க 5 இடத்தை தேர்வு செய்த நிலையில், சமீபத்தில் இந்திய விமான போக்குவரத்து ஆணையம் (AAI) 2 இடங்களை தேர்வு செய்தது. 1. TAAL ஏரோட்ரோம், 2. ஓசூர் விமான நிலையத்திற்கு தெற்கே 2 கி.மீ தொலைவில், பெலகொண்டபள்ளி.

இவை இரண்டும் அருகருக்கே அமைந்திருக்கும் காரணத்தால் புதிய விமான நிலையம் அமையவுள்ள இடத்தை சுற்றி சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை கையகப்படுத்தும் பணிகளின் முதல் கட்டமாக, எந்த இடத்தில் எவ்வளவு நிலம் கையகப்படுத்தப்படும் என்பது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதன் வரைப்படம் தான் தற்போது வெளியாகியுள்ளது. இந்த நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கிவிட்டதா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரையில் வெளியாகவில்லை.
இந்த வகையில் இந்த புதிய விமான நிலையம் அமையவுள்ள இடம் தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் தாலுகாக்களில் பரவியுள்ளது. இதில் பெலகொண்டபள்ளி, கலுகொண்டபள்ளி, ஹோசபுரம், கோபனபள்ளி, முத்துகனபள்ளி, முகலூர், அச்செட்டிபள்ளி ஆகிய கிராமங்கள் இதில் அடங்கும்.
இந்த புதிய விமான நிலையம் அமையவுள்ள இடம், பெங்களூருவின் எலக்ட்ரானிக் சிட்டி-யில் இருந்து வெறும் ஒரு மணி நேர தூரத்தில் அமைந்துள்ளது. இதனால், பெங்களூர் தொழில்நுட்பத் துறைக்கும், பெங்களூர் மக்களுக்கும் இது மிகவும் வசதியாக இருக்கும்.
பெங்களூரில் அதிகரித்து வரும் விமானப் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து, மோசமாக டிராபிக் ஆகியவற்றின் காரணமாக, புதிய விமான நிலையம் அமைப்பது அவசியமாகிறது. இந்த புதிய விமான நிலையம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், உலகளாவிய இணைப்பிற்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.
| எண் | கிராமத்தின் பெயர் | தாலுகா பெயர் | ஏக்கர் அளவு |
| 1 | பெலகொண்டபள்ளி | தேன்கனிக்கோட்டை | 58.00 |
| 2 | கலுகொண்டபள்ளி | தேன்கனிக்கோட்டை | 312.00 |
| 3 | ஹோசபுரம் | தேன்கனிக்கோட்டை | 19.00 |
| 4 | கோபனபள்ளி | ஓசூர் | 447.00 |
| 5 | முத்து கனபள்ளி | ஓசூர் | 1170.00 |
| 6 | முகலூர் | ஓசூர் | 107.00 |
| 7 | அச்செட்டிபள்ளி | ஓசூர் | 5.00 |
| மொத்தம் | 2118.00 |


Click it and Unblock the Notifications