வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தை வைத்து வட்டி வருமானம்!! Gold Monetization scheme என்றால் என்ன?

அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளிடம் இருக்கக்கூடிய தங்கத்தை விட அதிகமான தங்கம் நம் இந்திய குடும்பங்கள் வசம் மறைந்து கிடக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பாரம்பரியமாக தங்கத்தை வாங்கி பராமரித்து வரும் பழக்கம் கொண்டவர்கள். தலைமுறை தலைமுறையாக நம் குடும்பங்கள் வசம் இருக்கக்கூடிய தங்கம் கைமாறி கொண்டே வருகிறது.

இந்திய குடும்பங்களில் மிக முக்கியமான ஒரு சொத்தாக தங்கம் தொடர்ந்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்திய குடும்பங்களிடம் சுமார் 20,000 டன்கள் தங்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இவ்வளவு தங்கம் இருந்தாலும் நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறதா என்றால் இல்லை. நம் வீட்டில் இருக்கிறது ஒரு விசேஷம் என்றால் அந்த தங்கத்தை நாம் அணிந்து கொள்வோம், ஒரு அவசர தேவை என்றால் தங்கத்தை அடகு வைத்து கடன் வாங்குவோம். அதை தாண்டி வீட்டில் இருக்கக்கூடிய இந்த தங்கத்தை நாட்டின் முன்னேற்றத்திற்கு நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என பலரும் கூறுகின்றனர்.

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தை வைத்து வட்டி வருமானம்!! Gold Monetization scheme என்றால் என்ன?

இந்திய ரிசர்வ் வங்கி இதற்காகவே Gold Monetization scheme என்ற திட்டத்தை கொண்டு வந்தது. தங்கத்தை பணமாக்கும் திட்டம் பல ஆண்டுகளாகவே நடைமுறையில் இருக்கிறது. நம் வீட்டில் இருக்கும் தங்கத்தை இந்த திட்டத்தின் கீழ் நாம் செலுத்தி வட்டி வருமானம் பெறலாம். முதலில் நம் கைவசம் இருக்கக்கூடிய தங்க நாணயம் , தங்க கட்டி அல்லது தங்க நகைகளை வங்கிகளிடம் சென்று செலுத்த வேண்டும்.

வங்கி சார்பாக நமக்கு தங்கத்தின் தூய்மை தன்மையை பரிசோதனை சென்று சான்றுவழங்கப்படும். இதனை அடுத்து நம் பெயரில் கோல்டு அக்கவுண்ட் தொடங்கப்படும் அதில் நம் பெயரில் கிராம் அடிப்படையில் தங்கம் டெபாசிட் செய்யப்படும். நாம் வரவு தங்கத்தின் நிகரான மதிப்பிற்கு நமக்கு இந்த திட்டத்தில் நமக்கு 2.5% வரை வட்டி கிடைக்கும்.

Also Read

இதில் எத்தனை ஆண்டுகள் தங்கத்தை இப்படி நாம் டெபாசிட் செய்யலாம் என்பதை நாமே தீர்மானித்துக் கொள்ள முடியும். 1 முதல் 3 ஆண்டுகள் வரை டெபாசிட் செய்யலாம். நம்முடைய டெபாசிட் காலத்தை பொறுத்து வட்டி தொகை தீர்மானிக்கப்படுகிறது. உதாரணமாக நீங்கள் 22 கேரட் தங்கம் 100 கிராம் டெபாசிட் செய்திருந்தால் உங்களுடைய கோல்ட் அக்கவுண்டில் அதற்கு நிகரான 99.5% தூய்மை தன்மை கொண்ட தங்கத்தை வங்கிகள் டெபாசிட் செய்யும்.

இந்த திட்டத்திற்கு நாம் முன்கூட்டியே கூறியது போல டெபாசிட் காலத்தை கொடுத்து வட்டி என்பது மாறுபடுகிறது. தங்கத்தை நீங்கள் எந்த வடிவில் டெபாசிட் செய்தீர்களோ அப்படி பெற முடியாது, அதற்கு மாற்றாக அன்றைய தினத்தில் தங்கம் விலைக்கு நிகரான பணத்தை பெற்றுக்கொள்ளலா. இல்லை என்றால் தங்க கட்டிகளாக பெற்றுக்கொள்ள முடியும். இதில் இருக்கக்கூடிய வசதியே ஒரு நபர் குறைந்த பட்சம் 10 கிராம் தங்கத்தை டெபாசிட் செய்யலாம். அதிகபட்சமாக எவ்வளவு தங்கத்தை வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம்.

Recommended For You

உங்களுக்கு முதிர்வு காலத்தில் நீங்கள் கொடுத்த தங்க நகை கிடைக்காது. தங்க கட்டி, தங்க நாணயமாக கிடைக்கும் அல்லது அந்த சமயத்தில் அந்த தங்கத்துக்கு நிகராக நிகரான பணத்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் மக்களிடம் இது பெரும்பான்மையான வரவேற்பை பெறவில்லை. ஏனெனில் பாரம்பரியமாக வந்த தங்கத்திற்கு கணக்கு காட்ட முடியாது, பெரிய அளவில் வட்டி வருமானம் கிடையாது என பல சிக்கல்கள் உள்ளன.

தற்போது தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்தது, சர்வதேச சந்தையில் ஏற்பட்டிருக்க கூடிய மாற்றங்கள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி இந்த திட்டத்தை மாற்றியமைப்பதற்காக ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. எளிமையாக மக்களிடம் இந்த திட்டத்தை சேர்த்து வீடுகளில் இருக்கும் தங்கத்தை நாட்டின் வளர்ச்சிக்காக கொண்டு வரும் வகையில் அனைத்து இந்திய நவரத்தினம் மற்றும் நகைகளுக்கான கவுன்சில் , இந்திய ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகத்திடம் இந்த திட்டத்தை மறுகட்டமைப்பு செய்ய கோரியுள்ளது.

அதாவது தாங்கம் வழங்கும் தங்கத்தை அப்படியே திரும்ப பெறுவது, வருமான வரி சிக்கல்களில் இருய்ந்து தீர்வு, அதிக வட்டி ஆகியவற்றை அளித்தால் ஏராளமான மக்கள் இதில் இணைந்து தங்கத்தை டெபாசிட் செய்வார்கள் என தெரிவித்துள்ளது. எனவே விரைவில் இந்த மாற்றங்களுடன் தங்க பணமாக்கல் திட்டம் மாற்றி அமைக்கப்படும் என சொல்லப்படுகிறது. இ-கோல்டு யூனிட்ஸ் என்ற முறையில் தங்கம் டெபாசிட் பெறும் வகையில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+